சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ட்விட்டர் டிரெண்டிங்கில் ரஜினியின் 'தர்பாரை' வீழ்த்திய பாமகவின் தமிழினப்போராளி80 ஹேஷ்டேக்!

Google Oneindia Tamil News

சென்னை: ட்விட்டர் டிரெண்டிங்கில் நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் ஹேஷ்டேக்கை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 80-வது பிறந்த நாளை கொண்டாடும் பாமகவினரின் தமிழினப்போராளி80 என்கிற ஹேஷ்டேக் தொடர்ந்து பின் தள்ளிக் கொண்டே இருக்கிறது.

டாக்டர் ராமதாஸின் 80-வது பிறந்த நாள் முத்து விழாவாக இன்று கொன்டாடப்படுகிறது. இன்று காலை முதல் ட்விட்டரில் இந்திய அளவிலான டிரெண்டிங்கில் #தமிழினப்போராளி80 என்ற ஹேஷ்டேக் முதலிடத்தில் இருந்து வருகிறது.

Rajinis Darbar Hastag clashes with PMK in Twitter Trending

ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதற்காக உருவாக்கப்பட்ட #Darbar என்ற ஹேஷ்டேக் பெரும் போராட்டத்துக்குப் பின்னர் 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

'உங்கள் பதில் திருப்தி அளிக்கவில்லை'..... முதல் நாளிலேயே ஸ்மிருதி இரானியுடன் வைகோ மல்லுக்கட்டு 'உங்கள் பதில் திருப்தி அளிக்கவில்லை'..... முதல் நாளிலேயே ஸ்மிருதி இரானியுடன் வைகோ மல்லுக்கட்டு

நடிகர் ரஜினிகாந்துக்கு ஒரு காலத்தில் பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ரஜினியின் பாபா திரைப்படம் படுதோல்வி அடைய பாமக முக்கிய காரணமாக இருந்தது. பாபா திரைப்பட பெட்டியை பறித்துக் கொண்டு பாமகவினர் முந்திரி காடுகளில் பதுங்கியது வரலாறு.

ரஜினிகாந்த் மீது அவ்வளவு கோபத்தை காட்டியது பாமக. 2 ஆண்டுகளுக்கு முன்னர் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸை சிறந்த நிர்வாகி என பாராட்டினார் ரஜினிகாந்த். அப்போது ரஜினிகாந்த், பாமகவை ஆதரிக்க வேண்டும் என்றார் அன்புமணி. இருதரப்புக்கும் இடையே இணக்கமான சூழல் உருவானதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் யதேச்சையாக டிவிட்டர் டிரண்டிங்கில் இருதரப்பும் மோதிக் கொள்ளும் சூழல் உருவாகியிருக்கிறது. டிரெண்டிங்கில் தர்பார் பின்னுக்கு தள்ளப்பட்டதை தொடர்ந்து எல்லா இடத்திலும் ரஜினிக்கு செக் வைக்கிறது பாமக என கமெண்ட் போடுகின்றனர் ட்வீட்டிஸ்டுகள்.

English summary
Rajinikanth's Darbar Hastag clash with PMK in twitter Trending.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X