சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுயலாபம்.. மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள்.. திமுகவை மறைமுகமாக சீண்டுகிறாரா ரஜினி!

தமிழக மக்களை அரசியல்வாதிகள் சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சிஏஏ சட்டத்தால் முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை - ரஜினி கருத்து

    சென்னை: தமிழக மக்களை அரசியல்வாதிகள் சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது. இதனால் நடிகர் ரஜினிகாந்த் திமுகவை மறைமுகமாக சீண்டுகிறாரா என்றும் விவாதம் எழுந்துள்ளது.

    நாடு முழுக்க சிஏஏவிற்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடந்து வருகிறது. பாஜகவிற்கு ஆதரவாக இருந்த சில தலைவர்கள் கூட சிஏஏவிற்கு எதிராக பேச தொடங்கி உள்ளனர். டெல்லியில் இதற்கு எதிராக தீவிரமாக போராட்டம் நடந்து வருகிறது.

    தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் மட்டுமே இந்த சட்டத்தை நேரடியாக ஆதரித்தது. ஆனால் தற்போது முதல்முறையாக நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக, சிஏஏவை ஆதரித்து கருத்து தெரிவிக்க தொடங்கி உள்ளார்.

     சபாஷ்.. பாஜகவுக்கு ஒரு செம சப்போர்ட்டர் கிடைத்து விட்டார்.. ரஜினியை முழுசா பயன்படுத்தலாம்! சபாஷ்.. பாஜகவுக்கு ஒரு செம சப்போர்ட்டர் கிடைத்து விட்டார்.. ரஜினியை முழுசா பயன்படுத்தலாம்!

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    நடிகர் ரஜினிகாந்த் தனது பேட்டியில், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் பாதிப்பு ஏற்படும் என மக்கள் மத்தியில் தேவையற்ற பீதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அரசியல்வாதிகள் தங்களது சுய லாபத்துக்காக தூண்டிவிடுகின்றனர். அவர்களை மக்கள் நம்ப கூடாது. மாணவர்கள் ஒரு போராட்டத்தில் இறங்குவதற்கு முன்பு யோசித்து முடிவெடுத்து இறங்க வேண்டும்.

    மாணவர்கள் தவறான வழி

    மாணவர்கள் தவறான வழி

    மாணவர்கள் தவறான வழியில் செல்ல கூடாது. அப்படி செய்தால் அவர்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக்கொள்வார்கள். யோசிக்காமல் முடிவெடுத்தால் மாணவர்களுக்குத்தான் பிரச்னை ஏற்படும். மாணவர்களின் எதிர்காலம் தான் பாதிக்கும். அவர்களின் கல்வி பாதிக்கும். இந்தியாவில் என்பிஆர் அவசியம் தேவை. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் யார் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியும்.

    இஸ்லாமியர்கள் எப்படி

    இஸ்லாமியர்கள் எப்படி

    இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் முதல் ஆளாக நான் எதிர்ப்பேன். சிஏஏவின் மூலம் இந்திய இஸ்லாமியர்களுக்கு ஏதேனும் பிரச்சினை வந்தால், தான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன். தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவை நாட்டிற்கு மிகவும் அவசியம், என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருக்கிறார்.

    திமுக

    திமுக

    தமிழக மக்களை அரசியல்வாதிகள் சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது. இதில் சில அரசியல்வாதிகள் மக்களை தூண்டி விடுகிறார்களே என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருந்தார். அவர் இதன் மூலம் திமுகவை மறைமுகமாக சீண்டுகிறாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள்தான் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

    ஸ்டாலின் என்ன செய்தார்

    ஸ்டாலின் என்ன செய்தார்

    இரண்டு நாட்களுக்கு முன்பு கூட திமுக தலைவர் ஸ்டாலின், சிஏஏவிற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தினார். சென்னையில் சாலையில் மக்களிடம்கையெழுத்து வாங்கினார். சிஏஏ தொடர்பாக ஸ்டாலின் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகிறார். திமுகவினர் பலர் சென்னையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் நாடு முழுக்க சிஏஏவை எதிர்த்து வருகிறது. இதுதான் தற்போது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.

    திமுக எதிர்ப்பு

    திமுக எதிர்ப்பு

    ஏற்கனவே முரசொலிக்கு எதிராக கருத்து தெரிவித்து திமுகவின் கோபத்தை சம்பாதித்தார் ரஜினி.அதேபோல் பெரியாருக்கு எதிராக பேசி மொத்தமாக திமுக கூட்டணி கட்சிகளிடம் வாங்கி கட்டிக்கொண்டார். இந்த முறை மக்களை சிலர் தூண்டி விடுகிறார்கள் என்று ரஜினி மறைமுகமாக, திமுகவை சீண்டி இருக்கிறார். ஒரு பக்கம் திமுகவின் உதயநிதி ஸ்டாலினுக்கும் ரஜினிக்கும் இடையில் கடுமையான வார்த்தை போர் நிலவி வருகிறது.

    உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து ரஜினியை கடுமையான விமர்சனம் செய்து வருகிறார். அப்படி இருக்கும் போது ரஜினி இப்போது வழிய சென்று திமுகவை சீண்டி உள்ளார். இதற்கு திமுக தரப்பு காட்டமாக பதில் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது தமிழகத்தில் திமுகவின் பிரதான எதிரியாக ரஜினிகாந்த் உருவெடுக்கிறாரா? திமுக எதிர்ப்பு அரசியலை அவர் கையில் எடுக்கிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Rajini Kanth's take on CAA may a politics against DMK in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X