சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவரே ஆளைவிட்டால் போதும் என ஓடுகிறார்.. விடாது கருப்பாய் பிரசாரத்துக்கு போகும் ரஜினி ரசிகர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவிரும்பவில்லை என சூசகமாக சொன்னதையும் கூட ஏற்க முடியாமல் அவரது சிந்தனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பிரசாரத்தை தொடங்கப் போவதாக வரிந்து கட்டுகின்றனர் ரசிகர் மன்ற நிர்வாகிகள்.

2021 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என்று அறிவித்த ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்கப் போவதாகவும் தெரிவித்தார். ஆனால் அவர் அரசியல் கட்சியை தொடங்குவதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் சினிமாவில் மட்டுமே நடித்தது சர்ச்சையானது.

இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாக ரஜினி பேசியது ஏன்?.. பரபரப்பை கிளப்பிய மாவட்டச் செயலாளர் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாக ரஜினி பேசியது ஏன்?.. பரபரப்பை கிளப்பிய மாவட்டச் செயலாளர்

ஆட்சிக்கு ஒரு தலைமை கட்சிக்கு ஒரு தலைமை

ஆட்சிக்கு ஒரு தலைமை கட்சிக்கு ஒரு தலைமை

இதனையடுத்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தமது கொள்கைகள் என சில விஷயங்களைக் குறிப்பிட்டார். மக்களிடம் அரசியல் எழுச்சி வரவேண்டும். அதன் பின்னர் அரசியலுக்கு வருவேன் என்றார். அத்துடன் ஆட்சிக்கு ஒரு தலைமை கட்சிக்கு ஒரு தலைமை என ஆர்.எஸ்.எஸ்- பாஜக பாணி முழக்கத்தை முன்வைத்தார்.

அரசியலுக்கு வரவில்லை?

அரசியலுக்கு வரவில்லை?

ரஜினிகாந்தின் இந்த அறிவிப்புகள் அனைத்துமே அவர் உடனே அரசியல் கட்சியை தொடங்கப் போவதும் இல்லை. அரசியலுக்கே அவர் வரவும்மாட்டார் என்பதற்கான சமிக்ஞைகளாகவே பார்க்கப்பட்டன. இதனால் ரஜினிகாந்த் தமிழக தேர்தல் களத்தில் இல்லை என்கிற ஒரு சூழ்நிலை உருவாகி உள்ளது. ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிளில் புரிந்து கொண்டவர்கள் அவருக்கு குட்பை சொல்லத் தொடங்கிவிட்டனர்.

ரஜினியின் சிந்தனைகளாம்

ரஜினியின் சிந்தனைகளாம்

ஆனாலும் சில ஆர்வ கோளாறுகள், ரஜினிகாந்த் அறிவித்தது அனைத்தும் சிந்தனைகள் என முட்டுக் கொடுக்க முன்வந்துள்ளன. இந்த சிந்தனைகளை தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பரப்பவும் போகிறார்களாம். இதற்காக திண்ணை பிரசாரம் முதல் ஹை டெக் பிரசாரம் வரை அனைத்தையும் ரெடி செய்கிறார்களாம்.

வீடு தோறும் பிரசாரமாம்

வீடு தோறும் பிரசாரமாம்

மேலும் முதல்வர் பதவியை விரும்பாதவர் ரஜினிகாந்த் என்பதை முன்வைத்து அவர் பேச்சை 50,000 துண்டு பிரசுரங்களாக அச்சடித்தும் பொதுமக்களிடம் விநியோகிக்க உள்ளனராம் ரசிகர் மன்ற நிர்வாகிகள். இதில் பொதுமக்களை கேள்வி கேட்க வைத்து அதற்கும் பதில் தருவதற்கும் தயராக செல்கின்றனராம் நிர்வாகிகள். இது தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டும் வருகிறதாம்.

இருந்து என்ன பயன்?

English summary
Rajini Makkalm Mandram Seniors said that they will start campaign for Rajinikanth on basis of his last week press meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X