சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போருக்கு வர்றார் ரஜினி .. ஜெயலலிதாவைப் போல் அப்படி ஒரு வாய்ப்பு உண்டா.. ?

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல் சென்னை போயஸ் தோட்டத்தில் இருந்து நடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவதால் அவர் ஜெயலலிதா போல் ஒரு ஆளுமையாக உருவெடுப்பாரா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. அவற்றை இப்போது பார்ப்போம்.

மறைந்த ஜெயலலிதா எந்த பிரச்சினைக்கும் சுயமாக சிந்தித்து உடனடியாக தீர்வு காண முயற்சிப்பார். ஆயிரம் பேரிடம் ஆலோசனை கேட்டாலும் முடிவு எடுப்பதில் அவர் தான் கில்லாடி.

இதேபோல் தான் நடிகர் ரஜினி . நீண்ட யோசனைக்கு பின்னரே எந்த ஒரு விஷயத்திலும் முடிவுகளை அறிவிப்பார். ஜெயலலிதா போலவே ரஜினியும் யாருக்கும் அஞ்சாமல் தனது முடிவினை தெரிவிப்பார்.

காத்திருந்து பாருங்கள்.. ரஜினி சொன்ன பதிலால் மீண்டும் பரபரக்கும் போயஸ் கார்டன்.. சஸ்பென்ஸ்!காத்திருந்து பாருங்கள்.. ரஜினி சொன்ன பதிலால் மீண்டும் பரபரக்கும் போயஸ் கார்டன்.. சஸ்பென்ஸ்!

கருணாநிதி முன் அஜித்தை பாராட்டினார்

கருணாநிதி முன் அஜித்தை பாராட்டினார்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக பேசியதாகட்டும், முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் விழாவில் கட்டாயப்படுத்தி பங்கேற்க வைத்ததாக பேசிய நடிகர் அஜித்தை அந்த மேடையிலேயே பாராட்டியதாகட்டும் எதிர்விளைவுகளை பற்றி கவலைப்படாமல் இந்த முடிவுகளை ரஜினி எடுத்தார்.

ரஜினி தவிர்ப்பார்

ரஜினி தவிர்ப்பார்

ஜெயலலிதா செய்தியாளர்களை சந்திப்பதிலும், அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிப்பதிலும் அவர் அஞ்சியதில்லை, சளைத்தவரும் இல்லை. ஆனால் ரஜினி செய்தியாளர்களை சந்திப்பதை எப்போதும் தவிர்த்து வந்தார். அரசியல் தொடர்பாக சரச்சைக்குரிய கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பமாட்டார். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு எதிரான கேள்விகளுக்கு நாசூக்காக பதில் அளிப்பார். எனினும் அண்மையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் போராடிய மக்கள் குறித்து ரஜினி பேசியதும் அப்போது வெளியான காலா படத்தில் அதேபோன்ற ஒரு போராட்டம் குறித்து திரையில் பேசியதும் எதிர் எதிராக இருந்ததால் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இப்போது ரஜினி தைரியம்

இப்போது ரஜினி தைரியம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தின் பிரச்சினைகள் குறித்தும்,மக்கள் மன ஓட்டம் குறித்தும் விரல் நுனியில் தெரிந்து வைத்திருப்பார். மக்கள் மன ஓட்டத்திற்கு எதிராக எதையும் அவர் அத்தனை சீக்கிரம் செய்ய மாட்டார். ரஜினியும் தமிழகத்தின் பிரச்சனைகள் குறித்து விரல் நுனியில் தெரிந்து வைத்திருந்தாலும் அண்மைக் காலமாக மட்டுமே அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மோடி அரசின் நடவடிக்கையை பாராட்டினார். அவரது பாராட்டை எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும் தைரியமாக தனது நிலைப்பாட்டை இன்றும் அறிவித்துள்ளார்.

ஆனால் நடக்குமா ?

ஆனால் நடக்குமா ?

ஜெயலலிதா போல் தமிழக நலன்கள், தமிழக மக்களின் எண்ண ஓட்டங்களை சிந்தித்து தைரியமாக முடிவெடுத்து, எதிர்க்கட்சிகளின் அரசியல் வியூகங்களை தவிடுபொடி ஆக்கும் அளவுக்கு செயல்பட்டால் நடிகர் ரஜினி காந்தும் அரசியலில் ஆளுமையாக வரலாம். ஆனால் அதற்கு அவர் விரைவில் கட்சியை உருவாக்கி மக்களை சந்திக்க வேண்டாம். அது எவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்பது ரஜினிக்கே வெளிச்சம்.

English summary
analyses jalalaitha vs rajini, actor rajini can become people leader like jalalaitha from poes garden chennai?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X