சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

படித்த அன்புமணியே இப்படி தொண்டர்களை தூண்டிவிட்டால் எப்படி.. இது நியாயமா.. ராஜேஸ்வரி பிரியா பாய்ச்சல்

அன்புமணி ராமதாஸ் மீது ராஜேஸ்வரி பிரியா குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Rajeswari Priya: படித்த அன்புமணியே இப்படி தொண்டர்களை தூண்டிவிட்டால் எப்படி?- வீடியோ

    சென்னை: "நம்மதான் பூத்தில் இருக்கப்போறோம்... புரியுதா, புரியுதான்னு அன்புமணி கேட்டாரே.. இதுக்கு நடவடிக்கை இல்லையா? இதுதான் ஜனநாயகமா? முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த ஒருவர் தொண்டர்களை தூண்டிவிடுவது எந்த விதத்தில் நியாயம்? படித்தவர்கள் இதுபோல செய்யலாமா?" என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டு அன்புமணி ராமதாஸை கிழித்து தொங்கவிட்டுள்ளார் ராஜேஸ்வரி பிரியா!

    அதிமுகவுடன் பாமக கூட்டணி என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து, அடுத்தடுத்த முக்கிய நிர்வாகிகள் பாமகவில் இருந்து விலகினர். அதில் முதலாவதாக கட்சியை விட்டு வெளியே வந்தவர்தான் ராஜேஸ்வரி பிரியா.

    மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுக்கு இவர் சென்றுவிடுவார் என்று சொல்லப்பட்ட நிலையில், யாருடனும் சேராமல் தனித்து அரசியல் கட்சி ஒன்றினை ஆரம்பித்து, தென்சென்னை தொகுதியில் தொப்பி சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார்.

    என்னது பொங்கல் பரிசா மாம்பழம் கொடுத்தீங்களா.? திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் மக்கள் திகைப்பு என்னது பொங்கல் பரிசா மாம்பழம் கொடுத்தீங்களா.? திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் மக்கள் திகைப்பு

    குற்றச்சாட்டுகள்

    குற்றச்சாட்டுகள்

    இந்நிலையில், சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் மனு ஒன்றினை அளித்த அவர், செய்தியாளர்களிடமும் பேசினார். அப்போது அன்புமணி ராமதாஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    கண்துடைப்பு

    கண்துடைப்பு

    அப்போது அவர் சொன்னதாவது: "ஒரு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட்டதாக தெரிந்தால்கூட அந்த தொகுதியின் தேர்தலையே ரத்து செய்துவிட வேண்டும். அது எப்படி ஒரு வாக்குச்சாவடிக்கு மட்டும் ரத்து செய்கிறார்கள்? இது எதுக்கு? நாங்களும் நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்லி கொள்கிறார்கள். எல்லாமே கண்துடைப்பு.

    தூண்டிவிடலாமா?

    தூண்டிவிடலாமா?

    தருமபுரியில் எல்லா வாக்குச்சாவடியிலும் முறைகேடு நடந்துள்ளது. ஆனால், கண்துடைப்புக்காக வெறும் 8 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு என்கிறார்கள். என்னை கேட்டால், தர்மபுரி தொகுதியில் மீண்டும் தேர்தல் வைக்க வேண்டும். ஏனென்றால் அன்புமணி அவரது தொண்டர்களையே தூண்டிவிட்டிருக்கிறார். பூத்தில் நம்மதான் இருக்கப்போறோம். பூத்தில் நம்மதான் இருக்கப்போறோம். புரியுதா, புரியுதான்னு நாசுக்காக கேட்டிருக்கிறார்.

    இது நியாயமா?

    இது நியாயமா?

    இது சம்பந்தமாக தேர்தலில் விதிமீறல் நடந்ததை வீடியோ எடுத்து கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை.. புகார் கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை.. மக்களை தூண்டிவிட்டாலும் நடவடிக்கை இல்லை.. இதுக்கு எதுக்கு ஓட்டு போடணும், எதுக்கு தேர்தல் நடத்தணும்.. இது தான் ஜனநாயகமா? முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த இவர், தொண்டர்களை தூண்டிவிடுவது எந்த விதத்தில் நியாயம்? படித்தவர்கள் இதுபோல செய்யலாமா? என்று கேள்வி எழுப்பினார்.

    English summary
    Rajeswari Priya slams PMK Anbumani Ramadoss and says that the re-election of the Dharmapuri constituency should be held.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X