சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காங்கிரஸ் தலைவர் ரஜினிகாந்த்.. ஆஹா அரிய வாய்ப்பு.. அவசரமாக பரிசீலிப்பாரா ராகுல் காந்தி?

காங்கிரஸ் கட்சிக்கு எங்கெல்லாமோ தலைவரை தேடுவதற்கு பதிலாக பேசாமல் நடிகர் ரஜினிகாந்தையே தலைவராக நியமித்துவிட்டால் நன்றாக இருக்கும்.

Google Oneindia Tamil News

Recommended Video

    யாரையும் பகைச்சுக்காம நாகரீகமாக ரஜினி பேட்டி-வீடியோ

    சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு எங்கெல்லாமோ தலைவரை தேடுவதற்கு பதிலாக பேசாமல் நடிகர் ரஜினிகாந்தையே தலைவராக நியமித்துவிட்டால் நன்றாக இருக்கும். காங்கிரஸ் கட்சிக்கு தலைவராவதற்கான பத்து பொருத்தமும் ரஜினிக்கு பக்காவா இருக்கிறது மக்களே!

    லோக்சபா தேர்தல், படுதோல்வியால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து இருக்கிறார். தனது பதவி விலகலில் அவர் மிகவும் உறுதியாக உள்ளார் என்று தகவல்கள் வருகிறது.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நடிகர் ரஜினிகாந்த் முக்கியமான அட்வைஸ் ஒன்று செய்து கொடுத்து உள்ளார். தோல்வியில் துவண்டுள்ள ராகுலுக்கு ரஜினியின் அறிவுரை பெரிய உதவியாக இருக்கும் என்று நாம் உறுதியாக, அறுதியிட்டு நம்பலாம்.

    நடுக்கம் தரும் ஓபிஎஸ் மகன்.. தம்பிதுரை தயவை நாடும் எடப்பாடியார்.. ராஜ்யசபா சீட் ரெடி! நடுக்கம் தரும் ஓபிஎஸ் மகன்.. தம்பிதுரை தயவை நாடும் எடப்பாடியார்.. ராஜ்யசபா சீட் ரெடி!

    ஆதரவாக பேசி இருக்கிறார்

    ஆதரவாக பேசி இருக்கிறார்

    போயஸ் இல்லத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் ரஜினிகாந்த். அப்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை விட்டு, விலக கூடாது. அவர் தன்னால் முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும். அவரால் தனக்கு பலம் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும். இப்போது ராகுல் பதவி விலக யோசிப்பது சரியாக இருக்காது. வலிமையான எதிர்க்கட்சி நமக்கு தேவை. அவர் பதவியில் தொடர வேண்டும் என்று குறிப்பிட்டார்.

    பாஜக கொஞ்சம் அதிர்ச்சி

    பாஜக கொஞ்சம் அதிர்ச்சி

    இதுதான் காங்கிரஸ் கட்சியினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹப்பா நம்ம சொல்ல வேண்டியதை ரஜினியே சொல்லிவிட்டாரே என்று காங்கிரஸ் தொண்டர்கள் சந்தோசமாக இருக்கிறார்கள். ஆனால் ராகுலுக்கு ரஜினி ஆறுதல் கூறும் விதமாக பேசியது பாஜகவினரை கடுப்பிற்கு உள்ளாக்கி உள்ளது. என்ன இது இவர் நம்ம ஆளுன்னு பார்த்தா காங்கிரசுக்கு சப்போர்ட் பண்ணுறாரே என்று குழப்பத்தில் இருக்கிறது பாஜக.

    தலைவராகலாம்

    தலைவராகலாம்

    இந்த நிலையில்தான் ரஜினிகாந்த் ஏன் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக கூடாது என்று கேள்வி எழுந்துள்ளது. நல்ல தலைவரை தேடிக்கொண்டு இருக்கும் காங்கிரஸ் கட்சியும், நல்ல கட்சியை உருவாக்க யோசித்துக் கொண்டு இருக்கும் (நீண்ட வருடங்களாக) ரஜினியும் ஏன் ஒன்றாக சேர கூடாது. காங்கிரஸ் கட்சியை எடுத்து ஏன் ரஜினியே வழி நடத்த கூடாது என்று கேள்வி எழுந்துள்ளது.

