சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கெட்ட பெயர் எடுக்க வேண்டாம்.. தனி வழியில் போக ஆசைப்படும் ரஜினி.. டிசம்பர் 31ம் தேதிக்கு குறி!

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் வரை முக்கிய அரசியல் தலைவர்களிடம் இருந்து கொஞ்சம் விலகி இருக்க போகிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரஜினி அரசியல் பிரவேசம் வேலூரிலிருந்து தொடங்குமா?- வீடியோ

    சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் வரை முக்கிய அரசியல் தலைவர்களிடம் இருந்து கொஞ்சம் விலகி இருக்க போகிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். தனக்கு அவப்பெயர் வரக்கூடாது என்று அவர் விலகி நிற்க திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள்.

    காஷ்மீர் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பாஜகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார். காஷ்மீர் விவகாரத்தில் அமித் ஷா அதிரடியாக செயல்பட்டு இருக்கிறார்.

    அமித் ஷா எடுத்த முடிவுகளை வரவேற்கிறேன். அமித் ஷா யாரென்று இப்போது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று ரஜினிகாந்த் கூறினார்.

    கேள்வி

    கேள்வி

    ரஜினியின் இந்த பாஜகவிற்கு ஆதரவான பேச்சு பெரிய வைரலானது. இதனால் ரஜினி பாஜகவில் சேர போகிறாரா என்ற கேள்வி எழுந்தது. ரஜினி பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்க போகிறார். அவர் அதற்கு தயார் ஆகிவிட்டார் என்றும் கூட செய்திகள் வந்தது.

    இல்லை

    இல்லை

    ஆனால் இதை பெரும்பாலும் அதிமுகவினரும், பாஜகவை சேர்ந்தவர்களும் மட்டுமே கொண்டாடினார்கள். ரஜினியின் உண்மையான ரசிகர்கள் பலர் அவர் தனித்து இருந்தாலே போதும். யாருடனும் கூட்டணி வைக்க கூடாது. கூட்டணி வைத்தால் விஜயகாந்திற்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும் என்று அமைப்பு நிர்வாகிகள் பலர் அவரிடம் கருத்து தெரிவித்துள்ளனர்.

    மக்கள் என்ன

    மக்கள் என்ன

    அது மட்டுமில்லாமல் ரஜினி பாஜகவிற்கு ஆதரவாக பேசும் நேரங்களில் எல்லாம் சமூக வலைதளங்களில் மோசமாக விமர்சனத்திற்கு உள்ளாகிறார். குறிப்பாக காஷ்மீர் விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு, 7 பேர் விடுதலை என்று எல்லா முக்கியமான விஷயங்களிலும் அதிமுக, பாஜகவிற்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்து ரஜினி விமர்சனத்தை சந்தித்தார்.

    பெயர்

    பெயர்

    இதனால் மக்கள் மத்தியில் அவருக்கு கெட்ட பெயர் வருகிறது. வெகுஜன மக்களின் விருப்பத்திற்கு எதிராக பேசி அவர்களின் வெறுப்பை சம்பாதிக்கிறார் ரஜினி என்றும் அவருக்கு நெருக்கமான சிலர் அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். இதனால் ரஜினி சில நாட்கள் சில முக்கிய கட்சிகளிடம் இருந்து விலகி இருப்பார் என்று கூறப்படுகிறது.

    என்ன உணர்வு

    என்ன உணர்வு

    ஆம் கட்சி தொடங்கி சில நாட்கள் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் வரை அவர் தனித்து பயணிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. டிசம்பர் 31ம் தேதி 2017ல் ரஜினி கட்சி தொடங்குவதாக ரஜினி அறிவித்தார். அதேபோல் இந்த வருடம் டிசம்பரில் ரசிகர்களை சந்தித்துவிட்டு, பின் கட்சி குறித்த அறிவிப்பை டிசம்பர் 31ல் வெளியிடுவார் என்று கூறுகிறார்கள்.

    கூட்டணி

    கூட்டணி

    ஆனால் கட்சி தொடங்கி ஒரு வருடம் கூட்டணி குறித்து பேச மாட்டார். மக்களின், ரசிகர்களின் விருப்பத்தை தெரிந்து கொண்டு அதன்பின்தான் ரஜினி நடவடிக்கை எடுப்பார். இப்போதைக்கு முக்கிய அரசியல் தலைவர்களிடம் இருந்து ரஜினி விலகி இருப்பார் என்று கூறுகிறார்கள்.

    English summary
    Rajini Kanth may go in own path until he creates a party for himself says a close source.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X