சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட தலைமை.. ராஜன் செல்லப்பா சொல்வது இவரைத்தானா!?

Google Oneindia Tamil News

Recommended Video

    MLA Rajan chellappa: அதிமுகவில் வெடித்தது கோஷ்டி பூசல்..எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா போர்க்கொடி- வீடியோ

    சென்னை: ஜெயலலிதாவால் அதிகம் அடையாளம் காட்டப்பட்டவர் அதிமுகவுக்கு தலைமையேற்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா குறிப்பிட்டுள்ளது யாரை என்ற கேள்வி எழுந்துள்ளது.

    எம்ஜிஆர் இறப்புக்கு பிறகு அதிமுக யாருக்கு என்ற அதிகாரப் போட்டியில் அதிமுகவையும் இரட்டை இலையையும் மனைவி ஜானகியிடம் இருந்து போராடி வென்றவர் ஜெயலலிதா. இவரது இறப்புக்கு பின்னரும் அதிமுக இரண்டாகி பின்னர் ஒன்றாகியுள்ளது. ஆனால் இரு தலைமைகளின் கீழ் இயங்குகிறது.

    ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருந்தவரை அவர் எடுக்கும் முடிவுகளுக்கு யாரும் மறுபேச்சு பேச முடியாது. ஆனால் அவர் மறைவுக்கு பிறகு பொதுச் செயலாளர் பதவி சசிகலாவுக்கு கொடுக்கப்பட்டது. பின்னர் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததால் இனி அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி இல்லை என்று பொதுக் குழுவில் முடிவு எடுக்கப்பட்டது.

    மோடி துலாபாரம் கொடுத்த 100 கிலோ தாமரை மலர்கள் இங்கிருந்துதான் ஸ்பெஷலாக வரவழைக்கப்பட்டன! மோடி துலாபாரம் கொடுத்த 100 கிலோ தாமரை மலர்கள் இங்கிருந்துதான் ஸ்பெஷலாக வரவழைக்கப்பட்டன!

    செய்திகள்

    செய்திகள்

    இதைத் தொடர்ந்து பொதுச் செயலாளருக்கு இணையான அந்தஸ்து பெற்ற ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் அதிமுக ஆட்சியை தகர்க்க திமுக திட்டம் தீட்டி வருகிறது. இதற்காக அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

    பெரும் சர்ச்சை

    பெரும் சர்ச்சை

    இந்த நிலையில் மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் வென்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் அண்மையில் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். ஆனால் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 9 எம்எல்ஏக்கள் ஜெயலலிதா சமாதிக்கு செல்லவில்லை. இது அதிமுகவுக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    தலைமை பொறுப்பு

    தலைமை பொறுப்பு

    இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்து அதிமுகவுக்கு ஒரே ஒரு தலைமை வேண்டும். இரட்டை தலைமையால் அதிமுகவில் உடனுக்குடன் முடிவு எடுக்கவில்லை. இதனால் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனவே ஜெயலலிதாவால் அதிகம் அடையாளம் காணப்பட்டவர் அதிமுகவுக்கு தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என கூறியுள்ளார்.

    விசுவாசம்

    விசுவாசம்

    ஜெயலலிதாவால் அதிகம் அடையாளம் காட்டப்பட்டவர் என்று ராஜன் செல்லப்பா யாரை குறிப்பிடுகிறார் என கேட்கத் தோன்றுகிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை எப்போதெல்லாம் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேரிடுகிறதோ அப்போதெல்லாம் விசுவாசமுள்ள ஓபிஎஸ்ஸைதான் முதல்வராக நியமித்து விட்டு செல்வார்.

    ராஜன் செல்லப்பன்

    ராஜன் செல்லப்பன்

    இதுபோல் அவர் இருமுறை முதல்வராக பதவி வகித்துள்ளார். இவ்வளவு ஏன் ஜெயலலிதா மறைவுக்கு பின்னரும் கூட சசிகலாவே, ஓபிஎஸ்ஸைதான் முதல்வராக இருக்கும்படி கேட்டுக் கொண்டார் என்ற தகவல்களும் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் ராஜன் செல்லப்பா ஓபிஎஸ்ஸைதான் சொல்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Rajan Chellappa says A person who was recognised by Jayalalitha should take chief post. Did he mean O.Paneerselvam?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X