சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மேடையில் ஏன் அவர் இருந்தார்? என்ன ஆச்சு? ரஜினியின் காஷ்மீர் பேச்சுக்கு பின் இருக்கும் முக்கிய நபர்!

நடிகர் ரஜினிகாந்த் பாஜகவிற்கு ஆதரவாக பேசியதற்கு பின் முக்கிய புள்ளி ஒருவர் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Rajini Praises Amit shah | காஷ்மீரை இரண்டாக பிரித்த அமித்ஷா..ரஜினிகாந்த் அதிரடி பாராட்டு!

    சென்னை: நடிகர் ரஜினிகாந்த் பாஜகவிற்கு ஆதரவாக பேசியதற்கு பின் முக்கிய புள்ளி ஒருவர் இருப்பதாகவும், பல்வேறு அரசியல் திட்டங்கள் இதற்கு பின் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை கலைவாணர் அரங்கில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய "கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்" என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக தலைவர்கள் மற்றும் ரஜினிகாந்த், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை புகழ்ந்து பேசினார். அவரின் பேச்சு பெரிய சர்ச்சையானது.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    ரஜினி தனது பேச்சில், காஷ்மீர் விவகாரத்தில் அமித் ஷா அதிரடியாக செயல்பட்டு இருக்கிறார். அமித் ஷா எடுத்த முடிவுகளை வரவேற்கிறேன். அமித் ஷா யாரென்று இப்போது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று கூறினார். இந்த பேச்சு பெரிய வைரலானது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    அதே சமயம் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அதே மேடையில் அரசியல் கட்சி எதையும் சாராத இன்னொரு நபரும் இருந்தார். தமிழக அரசியலில் கடந்த சில வருடங்களாக அந்த ஆடிட்டர் முக்கிய காய்களை நகர்த்தி வருகிறார். தற்போது டெல்லியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அவருக்கு மீண்டும் தமிழக அரசியலில் சில டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்கிறார்கள்.

    யார் அவர்

    யார் அவர்

    அதிமுகவை பாஜகவுடன் இணக்கமாக மாற்றுவதற்கு அந்த நபர்தான் உதவினார் என்ற பேச்சும் இருக்கிறது. ஓபிஎஸ், இபிஎஸ் இணைப்பிற்கு கூட இவர்தான் காரணம். தர்மயுத்தத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுத்ததே அவர்தான் என்றும் கூறப்படுகிறது. அந்த முக்கிய புள்ளிதான் காஷ்மீர் குறித்து ரஜினி பேசிய அதே மேடையில் இருந்தார்.

    டாஸ்க்

    டாஸ்க்

    அவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் புதிய டாஸ்க் ரஜினியை கட்சி தொடங்க வைத்து கூட்டணி அமைப்பதுதான் என்கிறார்கள். அதாவது ரஜினியை இந்த வருட இறுதிக்குள் கட்சி தொடங்க வைத்து, பின் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்க போவதாக தெரிவிக்கிறார்கள். இதற்கு வழிகாட்டத்தான் அந்த ஆடிட்டர் மேடையில் இருந்தார் என்றும் கூறுகிறார்கள்.

    மாட்டேன்

    மாட்டேன்

    முதலில் இந்த நிகழ்ச்சிக்கு வர மாட்டேன் என்று கூறிய ரஜினி, பின் அந்த ஆடிட்டர் கூப்பிட்டதும் மனம்மாறி வந்து இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். ரஜினியின் பேச்சு கூட இவரின் கோரிக்கையின் அடிப்படையிலேயே அமைந்தது என்றும் கூறுகிறார்கள். அந்த மிக முக்கியமான புள்ளி ரஜினியை சில நாட்களுக்கு முன்பே சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    அதிரடி பிளான்

    அதிரடி பிளான்

    அந்த முக்கிய நபர் தமிழகத்திலேயே இருந்து ரஜினியுடன் இனி பேசுவார். கட்சி தொடங்கி கூட்டணியை அமைக்கும் வரை அவர் உடன் இருப்பார். இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் முக்கிய அறிவிப்புகள் வரும் என்றும் கூறுகிறார்கள். அந்த முக்கிய புள்ளி ரஜினியின் குடும்பத்தினருக்கும் நெருக்கமான நபர் என்பது குறிப்பிடத்தக்கது .

    மன்றம்

    மன்றம்

    ஆனாலும் ரஜினியின் மக்கள் மன்றத்தில் இருக்கும் சில நபர்கள் அந்த முக்கிய புள்ளியின் வருகையை விரும்பவில்லை என்று கூறுகிறார்கள். அவர் பாஜகவிற்கு நெருக்கமானவர். அவர் ஏன் மேடையில் இருந்தார். ரஜினி பாஜகவிற்கு ஆதரவாக சென்றால் மக்கள் விரும்பமாட்டார்கள். மன்றத்திலே சில பிரச்சனை வரும் என்று அவருக்கு சிலர் அறிவுரை வழங்கி இருக்கிறார்கள்.

    English summary
    Rajini's speech on Kashmir triggered a lot of question on his political idea and plan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X