• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

இந்து ஓபிசி இடஒதுக்கீட்டு விவகாரத்தில் பாஜக ஏன் கோர்ட்டுக்கு போகவில்லை? ஆ. ராசா சுளீர் கேள்வி

|

சென்னை; இந்துக்களாகிய இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு விவகாரத்தில் இந்து அமைப்புகளான பாஜக, ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார அமைப்புகள் ஏன் நீதிமன்றத்துக்கு செல்லவில்லை என்று திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் ஆ. ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

நியூஸ் 7 தொலைக்காட்சியின் வியூகம் நிகழ்ச்சியில் ஆ. ராசா அளித்த பதில்களில் கூறியதாவது:

நாட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் கந்த சஷ்டி கவசம் போன்றவை ஒரு திசைதிருப்பும் வேலை என்றுதான் கருதுகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல. ஆனால் எந்த மதத்திலே மூடநம்பிக்கை இருக்கிறதோ ஏற்றத்தாழ்வுகளை வலியுறுத்துகிற கொள்கைகள் இருக்கிறதோ அந்த கொள்கைகளை எதிர்க்கக் கூடிய கட்டாயத்தில் பெரியார் காலத்தில் இருந்து இந்த இயக்கம் நின்று கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை.. இந்தியாவில் அதிகபட்ச மழை எங்கு?.. மழையே பெய்யாத பகுதி எது?.. வெதர்மேன் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை.. இந்தியாவில் அதிகபட்ச மழை எங்கு?.. மழையே பெய்யாத பகுதி எது?.. வெதர்மேன்

பிரச்சனைகளை திசை திருப்புதல்

பிரச்சனைகளை திசை திருப்புதல்

ஆனால் இப்போதைய சூழ்நிலையில் அதாவது கந்த சஷ்டி கவசத்தை யாரோ 2 பேர் விமர்சித்தார்கள் என்பதற்காக ஒட்டுமொத்தமாக நாட்டில் எந்த பிரச்சனையுமே இல்லை; இங்கே வேலைவாய்ப்பின்மை பிரச்சனை, பொருளாதார பிரச்சனை, கொரோனா பிரச்சனை ஆகியவற்றில் இருந்து மத்திய மாநில அரசுகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஒரு சதி நடக்கிறதோ என்று எண்ணுகிற அளவுக்கு சிறிய சிறிய பிரச்சனைகளை எல்லாம் திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். பெரியார் சிலைக்கு சாயம் பூசுவதால் அவரை மறைத்துவிட முடியாது. பெரியார் வாழ்ந்து கொண்டிருப்பது சிலைகளில் அல்ல. பெரியார் கொள்கைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சிந்தனைகளில் வாழ்ந்து கொன்டிருக்கிறார்.

எதுவரை பெரியார் தேவை?

எதுவரை பெரியார் தேவை?

எதுவரைக்கும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறதோ பெண்ணடிமை இருக்கிறதோ, வர்க்க வருண முரண்பாடுகள் இருக்கிறதோ அதுவரைக்கும் பெரியார் தேவைப்படுவார். இருக்கிற பிரச்சனையை திசை திருப்பவே கந்த சஷ்டி பிரச்சனை, பெரியார் சிலை மீது காவி பூசுவது போன்றவை நடைபெறுகின்றன. பெரியாருக்கும் காவிக்கும் என்ன சம்பந்தம் என்பது எங்களுக்கு தெரியும். அண்ணாவுக்கும் காவிக்கும் என்ன பிரச்சனை என்பதும் தெரியும். தெரிந்திருந்தும் மக்களை பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பி அரசியல் செய்கின்றனர்.

பெரியார் தத்துவ அடையாளம்

பெரியார் தத்துவ அடையாளம்

கந்த சஷ்டி கவசத்துக்கு ஒரு தனிமனிதர் எதிர்வினையாற்றுகிறார். அதற்கு எங்களது அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி பதில் சொல்கிறார். ஆனால் பெரியார் எங்களது தத்துவத்தின் முழு அடையாளம். அந்த முழு அடையாளத்தை சிதைக்கும் போது எங்களது தலைவர்தான் பதில் சொல்வார். ஆர்.எஸ். பாரதி குரலை திமுகவின் குரலாக ஏன் எடுப்பது இல்லை? இது ஒரு விதண்டாவாதம்.

இதெல்லாம் எங்களை புண்படுத்தவில்லையா?

இதெல்லாம் எங்களை புண்படுத்தவில்லையா?

