• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

நம்பி காத்திருந்த ரசிகர்களுக்கு இதுதானா பரிசு படையப்பா.. காத்துக் காத்து அலுத்துப் போன ரசிகர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: கட்சியிலும் ஆட்சியிலும் பதவி இல்லையாம். இத்தனை நாட்கள் ரஜினிக்காக பாடுபட்ட ரசிகர்களை எப்படி கவுரவப்படுத்தப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

  கடைசில இப்படி ஆகிடுச்சே தலைவா... சோகத்தில் ரசிகர்கள்

  சென்னை லீலா பேலஸில் செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் 60 ஆயிரம் பதவிகள் உள்ளன. இவையெல்லாம் காசு பார்க்கும் பதவிகள்.

  நாம் கட்சி தொடங்கினால் தேர்தல் நேரத்தில் பல பதவிகள் உருவாக்கப்பட்டு தேர்தல் நடந்து முடிந்தவுடன் அத்தியாவசிய பதவிகளை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற பதவிகளை நீக்கிவிடுவேன்.

  அது போல் இளைஞர்களுக்கு எம்எல்ஏ சீட் தருவேன். மாற்று கட்சியிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் சில சீட்டுகள் தரப்படும். நீதிபதிகள், ஆசிரியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் எம்எல்ஏ சீட்டு தருவேன். அவர்களது வீட்டு கதவை தட்டி வாருங்கள் என அழைப்பேன். கட்சி பதவியும் இல்லை, ஆட்சி பதவியும் இல்லை. 40 வருஷங்களாக உங்கள் கூடவே இருக்கும் எங்களுக்கு என்ன என நீங்கள் கேட்கலாம்.

  கழகங்கள் இல்லாத தமிழகம்- பாஜகவின் மீன்குழம்பு சட்டியில் சர்க்கரை பொங்கல் வைக்கும் ரஜினிகாந்த்! கழகங்கள் இல்லாத தமிழகம்- பாஜகவின் மீன்குழம்பு சட்டியில் சர்க்கரை பொங்கல் வைக்கும் ரஜினிகாந்த்!

  ரசிகர்கள்

  ரசிகர்கள்

  நானே பதவி வேண்டாம் என சொல்லிவிட்டேன். அது போல் நீங்களும் பதவி வேண்டாம் என சொல்லிவிட வேண்டும். தலைவன் சொல்வதைத்தான் தொண்டர்கள் கேட்க வேண்டுமே தவிர தொண்டர்கள் சொல்வதை தலைவர்கள் கேட்கக் கூடாது என்று கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டார். இத்தனை நாட்கள் வேலையை விட்டுவிட்டு ஒவ்வொரு முறையும் ரஜினியை சந்திக்க பல கி.மீ. தூரங்களில் இருந்து போலீஸிடம் அடிப்பட்டு மிதிப்பட்டு சந்திக்க முயற்சி செய்துவிட்டு பின்னர் சந்திக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் பலர் உள்ளனர்.

  ஊழல்வாதிகள்

  ஊழல்வாதிகள்

  பிறந்தநாள், படம் ரீலிஸ் நாள், பொங்கல், புத்தாண்டு என நல்ல நாளில் ரஜினியின் தரிசனம் கிடைத்துவிட வேண்டும் என்பதற்காக அதிகாலையிலேயே வீடு முன்னர் திரண்ட ரசிகர்களுக்கு இவர் என்ன கவுரவத்தை கொடுக்க போகிறார் என தெரியவில்லை. இளைஞர்கள், மாற்றுக் கட்சியில் உள்ள நல்லவர்களுக்கு வாய்ப்பு என்றால் ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஊழல்வாதிகள் என ரஜினி சொல்கிறாரா.

  வழி

  வழி

  விஜயகாந்த் கட்சி தொடங்கிய போது ரசிகர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுத்தாரே தவிர மற்றவர்களுக்கு கொடுக்கவில்லை. ரஜினி திரைப்படம் மூலம் சம்பாதித்துவிட்டார். ஆனால் இவரை நம்பிய ரசிகர்களோ இன்னும் தலைவா தலைவா என போஸ்டர் ஒட்டி கொண்டு ஏழ்மை நிலையில் உள்ளனர். மற்ற கட்சியினர் சம்பாதிக்கும் போது தன் கட்சியினர் மட்டும் ஏழ்மை நிலையில் இருக்க வேண்டும் என ரஜினி கூறுவது எந்த வகையில் நியாயம்? மாற்று கட்சியினர் கோடிக் கோடியாக கொள்ளை அடித்து பணம் சேர்க்க வழி வகுத்துக் கொடுக்கும் ரஜினி, ரசிகர்கள் சொற்ப அளவில் சம்பாதிக்கக் கூட வழி ஏற்படுத்திக் கொடுக்க முன் வராதது ஏன்?

  ரசிகர்கள்

  ரசிகர்கள்

  மாற்று கட்சியினருக்கு வாய்ப்பு என்றால் ரசிகர்கள் என்ன ரஜினிக்கு ஊறுகாய் போன்றவர்களா? 45 ஆண்டுகளாக எத்தனையோ பேர் ரஜினியின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். அவர்களை ரஜினி பெருமைப்படுத்துவது எப்போது? தனது படங்களை பார்ப்பதற்கும் 100 நாட்கள் ஓட்டுவதற்கும், இவர் சார்பில் விற்கப்படும் ரஜினி போட்டோ, காலண்டர், கீ செயின், வாங்குவதற்குத்தான் இவருக்கு ரசிகர்கள் தேவையா என்ற கேள்வி எழுகிறது.

  ரஜினி

  ரஜினி

  என்னை வாழ வைத்த தமிழ் மக்களே என கூறும் ரஜினி, அவரது ரசிகர்களை எந்த அளவுக்கு வைத்திருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. இவரது கட்டுப்பாட்டில் இல்லாத யாரோ ஒருவரை ஆட்சியில் அமர வைத்தால் அவர் செய்யும் தவறை எப்படி தட்டிக் கேட்பார்? அப்படியே கேட்டாலும் கர்நாடகம், மத்திய பிரதேசம் போல் குதிரை பேரம் நடத்தப்பட்டு ஆட்சி கவிழ்ந்தால் என்னவாகும்? பதவிக்காக 18 ஆண்டுகள் இருந்த கட்சியையே தூக்கி எறிந்த அரசர் குடும்பத்தை சேர்ந்த சிந்தியா விவகாரத்தை ரஜினி சிந்திக்கவில்லையோ என தோன்றுகிறது. இதையெல்லாம் சற்று யோசிக்காமல் கொஞ்சம் கூட புரிதலின்றி ரஜினி பேசுவது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

  English summary
  Rajini fans totally disappointed after hearing his press meet that he will not give chance to them in both party and power.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X