• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

எம்ஜிஆர், கமல் படங்களில் பெண்களை மட்டம் தட்டவில்லையா.. ஆர்.ஜே.பாலாஜியை வெளுத்துக் கட்டும் ரசிகர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினி படத்தை உதாரணமாக கொண்டு தமிழ் சினிமாவில் பெண்கள் குறித்து தவறான புரிதலை காட்டுவதாக நடிகர் ஆர் ஜே பாலாஜி கூறியதற்கு ரஜினி ரசிகர் ஒருவரின் பழைய ட்வீட் திடீரென இப்போது வைரலாகி வருகிறது.

சினிமா தொடங்கிய காலங்களிலிருந்தே நாயகன், நாயகிக்கு பாகுபாடுகள் இருந்தன. நாயகனுக்கு கேரவன் இருக்கும். அதில் அவர் இயற்கை உபாதை கழிக்க, ரெஸ்ட் எடுக்க, குளிக்க, தூங்க என அனைத்து வசதிகளும் இருக்கும்.

ஆனால் நடிகைகளுக்கு இயற்கை உபாதைகளுக்கு ஒதுங்குவதற்கு கூட ஷூட்டிங் நடக்கும் பகுதியில் உள்ள வீட்டில் கேட்டு கழிவறையை பயன்படுத்திக் கொள்வர். அது போல் எத்தனை வயதானாலும் ஆண்கள் கதாநாயகனாக நடிப்பர். ஆனால் பெண்களோ அக்கா, அண்ணி, அம்மா ரோல்களை செய்வர்.

மேட்டரே வேற! வீட்டிற்கே போன பூச்சி.. நாசுக்காக மேட்டரே வேற! வீட்டிற்கே போன பூச்சி.. நாசுக்காக

 ஹீரோவை விட வயதில் இளையவர்

ஹீரோவை விட வயதில் இளையவர்

ஹீரோவை விட வயதில் சிறிய பெண்கள் எல்லாம் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்துள்ளனர். இதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. அது போல் பெண் என்பவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என பாடல்களும் இருந்தன. இந்த நிலையில் ஆர் ஜே பாலாஜி படத்தின் இசை வெளியீட்டு விழா கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. அண்மையில் நடந்த இந்த விழாவில் பாலாஜி பேசுகையில், நமது சினிமாவிலும் பெண்கள் குறித்து தவறான புரிதலை காட்டுகிறார்கள்.

 ரஜினி நடித்த படையப்பா

ரஜினி நடித்த படையப்பா

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், ரஜினி நடித்த படையப்பா படத்தில் வெளிநாட்டில் படித்துவிட்டு வந்த ரம்யா கிருஷ்ணனை கெட்டவர் என்றும் பாமர பெண்ணாக நடித்திருந்த சவுந்தர்யாவை நல்ல பெண் என்றும் காட்டியிருந்தார்கள். நான் ரஜினியின் ரசிகன்தான் இருந்தாலும் இதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. நமது சமுதாயத்தில் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அடுத்த தலைமுறையாவது சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 ஆர் ஜே பாலாஜி

ஆர் ஜே பாலாஜி

ஆர் ஜே பாலாஜி அண்மையில் பேசியிருந்தாலும் ரஜினி குறித்து அவர் பேசிய கருத்துகளுக்கு கடந்த ஏப்ரல் மாதமே வேறு ஒரு பிரச்சினைக்காக நீளமான பதிவை ரஜினி ரசிகர் ட்விட்டரில் போட்டிருந்தார். இது தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து ரஜினி ரசிகரான மனோ தனது ட்விட்டரில் கூறுகையில் பெண்கள் பற்றிய ஆணாதிக்க கருத்துக்கள் MGR காலத்திலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 பிளாக் பஸ்டர்

பிளாக் பஸ்டர்

இப்படித்தான் இருக்கவேணும் பொம்பளை என்று எம்ஜிஆர் பாடினார். அதை அன்று ரசித்தனர். ஆனால் காலம் மாற, நாகரிகம் வளர, எல்லாமே மாறுகிறது. முட்டையிடும் பெட்டைகளா முட்டுவது என்று கமல் பாடினார். இந்த படம் Blockbuster. பெண் என்றால் அடங்கி போகனும். டவுன்ல படிச்ச பொண்ணை கிராமத்து ஹீரோ அடக்கனும்.

