• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இது லிஸ்ட்டுலேயே இல்லையே.. பிரேமா.. அமுதா.. சத்யா.. கீதா.. மாரியம்மாள்.. இன்பவள்ளி.. கலக்கும் திமுக

Google Oneindia Tamil News

சென்னை: பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்து வரும் நிலையில் மன்றத்தை பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் திமுகவில் இணைவதற்கு ஓகே சொல்லி கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ரஜினி மக்கள் மன்றமும் ஒன்று..!

அரசியலுக்கு வர போவதில்லை என்று ரஜினி அன்று அறிவித்தபோதே, ஏராளமானோர் திமுக பக்கம் வந்தனர்.. குறிப்பாக தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் ரஜினி மன்ற நிர்வாகிகள் ஸ்டாலினை சந்தித்து தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.

அப்படி திமுகவை நம்பி வந்தவர்களையும் ஸ்டாலின் கை விட்டதில்லை... முக்கிய பொறுப்புகளை தந்து அழகு பார்த்து வருகிறார்.

 விட்ருங்க.. தப்பில்லை.. ஸ்டாலின் ஏன் இப்படி செய்யறாரு.. அமைச்சரிடம் புலம்பிய புள்ளிகள்.. பரபர திமுக விட்ருங்க.. தப்பில்லை.. ஸ்டாலின் ஏன் இப்படி செய்யறாரு.. அமைச்சரிடம் புலம்பிய புள்ளிகள்.. பரபர திமுக

ஜோசப்

ஜோசப்

இதில் தூத்துக்குடி ஜோசப்புக்கு அடிச்சது யோகம்.. திமுகவில் அவருக்கு சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு இணைச் செயலாளராக முக்கிய பதவி தரப்பட்டது.. அதேபோல, லட்சுமி வேலு என்பவர் ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணியின் தலைவியாக இருந்தவர்.. இவரும் திமுகவில் இணைந்து, இப்போது முதல்வரே வியந்து போகும் அளவுக்கு வடசென்னையில் நலத்திட்டங்களை செய்து கலக்கி கொண்டிருக்கிறார்.

 ரஜினி மக்கள் மன்றம்

ரஜினி மக்கள் மன்றம்

அதாவது, ரஜினி மக்கள் மன்றத்தில் செல்வாக்கானவர்கள்.. ரொம்பவும் பிரபலம் ஆனவர்கள்.. போன்றோருக்குதான் திமுக வலைவீசி வாரி இழுத்து கொண்டது.. அந்த வகையில், இப்போது இன்னொரு சமாச்சாரமும் வெளியாகி உள்ளது.. சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி, மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்தார்... இந்தச் சந்திப்பின்போது ஒரு அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.

அறிக்கை

அறிக்கை

அதில், "கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைத்துவிட்டு, மக்கள் நலப்பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று தெரிவித்திருந்தார்... மன்றத்தை ரஜினி கலைத்துமே திமுகவுக்கு இன்னும் குஷியாகிவிட்டது. இதனால் மேலும் சில நிர்வாகிகள் ரசிகர் மன்றத்திலிருந்து விலகினர்..

திமுக

திமுக

அதன் தொடர்ச்சியாகத்தான், மன்றத்தின் மகளிர் அணி மாவட்ட செயலாளர்களும் திமுகவில் இணைய போவதாக முடிவெடுத்துள்ளனர்.. குறிப்பாக, திண்டுக்கல்லில் மாரியம்மாள், கடலூரில் சத்யா செல்வராஜ், காஞ்சிபுரத்தில் விஜய லட்சுமி ரோபர்ட், தஞ்சாவூரில் அமுதா, திருவண்ணாமலையில் கவிதா, கோயம்புத்தூரில் கீதா கலைவாணி, விழுப்புரத்தில் யமுனா, திருவள்ளூரில் சத்யா மகாலட்சுமி, நீலகிரியில் பிரேமா, மதுரையில் இன்பவள்ளி போன்ற ரஜினி மக்கள் மன்றத்தின் மகளிர் அணி மாவட்டச் செயலாளர்கள் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளனர்.

 லட்சுமி வேலு

லட்சுமி வேலு

திமுக வடசென்னை தொண்டரணி துணைச் செயலர் லட்சுமி வேலுவைச் சந்தித்த இவர்கள், தாங்கள் திமுகவில் இணைந்து கொள்வதாக தெரிவித்துள்ளனர்... ஆக மொத்தம் இதெல்லாம் லட்சுமி வேலுவின் வேலையாகத்தான் தெரிகிறது.. எப்படியோ, அடுத்தடுத்த லெவலுக்கு திமுக சென்று கொண்டிருக்கிறது.. மன்றம் கரைந்து கொண்டிருக்கிறது..!

English summary
Rajini Makkal Mandram women District Secretaries joins DMK Soon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X