சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கீழ் பணிந்து வேலை பார்க்கக்கூடிய நபர் அல்ல ரஜினிகாந்த்.. திருநாவுக்கரசர் பேட்டி.. பின்னணி என்ன?

நடிகர் ரஜினிகாந்த் எந்த ஒரு தலைவருக்கும் கீழ் பணிந்து வேலை பார்க்கக்கூடிய நபர் அல்ல என்று காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் பேட்டி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் எந்த ஒரு தலைவருக்கும் கீழ் பணிந்து வேலை பார்க்கக்கூடிய நபர் அல்ல என்று காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் பேட்டி அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக இரண்டு வருடங்களுக்கு முன்பு அறிவித்தார். ஆனால் அதன்பின் அவர் அரசியல் தொடர்பாக எந்த விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Rajini Kanth wont work under anyone says Congress MP Thirunavukkarasar

ஆனால் அவ்வப்போது மத்திய அரசின் நடவடிக்கைகளை பாராட்டி, பாஜகவிற்கு ஆதரவாக பேசுவார். அதேபோல் பாஜக தலைவர்களும் ரஜினிக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். இந்த நிலையில் ரஜினிகாந்த் குறித்து திருச்சி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் பேட்டி அளித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடு மிக மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. பணப்புழக்கம் இல்லாமல் பல்வேறு தொழில்கள் மூடப்பட்டு வருகிறது.

ஆட்டோமொபைல் துறை பெரிய சரிவை சந்தித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் 100 நாள் ஆட்சி மிக மிக மோசமானது. முக்கியாமாக கடந்த 5 ஆண்டு ஆட்சியை போன்றே படுதோல்வியை சந்தித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் யாருக்கும் கீழே வேலை பார்க்க கூடாது. எந்த ஒரு தலைவருக்கும் கீழ் பணிந்து வேலை பார்க்கக்கூடிய நபர் அல்ல. அவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் தனியாக கட்சி தொடங்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்திற்கு பாஜக மிகவும் நெருக்கமாகிக் கொண்டு இருப்பதால் தற்போது காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ரஜினி குறித்து கருத்து தெரிவிக்க தொடங்கி உள்ளனர் என்று கூறப்படுகிறது.

English summary
Rajini Kanth won't work under anyone says Congress MP Thirunavukkarasar in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X