சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பவுலிங்கா? பீல்டிங்கா? பாணியில் பேசிய ரஜினி.. அது என்ன "மதச்சார்பற்ற" ஆன்மீக அரசியல்?.. புரியலையே!

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மதசார்பற்ற ஆன்மீக அரசியல் தொடங்க போவதாக அறிவித்து இருப்பது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசியலில் காலடி எடுத்து வைக்க போகிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். டிசம்பர் 31ம் தேதி முறையான அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை எதிர்பார்த்து பல மாமாங்கமாக காத்து இருந்த அவரின் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு சந்தோசம் கொடுத்துள்ளது. தேர்தலில் வெற்றிபெற முடியுமா என்பதை எல்லாம் தாண்டி இந்த அறிவிப்பையே ரஜினி ரசிகர்கள் திருவிழா போல கொண்டாட தொடங்கிவிட்டனர்.

விமர்சனம்

விமர்சனம்

ஆரம்பத்தில் ரஜினியை மிக கடுமையாக விமர்சித்தது சுப்பிரமணியன் சுவாமிதான்.. "பல வருஷமாக அரசியலுக்கு வருகிறேன் என சொல்லி கொண்டு இருப்பது நாடகம்.. ரஜினி ஒரு படிக்காத முட்டாள் என்பது முதல் அவன், இவன் என்று ஒருமையில் பேசி சர்ச்சையில் சிக்கியரும் இதே சாமிதான்.

ரஜினி ரசிகர்கள்

ரஜினி ரசிகர்கள்

ஏன் ரஜினி ரசிகர்களே.. ஓகே தலைவர் ஆன்மீக அரசியல்தான் செய்ய போகிறார் என்று செட்டாகி இருந்தனர். ஆனால் திடீர் என்று தற்போது ஆன்மீக அரசியலுக்கு முன் மதசார்பற்ற என்ற வார்த்தையை ரஜினி சேர்த்து இருக்கிறார். அதாவது ஜாதி, மதசார்பாற்ற ஆன்மீக அரசியல் செய்ய போகிறேன் என்று கூறிஉள்ளார். ஆம் புளியோரத்தைக்கு சிக்கன் குழம்பு ஊற்றியது போல ஒரு காம்பினேஷன்!

குழப்பம்

குழப்பம்

ஆன்மீகம் என்று வந்துவிட்டாலே அதில் ஒருவகையில் மதமும் கூடவே வந்துவிடும். அப்படி இருக்கும் போது கட்சி செக்யுலராக இருக்கும் என்று ரஜினி கூறுவது எந்த வகையில் சரியாக இருக்கும் என்று பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆன்மீகத்தையும் மதசார்பற்ற அரசியலையும் எப்படி சேர்த்து செய்ய ரஜினி நினைக்கிறார்.

எப்படி இருக்க வேண்டும்

எப்படி இருக்க வேண்டும்


ரஜினியின் மனதில் என்ன மாதிரியான திட்டம் இருக்கிறது என்ற குழப்பம் இங்குதான் ஏற்பட்டுள்ளது . ஒன்று கட்சி ஆன்மீக கட்சியாக இருக்க வேண்டும், இல்லையென்றால் மதசார்பற்ற கட்சியாக இருக்க வேண்டும், இல்லை கமல்ஹாசன் போல மய்யமாக இருக்க வேண்டும்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இரண்டும் இல்லை.. இரண்டும் சேர்த்து அரசியல் செய்ய போகிறேன் என்று ரஜினி கூறியுள்ளார். பொதுமக்களை மட்டுமின்றி ரஜினி ரசிகர்களையும், அவரை நம்பி இருக்கும் சில கட்சிகளையும் குழப்பி இருக்கிறார். சென்னை 600028 படத்தில் நடிகர் சண்முக சுந்தரம் டாஸ் போட்டுவிட்டு பவுலிங்கா பேட்டிங்கா என்று கேட்பதற்கு பதிலாக பவுலிங்கா பீல்டிங்கிங்கா என்று கேட்பார்.

குழப்பம்

குழப்பம்

அப்படித்தான் ரஜினிகாந்த் தற்போது மதசார்பற்ற ஆன்மீக அரசியல் என்று கூறியுள்ளார். அது என்ன மதசார்பற்ற ஆன்மீக அரசியல் என்பது இன்னும் பலருக்கும் புரியவில்லை. ரஜினியிடம் கொள்கை பற்றி கேட்டால் அவருக்கு "தலை சுற்றும்" எனபதால்.. உண்மையில் ரஜினி தொடங்க போகும் இந்த கட்சியின் கொள்கை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
Actor Rajinikanth confuses fans with his Secular Spiritual Politics announcement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X