சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆடி அமாவாசை நாளில் மாஸ்க் போட்டு மாஸ் ஆக கிளப்பிய ரஜினி - அரசியல் ஆலோசனையா?

ஆடி அமாவாசை நாளில் ரஜினிகாந்த் முகக்கவசத்துடன் கார் ஓட்டிச் செல்லும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலானது. ரஜினி ஓட்டிச் செல்வது லம்போர்கினி கார் என்பதால் அவரது ரசிகர்கள் #ThalaivarRide

Google Oneindia Tamil News

சென்னை: ஆடி அமாவாசை தினமான நேற்று ரஜினி மாஸ்க் போட்டு காரில் செல்லும் போட்டோ வெளியாகியுள்ளது. எப்போதுமே ஜோதிடரின் ஆலோசனையை கேட்கும் ரஜினி, ஆடி அமாவாசை நல்ல நாள் என்பதால் நேற்று கட்சி ஆலோசனை எதுவும் செய்திருப்பாரோ என்று பலரும் பேசத் தொடங்கியுள்ளனர்.

Recommended Video

    Rajinikanth Royal Look in Lamborghini Goes Viral

    ரஜினி அமைதியாக இருந்தாலும் செய்தி வீட்டை விட்டு கிளம்பினாலும் செய்தி மெழுகுவர்த்தி ஏற்றினாலும் அது செய்தி. அப்படித்தான் அவர் நவம்பரில் கட்சி ஆரம்பிப்பார் என்று அவரது ஆதரவாளர் ஒருவர் சொன்னார். அதுவரைக்கும் ரஜினி என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி வந்தது. நவம்பரில் கட்சி ஆரம்பித்து சட்டசபைத் தேர்தலுக்கு தயாராகி விடுவாரா என்ற கேள்வி வந்தது இந்த நிலையில்தான் ரஜினி மாஸ்க் போட்டு காரில் செல்வது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

    ரஜினிகாந்த் என்றைக்கு அரசியல் பேச ஆரம்பித்தாரோ அன்றில் இருந்தே அவரது ஒவ்வொரு பேச்சையும் நடவடிக்கையையும் உன்னிப்பாக கவனிக்கின்றனர். அப்படித்தான் ரஜினி லம்போர்கினி சொகுசு காரில் மாஸ்க் போட்டுக்கொண்டு டிரைவ் செய்த போட்டோ வெளியான உடனேயே #ThalaivarRide # Lion in Lamborghini என்ற ஹேஸ்டேக் போட்டு ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

    ரஜினியின் மாஸ்க் மாஸ்

    ரஜினியின் மாஸ்க் மாஸ்

    லம்போர்கினி சொகுசு காரில், டிரைவர் சீட்டில் அமர்ந்தபடி ரஜினிகாந்த டிரைவ் செய்கிறார். அவர் முக கவசம் அணிந்து இருப்பதும் தெரிகிறது. பக்கவாட்டில் இருந்து யாரோ இந்த போட்டோவை எடுத்திருக்கிறார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சினிமா சூட்டிங் ரத்தான உடன் சென்னை திரும்பிய ரஜினி அவ்வப்போது வெளியே தலைகாட்டி வருகிறார். மோடி சொன்னதைக் கேட்டு மெழுகுவர்த்தி ஏற்றினார். சாத்தான்குளம் சம்பவம் பற்றி கருத்து சொன்னார். இந்த நிலையில்தான் ரஜினி அரசியல் கட்சியை நவம்பரில் தொடங்கலாம் என்று சொன்னார் கராத்தே தியாகராஜன்.

    ஏழரை சனி ரஜினிக்கு

    ஏழரை சனி ரஜினிக்கு

    ரஜினிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி தொடங்கியுள்ளது. ரஜினி எப்போது கட்சி தொடங்கினாலும் அவர் தமிழக முதல்வராக வலம் வரக்கூடிய யோகம் அவருக்கு இருக்கிறது என்று கேரளா ஜோதிடர்கள் கூறியுள்ளார்களாம். 160 சீட் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் நம்பிக்கை தந்திருக்கிறார்களாம்.

    தேர்தல் களத்தை சந்திப்பாரா

    தேர்தல் களத்தை சந்திப்பாரா

    ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தல் களத்தை சந்தித்தால் மட்டுமே மக்களுக்கு அவரிடம் உள்ள செல்வாக்கும் அவருடைய உண்மையான பலமும் தெரியவரும். ட்விட்டரில் அரசியல் பேசுவதால் மட்டுமே வாக்குகள் தானாக வந்து விடாது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அதே நேரத்தில் ரஜினியின் ஒவ்வொரு செயல்பாட்டினையும் அரசியல் கட்சியினர் உற்று நோக்கி வருகின்றனர்.

    சொகுசு காரில் வலம் வந்த ரஜினி

    சொகுசு காரில் வலம் வந்த ரஜினி

    நவம்பரில் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று கராத்தே தியாகராஜன் கருத்து சொன்ன போதோ, கொரோனா காலத்தில் அனைத்து அரசியல் கட்சியினரும் உயிரை பணயம் வைத்து களம் இறங்கி வேலை செய்து வருகின்றனர். கட்சி தொடங்க வேண்டும் என்று நினைக்கும் தலைவர் கொரோனா வைரஸ் முடியட்டும் என்று காத்திருக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினர்.

    ஆடி அமாவாசையில் ஆலோசனை

    ஆடி அமாவாசையில் ஆலோசனை

    இந்த நிலையில்தான் மாஸ்க் போட்டு சொகுசு காரில் மாஸ் ஆக வலம் வருவது போன்ற போட்டோவை போட்டிருக்கிறார் ரஜினி. ரஜினியின் பயணம் அரசியலை நோக்கியதா? அல்லது அடுத்து ஏதாவது புதுப்பட விவாதமா என்று அவராகவே வாயைத் திறந்து சொன்னால்தான் தெரியும். ரஜினி சொல்லும் வரை காத்திருப்போம்.

    English summary
    Rajinikanth was driving a car Lamborghini. He can be seen wearing a mask as per the government rules and also wearing a seat belt for safety.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X