சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னங்க இது.. ஒரு பையன் 4 பேரை காதலிக்கிறதா?.. பிக் பாஸுக்கு எதிராக ராஜேஸ்வரி பிரியா குமுறல்

கமல்ஹாசனை ராஜேஸ்வரி பிரியா கடுமையாக விமர்சித்து உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "கள்ளக்காதல் பெருகுவதற்கு பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள்தான் காரணமாக இருக்கிறது.. 60 ஆண்டு காலமாக கலைத்துறையில் இருக்கும் கமலஹாசன் இப்படி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவசியம் என்ன? நாளைக்கு தமிழ்நாட்டுக்கே முதலமைச்சராக வர நினைக்கும் கமல்ஹாசன் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருவது வருத்தம் அளிக்கிறது" என்று ராஜேஸ்வரி பிரியா கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில் ராஜேஸ்வரி பிரியா தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து செய்தியாளர்களிடம் ராஜேஸ்வரி பிரியா சொன்னதாவது:

Rajeswari Priya slams Kamala hasan

"நாங்களும் ரொம்ப பொறுமையா இருந்துட்டோம். 2 வருஷமா இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை எதிர்த்து நான் போராடி வருகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு ஒரு தணிக்கை குழு என்று ஒன்று கிடையாது. முதல்ல சென்சார் போர்டு தேவை.

வீட்டுக்குள்ள காதல்னு எந்த மதத்தில் சொல்லி இருக்கு? ஒரு பையன் 4 பேரை காதலிக்கிறது எந்த வீட்டில நடக்குது? பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் டான்ஸ், பாட்டு.. இதையெல்லாம் நாங்க எதுவுமே சொல்லல. ஆனால், ரியாலிரிட்டி ஷோ-க்கு காதல் காட்சிகள் இடம் பெற தேவையில்லை. ஏனென்றால் இதை நம் குழந்தைகளுக்கு பிரிச்சு பார்க்க தெரியாது. மிகவும் ஆபாசமாக உடைகளை அணிவது நம் சமுதாயத்தை சீர்குலைக்கும். இது மேலும் பல பாலியல் வன்மங்களுக்கு காரணமாகவும் அமையும்.

ஆபாச டிரஸ்.. கலாச்சார சீரழிவு.. வேண்டாம் பிக் பாஸ்.. தடை செய்யுங்கள்.. வெடித்தது போராட்டம்ஆபாச டிரஸ்.. கலாச்சார சீரழிவு.. வேண்டாம் பிக் பாஸ்.. தடை செய்யுங்கள்.. வெடித்தது போராட்டம்

60 ஆண்டு காலமாக கலைத்துறையில் இருக்கும் கமலஹாசன் இப்படி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவசியம் என்ன.? நாளை தமிழகத்திற்கு முதலமைச்சராக வர நினைக்கும் கமல்ஹாசன் இத்தகைய நிகழ்ச்சியை நடத்தி வருவது வருத்தம் அளிக்கிறது. கமல்ஹாசன் அவர்களிடமே இதை நான் நேரடியாக சொன்னேன்.

தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத்தாரும் சேர்ந்து இந்நிகழ்ச்சியை எதிர்த்து போராட வேண்டும். இன்று நடந்து கொண்டிருக்கும் ஆணவ படுகொலைகள் பற்றி கமலஹாசனால் பேசமுடியுமா? இதற்கு மேல், நாட்டின் பிரச்சனையை பற்றி பேச கமலஹாசனுக்கு எந்த தகுதியும் இல்லை. அதற்கு மேல் அவர் பேசினால் அதனை நாங்கள் வன்மையாக கண்டிப்போம்" என்றார்.

English summary
Rajeswari Priya slams MNM Kamal hasan and Vijay TVs Big Boss Show in Chennai Valluvar Kottams protest
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X