சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்ன நடக்கிறது... ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த கமல்ஹாசன்... தமிழிசை வரவேற்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    Kamal Press meet | திமுகவை நேராவாகவே விமர்சனம் செய்வேன் : கமல்ஹாசன்

    சென்னை: ரஜினி மற்றும் அஜித் அறிக்கை விட்டால் பாஜகவுக்கு பாதகம் எனக் கூறுவது தவறு என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை என்ற ரஜினியின் அறிக்கை எந்த விதத்திலும் பாஜகவுக்கு பாதகத்தை ஏற்படுத்தாது என்றும் அவர் அறிக்கை தெளிவான அறிக்கை என்றார்.

    Rajinis statement will in no way disrupt the BJP Says Tamilisai Soundararjan

    எங்களை பொறுத்தவரை அறிக்கையை நேர்மையாக தான் பார்க்கிறோம் என்றும், அப்போதே நதிநீர் இணைப்புக்கு ரூ.1 கோடி கொடுத்தவர் ரஜினிகாந்த் எனவும் கூறினார்.

    டெல்லி இல்லாமல் தமிழகம் இல்லை; தமிழகம் இல்லாமல் டெல்லி இல்லை என்ற கமல்ஹாசனின் கருத்து வரவேற்கதக்கது. சட்டையை கிழித்து வர மாட்டேன், புதிய சட்டையுடன் தான் வருவேன் என கமல்ஹாசன் சொல்வது சரியானது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல்ஹாசன், நான் சட்டமன்றத்தில் கூட சட்டையைக் கிழித்துக் கொள்ள மாட்டேன், அப்படியே கிழிந்தாலும் வேறு சட்டை மாற்றிக்கொண்டு தான் வருவேன் என்று மு. க. ஸ்டாலின் பற்றி கமல்ஹாசன் மறைமுக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Kamal Hassan's comment on Stalin is welcome Says Tamilisai Soundararjan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X