சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இறுகும் பிடி.. ராஜேந்திர பாலாஜியை நெருக்கும் ஊழல் வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் செப்.20-ல் விசாரணை

ராஜேந்திர பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில், முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கேடி ராஜேந்திர பாலாஜி தொடர்ந்த மேல்முறையீடு மனுவானது செப்டம்பர் 20-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது... இதனால் அதிமுகவில் ஒருவித பரபரப்பு சூழ்ந்துள்ளது.

மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் மதுரை ஹைகோரட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில் 2011 முதல் 2013-ம் ஆண்டு வரை ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக, 7 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் சேர்க்கப்பட்டிருந்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைப்பு?.. முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் செந்தில் பாலாஜி! தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைப்பு?.. முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் செந்தில் பாலாஜி!

நீதிபதிகள்

நீதிபதிகள்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.. அப்போது நீதிபதி சத்தியநாராயணன், சொத்து குவிப்பு புகார் குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஹேமலதா

ஹேமலதா

ஆனால், இன்னொரு நீதிபதியான ஹேமலதா, தீர்ப்பை வாசிக்கும்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு வழக்கு பதிவு செய்து விசாரிப்பது தேவையற்றது... செத்த குதிரையின் மீது சவுக்கடி கொடுப்பது போன்றது, இதை மேற்கொண்டு விசாரிப்பதால் எந்தவிதமான பலனும் இல்லை என்றும் சொல்லி அந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

 மாறுபட்ட தீர்ப்புகள்

மாறுபட்ட தீர்ப்புகள்

இப்படி நீதிபதிகள் 2 விதமான தீர்ப்பை வழங்கியதால், இதை விசாரிக்க 3வது நீதிபதியாக எம்.நிர்மல்குமார் ஜுன் மாத இறுதியில், நியமிக்கப்பட்டார்... கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி இந்த வழக்கு ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, ராஜேந்திரபாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2 நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய இருப்பதால், வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

சுப்ரீம்கோர்ட்

சுப்ரீம்கோர்ட்

இந்த வழக்கு விசாரணைக்கு தடைகோரியும், 3 ஆவது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும், ராஜேந்திர பாலாஜியும் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.. தன்னுடைய மனுவில், "விதிகளின்படி மாறுபட்ட தீர்ப்பு வழங்கும் போது அதற்குரிய காரணங்களை விளக்கமாக நீதிபதிகள் தெரிவிக்க வேண்டும், அவ்வாறு விளக்கம் அளித்தால் மட்டுமே 3 ஆவது நீதிபதி விசாரிக்க முடியும், எனவே இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்" என்று அதில் கேட்டுக் கொண்டிருந்தார்.

கோரிக்கை

கோரிக்கை

இதனிடையே, சென்னை ஹைகோர்ட்டில் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு விசாரணைக்கு வந்திருந்தது.. அப்போது, ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருப்பதால், இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று ராஜேந்திர பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

விசாரணை

விசாரணை

ஆனால், ராஜேந்திர பாலாஜி தரப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் இனி வாய்தா கேட்க கூடாது என்றும் ராஜேந்திர பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம்கோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாவிட்டால், அடுத்த விசாரணையின் போது இந்த வழக்கில் அரசு தரப்பு வாதங்கள் கேட்கப்படும் என்றும் சொல்லி வழக்கை தள்ளி வைத்தார்.

ஒத்திவைப்பு

ஒத்திவைப்பு

அதன்படி, கடந்த 3ம் தேதி மறுபடியும் இந்த வழக்கு சென்னை ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73%க்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை கோர்ட்டில் தெரிவித்தது.

 மேல்முறையீட்டு மனு

மேல்முறையீட்டு மனு

இப்படி இந்த வழக்கு தொடர்ந்து சென்னை ஹைகோர்ட்டிலும் நடந்து வரும் நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடைக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மேல்முறையீடு மனு தாக்கல் செய்த அந்த மேல்முறையீடு மனுவானது, நாளை விசாரணைக்கு வருகிறது. சுப்ரீம்கோர்ட்டில் இந்த வழக்கின் தன்மை எப்படி செல்ல போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. அத்துடன், அதிமுகவிலும் ஒருவித பரபரப்பு சூழ்ந்துள்ளது.

செப்டம்பர் 20ல் விசாரணை

செப்டம்பர் 20ல் விசாரணை

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு செப்டம்பர் 20 ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளதாகவும், அதுவரை விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என கோரினார்.

English summary
Rajendra Balaji appeal on corruption case and trial comes tomorrow in the Supreme court
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X