சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீலா ராஜேஷ் கணவர் ராஜேஷ்தாஸுக்கு முக்கியப் பதவி... சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக நியமனம்..!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக ராஜேஷ் தாஸ் ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

1989-ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த இவர் பல மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். சென்னை புறநகர் காவல் ஆணையர், கடலோர காவல்படை இயக்குநர், தென் மண்டல ஐ.ஜி. உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை இதற்கு முன் ராஜேஷ் தாஸ் ஐ.பி.எஸ். வகித்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் அமலாக்கத்துறையில் ஏ.டி.ஜி.பி.யாக இவர் பணியாற்றியிருக்கிறார்.

Rajeshdoss Ips appointed as ADGP for Law and Order

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2012-ம் ஆண்டு தேவர் குருபூஜையின் போது ஏற்பட்ட மோதல், பரமக்குடி கலவரம், முல்லைப்பெரியாறு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளை சமாளித்தவர் இவர். மேலும், கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிஸம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை தென் மண்டல ஐ.ஜியாக இருந்த போது துணிச்சலுடன் ஒடுக்கியவர் ராஜேஷ் தாஸ் ஐ.பி.எஸ்.

அக்டோபர் 15 முதல் திரையரங்குகள் திறக்கலாம்... ஊரடங்கு 5-ம் கட்ட தளர்வுகளை வெளியிட்டது மத்திய அரசு..!அக்டோபர் 15 முதல் திரையரங்குகள் திறக்கலாம்... ஊரடங்கு 5-ம் கட்ட தளர்வுகளை வெளியிட்டது மத்திய அரசு..!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் ராஜேஷ்தாஸ் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். மேலும், இன்னும் 6 மாதங்களில் தமிழக சட்டமன்றத் தேர்தலை நடைபெறவுள்ள நிலையில் இவரது நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தேர்தலின் போது சட்டம் ஒழுங்கை பற்றி எதிர்க்கட்சிகள் விமர்சித்து பரப்புரை மேற்கொள்ளாத வகையில் ராஜேஷ்குமார் ஐ.பி.எஸ். செயல்படுவார் என்ற நம்பிக்கையில் அவருக்கு இந்தப் பதவி தரப்பட்டுள்ளது. இதனிடையே இவர் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ்.ஸின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Rajeshdoss Ips appointed as ADGP for Law and Order
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X