    ராகுல் விருப்பம் இல்லை

    ராகுல் விருப்பம் இல்லை

    காங்கிரஸ் தலைவர் ஆன போதே ராகுல் காந்தி பெரிய விருப்பம் இல்லாமல்தான் தலைவர் ஆனார். ''உன் பேர் என்ன?.. சங்கிலி.. அப்போ நீதான் கங்குலி'' என்று வடிவேல், திரைப்படம் ஒன்றில், கிரிக்கெட் போட்டிக்கு ஆள் எடுப்பது போல, காந்தி என்று பெயருக்கு பின் இருந்ததால் எளிதாக ராகுல் தலைவராகிவிட்டார் என்று இப்போதும் விமர்சனம் வைக்கிறார்கள். இதனால் குடும்ப அரசியல் என்ற விமர்சனத்தை துடைக்க ரஜினி காங்கிரஸ் கட்சிக்குள் நுழையலாம்.

    காங்கிரஸில் யாரும் இல்லை

    காங்கிரஸில் யாரும் இல்லை

    காங்கிரஸ் கட்சியிலும் தற்போது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய தலைகள் யாரும் இல்லை. இந்தியா முழுக்க தெரிந்த ஸ்டார் முகம் ராகுல் காந்தியை தவிர யாரும் கிடையாது. அப்படி இருக்கும் போது மிகவும் பிரபலமான ரஜினிகாந்த் காங்கிரஸ் கட்சியை வழி நடத்த களமிறங்கலாம். அவர் நாடு முழுக்க அறியப்பட்ட ஸ்டார் அந்தஸ்து பெற்றவர் என்பது ஒரு பிளஸ் பாயிண்ட். ரஜினி பாணியிலேயே சொன்னால், மோடியை போல ஒரு கரிஷ்மாட்டிக் லீடர், சூப்பர் ஸ்டார் அல்லவா!

    நெருக்கம்

    நெருக்கம்

    அதேபோல் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலர் ரஜினிகாந்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள். காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர், ராகுல் காந்தி, சோனியா காந்தி, ஈவிகேஎஸ் இளங்கோவன், குஷ்பு ஆகியோர் ரஜினிக்கு நீண்டகாலமாகவே, நல்ல நண்பர்கள். இதனால் சிங்கிளாக இருக்கும் ரஜினியால் காங்கிரஸ் கட்சியில் எளிதாக மிங்கிள் ஆக முடியும்.

    நிறைய நண்பர்கள்

    நிறைய நண்பர்கள்

    காங்கிரஸ் கட்சியில் மட்டுமில்லாமல் தேசிய அளவில் மற்ற அரசியல்வாதிகளுடனும் ரஜினி நெருக்கமாக இருக்கிறார். மமதா, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் ரஜினிக்கு நல்ல நண்பர்கள். திமுகவிலும் ரஜினிக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். இதனால் ரஜினி எளிதாக கூட்டணிகளை அமைக்கவும் முடியும்.

    கொள்கை எல்லாம் கிடையாது

    கொள்கை எல்லாம் கிடையாது

    மிக முக்கியமாக ரஜினிக்கு கொள்கை என்றாலே தலை சுற்றும். இதனால் ரஜினி எளிதாக காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு தன்னை அதற்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ள முடியும். கொள்கை வகுக்க வேண்டிய மிக மிக கஷ்டமான வேலையை அவர் தவிர்த்துவிடலாம். இப்படி காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கான பத்து பொருத்தமும் ரஜினிக்கு பக்காவாக இருக்கிறது.

    வாய்ப்பு உள்ளதா?

    வாய்ப்பு உள்ளதா?

    ஆனால் இதற்கு எல்லாம் வாய்ப்பு மிகவும் குறைவுதான். ரஜினி தற்போது பாஜகவுடன்தான் அதிக நெருக்கமாக இருக்கிறார். எவ்வளவு பிரபலமான நபர் என்றாலும் ரஜினியால் காங்கிரசில் அவ்வளவு வேகமாக வளரவெல்லாம் முடியாது.. ஆனால், இவர்தான் சூப்பர் ஸ்டார் ஆச்சே. தன்னை நோக்கி வரும் துப்பாக்கி தோட்டாக்களையே வாயில் மென்று திரும்ப துப்பி, சுட்டவனையே சோலி முடிக்கும் அபார மேஜிக்மேன் அல்லவா. எனவே காங்கிரஸ் தலைவராக ரஜினிகாந்த் ஜொலிப்பார் என்று கண்டிப்பாக நம்பலாம்!

    English summary
    Rajini Kanth can take the chief post in Congress instead of Rahul Gandhi - Here is the reason.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X