சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இவருக்கு இவ்வளவு தில்லா!.. பாராட்டிய பாஜகவின் தேசிய தலைகள்.. ரஜினியை வைத்து அமித் ஷா ஆடும் கேம்!

பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியதும், தன்னுடைய நிலைபாட்டில் அவர் உறுதியாக இருந்தது, தேசிய பாஜக தலைவர்களை சந்தோசத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பெரியார் பற்றிய கருத்து.. ரஜினிகாந்த் பரபர பேட்டி - வீடியோ

    சென்னை: பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியதும், தன்னுடைய நிலைபாட்டில் அவர் உறுதியாக இருந்தது, தேசிய பாஜக தலைவர்களை சந்தோசத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

    பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது தொடர் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முக்கியமாக அரசியல்வாதிகள், திரை உலகினர், தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    ராமருக்கு எதிராக பெரியார் பேரணி செய்தார். இதில் ராமருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. சீதை புகைப்படம் எடுத்து செல்லப்பட்டது, இது மிகவும் தவறு என்று ரஜினி குறிப்பிட்டார். மேலும் நடிகர் ரஜினி காந்த் பெரியார் குறித்த கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது.பெரியார் குறித்து நான் பேசியது தவறானது கிடையாது, என்றுள்ளார்.

     சைலண்ட் மோடில் அதிமுக.. ஜெ.பாணியில் எடப்பாடியார்.. ரஜினி பற்றி கப்சிப்.. நிர்வாகிகளுக்கு உத்தரவு? சைலண்ட் மோடில் அதிமுக.. ஜெ.பாணியில் எடப்பாடியார்.. ரஜினி பற்றி கப்சிப்.. நிர்வாகிகளுக்கு உத்தரவு?

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் ரஜினி முதலில் இப்படி எல்லாம் பேச மாட்டார் என்றுதான் பாஜகவின் தேசிய தலைகள் நினைத்துக் கொண்டு இருந்தனர். பாஜகவிற்கு ஆதரவாக அவ்வப்போது ரஜினி பேசுகிறார். இருந்தாலும் நேரடியாக அவர் ஆதரவு தரவில்லை. அதோடு பாஜக எனக்கு காவி சாயம் பூச பார்க்கிறது என்றும் கூட பேசி, பாஜகவை ரஜினி அதிர்ச்சி அடைய வைத்தார்.

    பெரியார் விஷயம்

    பெரியார் விஷயம்

    இதனால் பெரியார் விஷயத்தில் ரஜினி எப்படியும் மன்னிப்பு கேட்பார். காவிரி பிரச்சனையின் போதே, ரஜினி கர்நாடக தலைவர்களிடம் மன்னிப்பு கேட்டவர்தான். அவருக்கு இதெல்லாம் புதிதல்ல. அதனால் கண்டிப்பாக ஒரு அப்பாலஜி லெட்டரை அவர் தயார் செய்து கொண்டு இருப்பார் என்றுதான் பாஜக நினைத்தது. ஆனால் ரஜினி உறுதியாக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.

    உறுதியான நிலைப்பாடு

    உறுதியான நிலைப்பாடு

    அதோடு பெரியாருக்கு எதிராக தன்னுடைய நிலைப்பாட்டை மிக உறுதியாக ரஜினி கூறிவிட்டார். இத்தனை நாட்கள் பெரியார் என்ற மாபெரும் பிம்பத்தை உடைக்க முடியாமல், ஏன் எதிர்க்க கூட முடியாமல் பாஜக திணறி வந்தது. தற்போது பெரியாருக்கு எதிராக ரஜினியை முன்னிறுத்த பாஜக முடிவு செய்துள்ளது. பெரியார் குறித்து ரஜினியை இனி அதிகம் பேச வைக்க வேண்டும் என்று பாஜக முடிவு செய்துள்ளது.

    அரசியல் என்ன

    அரசியல் என்ன

    தமிழகத்தில் ரஜினியை முன்னிறுத்தி அரசியல் செய்ய பாஜக கடந்த சில மாதங்களாக திட்டமிட்டு வருகிறது. அதற்கு மிகப்பெரிய தொடக்கமாக நேற்றைய பேட்டியை பாஜக தலைவர்கள் பார்க்கிறார்கள். ரஜினி அறிவித்த ஆன்மீக அரசியல் இதுதான். அவரின் ஆன்மீக அரசியல், பாஜகவின் அரசியல்தான் , இரண்டிற்கும் வித்தியாசம் இல்லை என்று இப்போதே பாஜகவின் மூத்த தலைகள் கூறி வருகிறார்கள்.

    செம சந்தோசம்

    செம சந்தோசம்

    நேற்று ரஜினியின் பேட்டியை பார்த்த பாஜக தமிழக தலைவர்கள் செம சந்தோசத்தில் ஆழ்ந்தனர். இன்னும் போக, தேசிய பாஜக தலைவர்கள் ரஜினிக்கு போன் செய்தும் கூட பாராட்டி உள்ளனர். ரஜினிக்கு இவ்வளவு தில் இருக்கா, செம பாஸ் என்று ரஜினியை பாராட்ட தொடங்கி உள்ளனர். தமிழகத்தில் அரசியல் செய்ய தேசிய பாஜக இப்படி ஒரு நபரைத்தான் தேடி வந்தது.

    யார் வழி

    யார் வழி

    தமிழகத்தில் பாஜகவிற்கு மூத்த தலைவர்கள் இருந்தாலும், மக்களின் அபிமானம் மிக்க தலைவர்கள் யாரும் இல்லை. தமிழிசைக்கு கொஞ்சம் பெண்கள் ஆதரவு இருந்தது. ஆனால், அவரும் இப்போது தெலுங்கானா சென்றுவிட்டார். இதனால் தமிழக பாஜகவிற்கு ரஜினியை தவிர வேறு வழியில்லை. இதனால் இனி தமிழக பாஜகவின் முகமாக ரஜினி முன்னிறுத்தப்படுவார் என்கிறார்கள்.

    யார் வேட்பாளர்

    யார் வேட்பாளர்

    2021 சட்டசபை தேர்தலுக்காக இந்த மாத இறுதியில் இருந்து வேட்பாளரை தேர்வு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது. இதன்பின் ரஜினியை வைத்து பெரிய மாநாடு நடத்தவும் பாஜக முடிவு செய்துள்ளது என்கிறார்கள். வரும் மார்ச் இறுதிக்கும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நாட்டவும், அமித் ஷாவும், ரஜினியும் நேரில் சந்திக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறுகிறார்கள்.

    English summary
    Actor Rajinikanth comment on Periyar makes national BJP leaders happy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X