"வயிற்றெரிச்சல்".. சும்மா விடாது உங்களை.. பிரபாகரன் ஆன்மா இனி சாந்தியாகும்.. பிரேமலதா அதிரடி
சென்னை: அன்று ஈழ மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது எப்படி வயிறு எரிந்து சாபம் விட்டார்களோ அதன்படிதான் இன்று ராஜபக்சேவின் கொடுமையான ஆட்சியும் இலங்கையும் தீப்பற்றி எரிகிறது.
இலங்கையில் பொதுமக்களின் போராட்டத்தை, ராஜபக்சே குடும்பத்தினர் கொஞ்சம்கூட கண்டுகொள்ளாததன் பொருட்டு, அங்கு நாடெங்கும் போராட்டம் தீவிரமாகி வருகிறது...
மக்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், மகிந்த ராஜபக்சே தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்... இதனால் ஒட்டுமொத்த அமைச்சரவையும் உடனடியாக கலைக்கப்பட்டது.
பற்றி எரியும் இலங்கை.. அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் மகிந்த ராஜபக்ச

கலவரம்
ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்த அடுத்த சிலமணி நேரங்களிலேயே, ராஜபக்சே சகோதரர்களின் மெதமுலனா இல்லம் போராட்டக்காரர்கள் தீவைக்கப்பட்டது... இதுதொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகின.. அதேபோல ராஜபக்சே அருங்காட்சியகமும் போராட்டக்காரர்களால் தீவைக்கப்பட்டுள்ளது. இதை தமிழக மக்களும் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.. கடந்த 2009-ல் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்திற்கும் இடையே நடந்த போரில் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

சாபம் விட்ட தமிழர்கள்
தமிழ் இனத்தை அழிக்க வேண்டும் என்ற முனைப்பில் ராஜபக்சே குடும்பத்தினர், குண்டுகளைப் போட்டு தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்தனர்... இதற்கு இன்று வரை போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவே இல்லை.. நியாயமும் கிடையாத நிலையில், எங்க சாபம் உங்களை சும்மா விடாது என்று சாபம் விட்டு கொக்கரித்தனர் தமிழர்கள். இந்நிலையில்தான் அந்த நாடே பொருளாரத்தில் சிக்கி, ராஜபக்சேவின் மாளிகை தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது..

பிரேமலதா வீடியோ
ராஜபக்ச குடும்பம் எங்கே என்று தெரியவில்லை.. இந்நிலையில்தான், "இரக்கமற்ற கொலையாளி ராஜபக்சேவுக்கு சிங்கள மக்கள் எழுதிய தீர்ப்பு இது" என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தன்னுடைய திருப்தியையும், கருத்தையும் வெளியிட்டுள்ளார். பிரேமலதா வெளியிட்டுள்ள வீடியோவில் சொல்லி இருப்பதாவது:

போராளி பிரபாகரன்
"உலகம் முழுவதும் வாழும் நமது தமிழ் அன்பு சொந்தங்களுக்கு கேப்டன் சார்பாகவும், தேமுதிக சார்பாகவும் பணிவான வணக்கங்கள் தெரிவித்து கொள்கிறேன். தமிழினத்தை படுகொலை செய்த இரக்கமற்ற ராஜபக்சவிற்கு கிடைத்த இந்த தண்டனை இறைவன் கொடுத்த தீர்ப்பாகவே இந்த நாளை நான் பார்க்கிறேன். ஒரு இனத்திற்காக போராடிய நமது அன்பு சகோதரர் போராளி பிரபாகரன் அவர்களையும், அவரது குடும்பத்தினரையும் அப்பாவி தமிழீழ மக்களையும் படுகொலை செய்த தமிழ் இனத்தையே அழித்த ராஜபக்சே இன்று அந்த சிங்கள மக்களாலேயே தாக்கப்படும் காட்சிகளை நாம் பார்க்கிறோம்.

கொடுமை
இன்றைக்கு தான் உண்மையிலேயே தமிழ் மக்கள் வெற்றி பெற்றதாக நான் கருதுகிறேன். விடுதலைப் புலிகள் பிரபாகரன் அவர்களுடைய படுகொலையையும் அப்பாவித் தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்தி கொலை, கொள்ளை, பலாத்காரம் செய்து பல வழிகளில் அவர்களை கொடுமைப்படுத்தி கொலை செய்த ராஜபக்சேவுக்கு சிங்கள மக்களே தீர்ப்பு கொடுத்திருப்பதை அனைவரும் வரவேற்கக் கூடிய ஒரு விஷயம்.

இலங்கை
அன்று ஈழ மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது எப்படி வயிறு எரிந்து சாபம் விட்டார்களோ அதன்படிதான் இன்று ராஜபக்சேவின் கொடுமையான ஆட்சியும் இலங்கையும் தீப்பற்றி எரிகிறது. இன்றைக்கு தான் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் மற்றும் தமிழ் ஈழமக்களின் ஆத்மாவும் சாந்தி அடைந்திருக்கும். இந்த வெற்றியை உலக நாடுகளில் இருக்கும் அனைத்துத் தமிழ்ச் சொந்தங்களுக்கும் கிடைத்த வெற்றியாக கருதுகிறோம்" என்று கூறியுள்ளார்.