• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

எந்த 7 பேர்?.... எனக்குத் தெரியாதே?... ஷாக் கொடுத்த ரஜினி பதில்!

|
  பணமதிப்பிழப்பு நீக்கத்தை அமல்படுத்திய முறை தவறு.. ரஜினிகாந்த்- வீடியோ

  சென்னை: ராஜீவ் காந்தி கொலைக்குற்ற வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை குறித்த கேள்விக்கு எந்த 7 பேர் இது பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன். இப்போ தான் கேக்குறேன் உடனே என்னுடைய நிலைப்பாடு என்னன்னு கேட்டா என கடுப்பாகி நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.

  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை பற்றி தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும் நன்றாகவே தெரியும். அட வரலாறு தெரியலன்னா கூட கடந்த 2 நாட்களாக தினசரி செய்தித்தாள் படிச்சிருந்தாலாவது யார் இந்த 7 பேர் என்ற விஷயம் தெரிந்திருக்கும்.

  முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு 2016ம் ஆண்டு அனுப்பப்பட்டது. அந்த மனுவை மத்திய அரசு ஜனாதிபதிக்கு அனுப்பவே இல்லை என்ற உண்மை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளிவந்துள்ளது.

  [அப்படின்னா அப்படித்தானாம்.. பாஜகவிற்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணியை நக்கலடித்த ரஜினிகாந்த்! ]

  அரசியல் பகடைக்காய்கள்

  அரசியல் பகடைக்காய்கள்

  முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுவிடுவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்த 7 பேரின் குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். தமிழக அரசியலில் தொடர்ந்து பகடைக்காய்களாக பயன்படுத்தப்படுவது 7 பேரின் விடுதலை விவகாரம்.

  எனக்கு தெரியாதே

  எனக்கு தெரியாதே

  இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்திடம் 7 பேரின் விடுதலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு எந்த 7 பேர் என்று கேட்டிருக்கிறார். ராஜீவ் கொலை குற்றவழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரைவிடுதலை செய்யக் கோரும் தீர்மானத்தை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லையே அது பற்றிய உங்களது கருத்து என்று கேட்டதற்கு நான் இப்போது தான் வருகிறேன் எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்கிறார்.

  அதான் சொன்னேன்ல தெரியாதுன்னு

  அதான் சொன்னேன்ல தெரியாதுன்னு

  மற்ற கேள்விகளுக்கு பதில் அளித்த பின்னர் மீண்டும் இது பற்றி இன்னொரு செய்தியாளர் கேட்டார். அதான் தெரியாதுன்னு சொன்னேனே என்று கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு கோபத்தை காட்டினார் ரஜினி.

  இது சரியா ரஜினி சார்

  இது சரியா ரஜினி சார்

  7 பேர் விடுதலைக்கான தீர்மானத்தை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது தெரியாது என்று சொல்வதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம், எந்த 7 பேர் விவகாரம் என்று கேட்டதை தான் எப்படி ஏற்றுக் கொள்வது என்று தெரியவில்லை.

  தலைவருக்கு அழகா

  தலைவருக்கு அழகா

  தமிழகத்தில் சிறு பிள்ளைக்குக் கூட தெரியும் 7 பேர் விடுதலை என்றால் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களைத் தான் சொல்கிறார்கள் என்று. ஆனால் தமிழகத்தில் நல்ல தலைவர் இல்லை, தலைவருக்கு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லும் ரஜினி இதைத் தெரியாது என்று சொல்கிறாரே. அரசியல் தலைவராக தன்னை உருவகப்படுத்திக் கொள்ளும் ரஜினிக்கு அது தெரியாமல் இருப்பது ஆச்சரியம் இல்லை, தமிழகத்தின் முதலமைச்சராக வர நினைப்பவர் இப்படி இருந்தால் எதிர்காலத்தில் இது யாருக்கு ஆபத்தாக இருக்கும்.

   
   
   
  English summary
  Rajinikanth replied to the question about Rajiv assasination case convicts who were jailed for over 27 years that he didnt know about who is those 7.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more