சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சரியா சொல்ல மாட்டேங்குறார்.. இப்படி அமைதியா இருந்தால் எப்படி?".. ரஜினி மீது ஆதங்கத்தில் மன்றங்கள்!

ரஜினி மன்ற நிர்வாகிகள் சோர்வடைந்து வருகிறார்களாம்

Google Oneindia Tamil News

சென்னை: "சரியா சொல்ல மாட்டேங்குறார் தலைவர்.. தெளிவாக எந்த முடிவையும் அறிவிக்கமாட்டேன் என்கிறார்... எல்லாரும் எலக்‌ஷன் வேலையை ஆரம்பிச்சுட்டாங்க.. இப்படி இருந்தால் எப்படி?" என்று ரஜினி மன்றத்துக்குள்ளிருந்தே ஆதங்க குரல் வெடித்து கிளம்ப தொடங்கி விட்டன.

இன்னும் சில மாதத்தில் தேர்தல் வரப்போகிறது.. எல்லா கட்சிகளும் கிட்டத்தட்ட ரெடியாகி விட்டன.. கூட்டணி பேச்சுவார்த்தைகளும், சீட் பேரங்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும்ஆரம்பமாகிவிட்டன.

இடைத்தேர்தல்களில் போட்டியிடாத கமலும் இந்த முறை தேர்தலுக்கு தயாராகி வருகிறார்.. ஆனால், ரஜினிகாந்த் மட்டும் இன்னும் வாயே திறக்காமல் உள்ளது அவரது மன்ற நிர்வாகிகளையே அதிருப்திக்கு உள்ளாக்கி வருகிறது.

கன்னியாகுமரியில் களம் இறங்குகிறாரா குஷ்பு...? ஒன் இந்தியா தமிழிடம் அவர் கூறிய பிரத்யேக தகவல் இதோ.! கன்னியாகுமரியில் களம் இறங்குகிறாரா குஷ்பு...? ஒன் இந்தியா தமிழிடம் அவர் கூறிய பிரத்யேக தகவல் இதோ.!

கட்சி

கட்சி

லாக்டவுன் முன்பேயே கட்சியை ஆரம்பிப்பதாக சொன்னவர், லாக்டவுன் முடிந்தும் சகஜ வாழ்க்கைக்கு தமிழகமே திரும்பிவிட்ட நிலையில், கட்சி தொடர்பான அறிவிப்பை ரஜினி சொல்லாமல் இருக்கிறார்.. ஆனால், இந்த லாக்டவுன் சமயத்திலும் தன்னுடைய இருத்தலை ரஜினி பரபரப்பாகவே வைத்திருந்தார்.

பரபரப்புகள்

பரபரப்புகள்

போயஸ் கார்டன் வீட்டில் சில முக்கிய கட்சி தலைவர்களை ரஜினி சந்தித்து பேசியதாகவும் சொல்லப்பட்டது.. வீடியோ மூலம் தன்னுடைய ஆதரவாளர்களிடம் கருத்து கேட்டு வருவதாகவும், அரசியல் நிகழ்வுகளை மிக உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் செய்திகளும் கசிந்தவாறே இருந்தன. ஆனால், இது எல்லாமே இப்போது அமுங்கிவிட்டது.

அரசியல் கட்சி

அரசியல் கட்சி

இதுகுறித்து மன்றத்து நிர்வாகிகள், உறுப்பினர்கள் சொல்லும்போது,"தேர்தலுக்கு இன்னும் 6 மாசம்தான் இருக்கு.. இப்போதுகூட, அரசியல் முடிவை தெளிவாக அறிவிக்கமாட்டேன் என்கிறார் தலைவர் .. அணிகள் ஆரம்பித்து, பூத் கமிட்டி அமைக்கச் சொன்னார் தலைவர்.. அதையெல்லாம் செய்துகொண்டு இருந்தோம்... அந்தப் பணி சில மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் 40 சதவீதம்கூட பூர்த்தியாகவில்லை.. அதுக்குள்ளே கொரோனா பிரச்சனை வந்துவிட்டது.. செய்து கொண்டிருந்த பணிகளும் நிறுத்தப்பட்டன.

அதிமுக, திமுக

அதிமுக, திமுக

"உங்களை முதலில் பார்த்துக்கோங்க" என்று தலைவர் தகவல் சொன்னாரே தவிர, வேறு ஒரு தகவலும் இப்போது அவரை மன்றத்தினருக்கு வரவில்லை. இப்போ அதிமுக, திமுக உட்பட எல்லா கட்சிகளும் தேர்தல் வேலையில் இறங்கிவிட்டன.. ஆனால், தலைவர் கட்சி பற்றியே பேசமாட்டேன் என்கிறார்... இதெல்லாம் எங்களுக்கு வருத்தமாக உள்ளது... கூடிய சீக்கிரம் அவர் ஒரு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்" என்று ஆதங்க கோரிக்கை விடுக்கின்றனர்.

அதிருப்தி

அதிருப்தி

இவ்வளவு காலம் ரஜினி அரசியல் வருகையானது மற்ற தரப்பினருக்கு ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி வந்த நிலையில், இப்போது மன்றத்து நிர்வாகிகளே சோர்வடைந்து வருவது அதிர்ச்சியாக உள்ளது.. அதிலும், வேலூர் மாவட்ட செயலாளர் சோளிங்கர் என்.ரவி பெயரில் மாவட்டம் முழுவதும் திடீரென போஸ்டர்களை ஒட்டிவிட்டார்.. "அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம், இப்ப இல்லன்னா எப்பவுமே இல்லை என்று அந்த போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது... இது மேலும் பரபரப்பை கூட்டி உள்ளது.

தேர்தல்கள்

தேர்தல்கள்

2017-ல் போர் வரும்போது நாங்கள் களத்தில் இருப்போம் என்று ரஜினி சொல்லி 3 வருஷம் ஆகிவிட்டது.. இந்த 3 வருடத்தில் 2 பெரிய தேர்தலை தமிழகம் சந்தித்துவிட்டது.. ஆனால், ரஜினியின் அரசியல் பிரவேசம் மட்டும் மிஸ்ஸிங்.. அதற்கு பிறகு வந்த கமல்கூட கட்சியை ஆரம்பித்து, தேர்தலிலும் போட்டியிட்டு வளர தொடங்கிவிட்டாரே தவிர, இவர் மட்டும் அமைதியாக உள்ளது மன்றத்து நிர்வாகிகளை களைப்படைய வைத்து விட்டது.

அடுத்த முதல்வர்

அடுத்த முதல்வர்

"ரஜினி கண்டிப்பாக அரசியல் கட்சி தொடங்குவார்.. மாற்றத்தை கொண்டு வருவார்.. அவர்தான் அடுத்த முதல்வர்.." என்ற அடிக்கடி வந்து மீடியாவில் சொல்லி, பரபரப்பை விடாமல் தக்கவைத்து கொண்டிருந்த அவரது ஆதரவாளர்களையும் இப்போது காணோம்.. அதுதான் வருத்தமாக உள்ளது... எவ்வளவுதான் சலிப்புகள், விமர்சனங்கள், சர்ச்சைகள் வந்தாலும் இன்னமும் விடாமல் நம்பிக் கொண்டிருக்கும் மன்றத்து நிர்வாகிகள், உறுப்பினர்களுக்காகவாவது ரஜினி கட்சியை தொடங்க வேண்டும்!

English summary
Rajini fans are upset over their leader's deep silence
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X