பெரியாரும் கந்த சஷ்டி கவசமும் ஒன்றா? பெரியாரும் கந்த சஷ்டியும் ஒன்று அல்ல என நாங்கள் பகிரங்கமாக சொல்கிறோம். என்ன செய்வீர்கள்? நான் இந்துதானே. என் அப்பாவை, தாத்தாவை ஏன் படிக்கவிடவில்ல? என்னையே ஏன் தெருவுக்கு வெளியே நிற்க வைத்தீங்க? என்னை ஏன் பஞ்சமன்னு சொன்னீங்க? ஏன் கள்ளரையும் நாடாரையும் வன்னியரையும் சூத்திரன்னு சொல்லி படிக்க விடாம செஞ்சீங்க? ஏன் அவங்க படிச்சா நாக்கை வெட்டுவோம்னு சொன்னீங்க? அதெல்லாம் எங்களை புண்படுத்தவில்லையா?

நாங்கள் இந்துக்கள் இல்லை

நாங்கள் இந்துக்கள் இல்லை

எங்களை இந்து என்று அடையாளப்படுத்துகிறது சட்டம். ஆனால் யார் இந்து என்பதில் அண்ணா வேறுபட்டார். நான் இந்து இல்லை என்று சொல்ல அண்ணா விரும்பினார். எல்லாவற்றுக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது. சூப்பர் பவர் ஒன்று இருக்கிறது என்றார் அண்ணா. 1969-ல் முதல்வராக பதவி ஏற்ற போது சிகாகோ டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில் ஒரு இறைவனில் நம்பிக்கை வைப்பதில் தவறு இல்லை என்றார் அண்ணா.

ஓபிசி இடஒதுக்கீடு

ஓபிசி இடஒதுக்கீடு

இந்து, இந்து என்கிறீர்களே... பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்ட போது ஏன் பாஜக கோர்ட்டுக்குப் போகவில்லை? ஏன் ஆர்.எஸ்.எஸ். கோர்ட்டுக்குப் போகவில்லை? ஏன் சங் பரிவார் கோர்ட்டுக்குப் போகவில்லை. அப்ப இவர்கள் எல்லாம் இந்துக்களின் எதிரி என்று நான் சொல்வதா? இந்து என்ற பெயரில் யாரை ஏமாற்றுகிறீர்கள்? இந்துக்கள் எல்லோரும் ஸ்டாலின் வீட்டு முன் போராடுகிறார்களா? ஒரு கருத்தை இல்லை என்று மறுத்தால் விவாதியுங்க.. கடவுள் இல்லை என்று பெரியார் சொன்னால் கடவுள் உண்டு என்று சொல்லி விவாதியுங்க.. கடவுளை கற்பித்தவன் அயோக்கியன் என்று சொன்னால் யோக்கியன்னு சொல்றீங்க.. விவாதிப்போம் பேசுவோம். அதற்காக ஏன் மனம் புண்படுகிறது.. மனம் புண்படுகிறது என்று சொல்றீங்க?

இந்து என பெயர் கொடுத்தது யார்?

இந்து என பெயர் கொடுத்தது யார்?

இந்த உலகத்தில் எதுவும் புனிதம் இல்லை. எந்த பிரச்சனைக்கு எங்கள் கட்சியில் யார் பதில் சொல்ல வேண்டும் என்பது எங்களது கட்சியின் முடிவு. ஒரு பிரச்சனையின் அடர்த்திக்கு ஏற்ப யார் யார் பதில் சொல்லனுமோ பதில் சொல்லுவோம். இந்துக்கள் யார் என்பதை வரையரை செய்யக் கூடிய அறநூல்கள், புனித நூல்கள் எதுவும் இல்லை. இந்துக்களின் புனித நூல்களாக சொல்லப்படுகிறவற்றை இந்துக்கள் என்போர் அனைவருமே, இஸ்லாமியர்களின் குரானைப் போலவோ கிறிஸ்தவர்களின் பைபிளை போலவோ கொண்டாடுகிறார்களா? அதனால்தான் அண்ணா நாங்கள் இந்துக்கள் அல்ல- திராவிடத் தமிழர்கள் என்றார். அதேநேரத்தில் எங்களை இந்து என்றுதான் சட்டம் சொல்லுகிறது. இந்து என்கிற பெயரை கொடுத்ததே வெள்ளைக்காரர்கள்தான். வில்லியம் ஜோன்ஸ் என்கிற ஆங்கிலேயர்தான் இந்து என்ற பெயரையே கொடுத்தவர். இவ்வாறு ஆ. ராசா கூறினார்.

English summary
DMK Propaganda Secretary A Raja Speaks on Hindu Ideology, OBC Reservation and Periyar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X