சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தணிக்கை செய்த படத்திற்கு எதிராக போராடுவதா... சட்டத்திற்கு புறம்பான செயல் என ரஜினி கண்டனம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சர்க்காருக்கு எதிரான போராட்டத்திற்கு நடிகர்கள் கண்டனம்- வீடியோ

    சென்னை : தணிக்கை செய்த படத்தில் இருந்து காட்சிகளை நீக்க தவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்படுதும், பேனர்களை சேதப்படுத்துவதும் சட்டத்திற்கு புறம்பான செயல் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இத்தகைய செயல்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் அதிமுகவை விமர்சனம் செய்தும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்தும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிதுமுகவினர் குற்றம்சாட்டினர்.

    படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று அதிமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தியும் வந்தனர். இந்த விவகாரம் நேற்று விஸ்வரூபம் எடுத்தது.

    [ஏ.ஆர். முருகதாஸ் வீட்டிற்கு சென்ற போலீஸ்... நள்ளிரவில் தீயாய் பரவிய கைது செய்தி! ]

    போராட்ட களமான தமிழகம்

    போராட்ட களமான தமிழகம்

    தமிழகம் முழுவதும் சர்கார் திரையிடப்பட்ட திரையரங்குகள் முன்பு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்கார் படத்திற்காகவும், நடிகர் விஜய்க்காகவும் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டன. இதனால் பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

    தியேட்டர்களுக்குப் பாதுகாப்பு

    தியேட்டர்களுக்குப் பாதுகாப்பு

    சென்னையில் சர்கார் திரையிடப்பட்ட 68 தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதோடு, முன்எச்சரிக்கையாக பேனர்களும் அகற்றப்பட்டன. பதற்றம் குறையும் வரை சென்னையில் திரையரங்குகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு இருக்கும் என்று சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

    படக்குழு சம்மதம்

    படக்குழு சம்மதம்

    சர்கார் படத்திற்கு தொடர்ந்து எழுந்த சர்ச்சையால் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழு ஒப்பு கொண்டுள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு உரிய சென்சார் அனுமதி பெற்று பின்னர் படம் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நடிகர்கள் எதிர்ப்பு

    நடிகர்கள் எதிர்ப்பு

    இதனிடையே சர்கார் படத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்பிற்கு நடிகர் கமல்ஹாசன், விஷால் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்சார் செய்யப்பட்ட ஒரு படத்தில் இருந்து காட்சிகளை நீக்கச் சொல்வது சரியானதல்ல என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    சட்டத்திற்கு புறம்பான செயல்

    இந்நிலையில் நள்ளிரவில் சர்கார் திரைப்பட சர்ச்சை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள ரஜினிகாந்த, தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Rajinikanth condemns protest and banner tearing against Sarkar movie as the movie is already certified it is not fare to demand the scenes cut.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X