சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிக்பாஸ் 4-ஐ தடை செய்ய வேண்டும்... அரை குறை ஆடையுடன் உலா வருவது ரியாலிட்டி ஷோவா..? -ராஜேஸ்வரிபிரியா

Google Oneindia Tamil News

சென்னை: பிக் பாஸ் 4 நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரிபிரியா வலியுறுத்தியுள்ளார்.

அரை குறை ஆடைகளுடன் உலா வருவது தான் ரியாலிட்டி ஷோவா என்றும் கலாச்சார சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் எனவும் கடுமையாக சாடியிருக்கிறார்.

இதனிடையே பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடைபெறும் தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர் எச்சரித்திருக்கிறார். மேலும், இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது;

இரவு 8 மணிக்கு பிரதமர் வரும்போதெல்லாம், கெட்ட செய்தி பின்னே வருகிறது.. தயாநிதி மாறன் இரவு 8 மணிக்கு பிரதமர் வரும்போதெல்லாம், கெட்ட செய்தி பின்னே வருகிறது.. தயாநிதி மாறன்

 தடை செய்க

தடை செய்க

''ஆபாசத்தை மையமாகக்கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டும் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி பல்வேறு விதமான சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. கடந்த ஆண்டில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுமிதா என்ற நடிகை தற்கொலை முயற்சி எடுத்தார் ஆனால் அதற்கு எந்தவித விசாரணையும் நாங்கள் புகார் அளித்த பிறகும் கூட காவல்துறையினரால் மேற்கொள்ளப்படவில்லை''.

அரைகுறை ஆடைகள்

அரைகுறை ஆடைகள்

''ஒரே வீட்டிற்குள் ஆண்கள் பெண்கள் சேர்ந்து தங்குவதும் கழிப்பறை வரை கேமரா வைத்து நிகழ்ச்சியின் அதிகமாக காட்டப்படும் இடமாக கழிப்பறை வாயில்தான் அமைந்துள்ளது. அரைகுறை ஆடைகள் அணிந்து உலா வருவது மட்டுமல்லாமல் காதல் உறவுகளை வீட்டிற்குள் இருந்து வளர்ப்பது போன்ற தவறான பல கலாச்சார அத்துமீறல்கள் இந்நிகழ்ச்சியில் பொருத்தப்பட்டுள்ளது.

இளைய சமுதாயம்

இளைய சமுதாயம்

''இது இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் தவறான எண்ண ஓட்டத்தை பதிய வைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஏற்கனவே பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இது போன்ற நிகழ்ச்சிகளும் ஒருவித தூண்டுதலாக அமைகிறது. பொதுவாகவே ரியாலிட்டி ஷோ என்பது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறக்கூடிய ஒன்று அப்படியிருக்கையில் இதுபோன்ற இளைய சமூகத்தினரை பாதிப்படைய செய்யக்கூடிய ஆபாச நிகழ்ச்சியாக உள்ளதனால் இந்த நிகழ்ச்சியில் முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும்''.

16 பேர் ஒரே இடத்தில்

16 பேர் ஒரே இடத்தில்

''சிகரெட் ஜோன் என்ற ஒரு இடம் அமைக்கப்பட்டு அங்கே அவர்கள் புகைப்பிடிக்க செல்லலாம் என்றெல்லாம் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்படுகிறது. புகைப்பிடிக்கும் பழக்கத்தை இளைஞர்கள் மத்தியில் அதிகப்படுத்துவதற்கான வாய்ப்பாக உள்ளது. சிறு குழந்தைகள் முதல் இந்த நிகழ்ச்சியை பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். கூடுதலாக கொரோனா காலகட்டத்தில் 16 பேர் சேர்ந்து ஓர் இடத்தில் தங்கும் நிகழ்ச்சி தேவையில்லாத ஒன்றாகும், இது மக்களிடத்தில் தவறான முன்னுதாரணமாக அமையும்''.

English summary
Rajeswaripriya protests against Big Boss 4 show
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X