சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்!

அமித்ஷாவுக்கு ராஜேந்திர பாலாஜி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்

Google Oneindia Tamil News

சென்னை: மோடியை டாடின்னு சொல்லும்போதே நமக்கு புரிஞ்சிருக்கணும்.. இப்போது, அமித்ஷாவை ஆட்ட நாயகன் என்று சொல்லி கூல் பாராட்டு தெரிவித்துள்ளார் ராஜேந்திர பாலாஜி.

அதிமுக அமைச்சர்களிலேயே பாஜகவுக்கு ஏகப்பட்ட சப்போர்ட்டுகளை டைம் கிடைக்கும்போதெல்லாட்ம வாரி வழங்குவர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிதான்.

தமிழகமே அன்று அமித்ஷாவின் இந்தி திணிப்பு குறித்து பற்றி கொண்டு எரிந்தபோது, "அமித்ஷா அப்படி பேசவே இல்லை.. இந்தி மொழி பற்றி பெருமையாக பேசியிருக்கிறார். அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பிரச்சனை உருவாக்கப்பட்டுள்ளது" என்று கூறியவர் இதே அமைச்சர்தான்.

வெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.வெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.

இந்தியன்தான்

இந்தியன்தான்

அதேபோல, ''ராகுல் காந்தி இந்தியாவில் பிறந்து இருந்தாலும், அவர் இத்தாலியில் அவரது தாய் மாமா மடியில் அமர்ந்து மொட்டை போட்டுக் கொண்டார். அவரது தாயும், அவரது தாய் மாமாவும் இத்தாலியைச் சேர்ந்தவர்கள். வேறு நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு நாடு பற்றிய கவலையில்லை. ராகுல் காந்தி இத்தாலியில் பிறந்தவர். இந்தியாவை இந்தியன்தான் ஆளணும்'' என்று பேசியதும் இதே அமைச்சர்தான்.
இதனால் காங்கிரசின் எக்கச்சக்க எரிச்சல்களுக்கு ஆளானவர்.

அமைச்சர்

இந்நிலையில், அமித்ஷாவுக்கு இன்று பிறந்த நாள்.. அதனால் பல தலைவர்கள் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள். இதற்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜியும் வாழ்த்து சொல்லி ட்வீட் போட்டு உள்ளார். "பாஜக தேசிய தலைவர், மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர், "ஆட்ட நாயகன்" @AmitShah ஜி அவர்களின் பிறந்த நாளில் பூரண நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், மன மகிழ்வோடும் வாழ வாழ்த்துகிறேன்..." என்று பதிவிட்டுள்ளார்.

ஆட்ட நாயகன்

ஆட்ட நாயகன்

டாடி மோடி ஆனதைபோல, இப்போது அமித்ஷாஜி ஆட்ட நாயகன் ஆகிவிட்டார். அமைச்சர் இப்படி ஒரு வாழ்த்தை பதிவிட்டுள்ளதற்கு காரணம், அநேகமாக ஹரியானா, மகாராஷ்டிரா தேர்தலின் பிந்தைய கருத்து கணிப்பில் பாஜகவுக்கு சாதகமான முடிவுகள் வெளியானதே என்றே தெரிகிறது. அதனால்தான் தெலுங்கான முதல்வர் நம் தமிழிசைகூட இந்த பதிவிற்கு லைக் போட்டு வரவேற்றுள்ளார்.

காங்கிரஸ்

காங்கிரஸ்

மேலும் பல பாஜக தலைவர்களின் பார்வையில் இந்த ட்வீட் கண்ணில் பட்டு மகிழ்ச்சியை தந்துள்ளது. இருந்தாலும் ஆட்சியை காப்பாற்றி கொள்ள அமைச்சர் இப்படியெல்லாம் பாஜகவுக்கு வால் பிடிக்கிறாரா என்ற கேள்விகளும் காங்கிரஸ் தரப்பில் எழுந்து கொண்டுதான் இருக்கிறது.

English summary
minister rajendra balajis birthday wishes to bjp leader amit shah and has praised him as "man of the match"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X