 சினிமா வழக்கம்

சினிமா வழக்கம்

இதெல்லாம் அப்போதைய சினிமா வழக்கம். தமிழ் மசாலா படங்களில் நாயகியவே லூசாதான காமிக்கிறானுக. அன்றைய மனநிலை அப்படி பெண்களை விலைபோகும் பொருள் என கமல் பாடும் இந்த பாட்டை விட கேவலம் ஒன்று உண்டா ? இதுவும் Industry Hit. இந்த பட விமர்சனத்தில் இதை பற்றி விகடன் விமர்சித்ததா ? ஏன் செய்யல ? காலத்திற்கேற்ப மாறுவதுதான் நாகரிகம். நாகரிகம் வளர சினிமாவில் ஆணாதிக்க சிந்தனைகள் காணாமல் போய்விட்டன.

 99 இல் படையப்பா

99 இல் படையப்பா

99ல் வந்த படையப்பாவை சொன்னவங்க 93ல் ரஜினி கதை, திரைக்கதை வசனம் எழுதிய வள்ளியை குறிப்பிடவில்லை. காதலின் பெயரில் ஏமாற்றிய ஒருவனை எப்படி திருமணம் செய்ய முடியும் என்று கேட்கிறாள் நாயகி. காலங்காலமாக தமிழ் சினிமா செய்து வந்த பிற்போக்குதனத்தை தன் எழுத்தால் உடைத்தெறிந்தவர் ரஜினி.

 முதல்வர் மகனே

முதல்வர் மகனே

முதல்வர் மகனே ஆனாலும் தன்னை ஏமாற்றி புணர்ந்தவனுடன் வாழமுடியாது என்றும் அவன் தண்டிக்கப்படவேண்டியவன் என்றும் சொல்லும் படம். க்ளைமாக்சில் அவனை தண்டிக்கிறாள் நாயகி. அதை எழுதியது ரஜினி. படையப்பா வசனம் பிற்போக்குதான்.அந்த நேரத்தில் ரசிக்கப்பட்டது. காலம் மாற ரஜினி படங்களும் மாறியது.

 ஆணாதிக்க வசனங்கள்

ஆணாதிக்க வசனங்கள்

இன்று எந்த ரஜினி படத்திலும் ஆணாதிக்க வசனங்கள் இல்லை. காலாவில் லூசுமாதிரி பேசாத என்று சொன்னதுக்கு சீறுகிறாள் நாயகி. காலாவின் அனைத்து பெண் பாத்திரங்களும் பெண் சமத்துவத்தை சொல்கின்றன. இதெல்லாம் மறந்துபோச்சா இல்ல Selective Amnesiaவா? காலா ரஞ்சித்னா படையப்பா ரவிகுமார். அவ்ளோதான்.

தளபதி

தளபதி

80, 90களில் விதவையே ஆனாலும் கன்னி கழியாத பெண்ணைத்தான் நாயகன் விரும்புவான். அந்த 80லேயே விதவை திருமணத்தை சொல்லிய படம் புதுக்கவிதை. தளபதியில் குழந்தையுடன் இருக்கும் பெண்ணை திருமணம் செய்கிறான் நாயகன். இது ஒரு விசயமே இல்லை என்று சொன்ன படம் தளபதி.

 பிற்போக்குத்தனம் இப்போது இல்லை

பிற்போக்குத்தனம் இப்போது இல்லை

ஒரு காலத்தில் கணவன் இறந்தால் உடன்கட்டை ஏறினர். பின் வெள்ளை புடவை கட்டி எந்த அலங்காரமும் இல்லாமல் இருந்தனர். பின் கலர் புடவைக்கு மாறினர். பின் பொட்டு வைத்தனர். இப்ப எந்த மாற்றமும் செய்வதில்லை. ஏன்? காலம் மாற மாற நேற்றைய சடங்குகள் எல்லாம் கேலிகூத்தாகின்றன. நாம் மாறுகிறோம். நம் சிந்தனைகள் மாறுகிறது. 30 வருடத்துக்கு முன் இருந்த பிற்போக்கு கருத்துக்கள் இப்ப இல்லை. இதான் காலமாற்றம். இதை புரிஞ்சுக்காம 23 வருசத்துக்கு முன் வந்த படத்தை தூக்கிட்டு வந்து பேசறது, சுத்தமா அறிவு இல்லைங்கறதத்தான் காட்டுது. இவ்வாறு ரஜினி ரசிகர் மனோ கூறிய பழைய கருத்துகள் வைரலாகி வருகின்றன.

English summary
Rajini fan gives suitable reply to RJ Balaji's comment on Rajini Films Padaiyappa and Mannan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X