சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பிம்பிளிக்கி பிளாப்பி".. பால் பொங்கும்.. பச்சை தண்ணி பொங்குமா!?.. நழுவும் ரஜினி.. ரசிகர்கள் அப்செட்

ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதில்லையா என்ற ஏக்கம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: வழக்கம்போலவே புஸ்ஸென்று முடிந்துவிட்டது ரஜினியின் ஆலோசனை கூட்டம்.. எதுவெல்லாம் ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்டதோ, அதுவெல்லாம் மறுபடியும் நொறுங்கிவிட்டது ரஜினியின் ஆலோசனை கூட்டத்தினால்!

Recommended Video

    எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிவை அறிவிப்பேன் - Rajinikanth | Oneindia Tamil

    இன்று காலை ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.. ஒன்னும் சொல்லி கொள்ளும்படியான பேச்சு அங்கு நடக்கவில்லை என்று தெரிகிறது.

    "அரசியல் கட்சி தொடங்குவது பற்றி நான் முடிவு எடுக்கிறேன்.. அதுவரை பொறுத்திருங்கள்" என்று சொல்லி உள்ளார்.. அதேபோல, மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்றும், பலமுறை எச்சரித்தும் சில நிர்வாகிகள் என் பேச்சை மதிக்கவில்லை என்றும் அவர்களை கண்டித்துள்ளார் போலும்.

    என் முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பேன்: ரஜினிகாந்த் என் முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பேன்: ரஜினிகாந்த்

     செயல்பாடு

    செயல்பாடு

    அதேசமயம், தன்னோடு இருந்தால் சம்பாதிக்க முடியாது, அதை அனுமதிக்கவும் முடியாது, அரசியலில் பதவிக்கு வந்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தன்னுடன் இருக்க வேண்டாம் என்றும் ரஜினி சொன்னாராம்.

     குழப்பம்

    குழப்பம்

    இதை 2 விதமாக அணுக வேண்டி உள்ளது.. முதலில் இது எதற்கான ஆலோசனை என்று தெளிவாக தெரியவில்லை.. ரசிகர் மன்றம் சம்பந்தப்பட்டது மட்டுமே என்றால், அரசியல் பேச்சு அங்கு ஏன் அடிபட வேண்டும்? அரசியல் பதவி, சம்பாதித்தயம் என்று என்னென்னவோ பேசிவிட்டு சென்றுள்ளார்.. இன்னும் கட்சியே ஆரம்பிக்காத நிலையில், இந்த அரசியல் பேச்சு எதை மையப்படுத்தி பேசி உள்ளார் என்பது குழப்பமாக இருக்கிறது.

    உச்சக்கட்டம்

    உச்சக்கட்டம்

    மற்றொன்று, அரசியல் சம்பந்தப்பட்ட ஆலோசனை என்று மட்டுமே எடுத்து கொள்ள முடியாது.. நேற்று வரை ரஜினி வந்தாக வேண்டும், கட்சியை ஆரம்பித்தாக வேண்டும், அந்த கட்சி திமுகவுக்கு மாற்றாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் உச்சக்கட்ட ஆவேசத்தில் போஸ்டர் அடித்து ஒட்டி வரும் நிலையில், அவர்களை சமாதானப்படுத்தவே, அரசியல் சம்பந்தமான பேச்சை ரஜினி பேசினாரா என்றும் தெரியவில்லை.

     அண்ணாத்தே

    அண்ணாத்தே

    எல்லாவற்றிற்கும் மேலாக, "அரசியல் கட்சி தொடங்குவது பற்றி நான் முடிவு எடுக்கிறேன்" என்று சொல்லி உள்ளது, வழக்கம்போலவே ரஜினியின் சாமர்த்தியமாகவே பார்க்கப்படுகிறது. அப்படியானால் அண்ணாத்தே படம் வெளியான பிறகுதான் கட்சி ஆரம்பிப்பாரா? அந்த படத்தையும் பழுதில்லாமல் கொண்டு செல்வதற்கான அச்சாரமா இந்த ஆலோசனை என்பதும் தெரியவில்லை. எப்போதுமே தன்னை பற்றின பேச்சு பரபரப்பாக இருப்பது போலவே பார்த்து கொள்வது ரஜினியின் வழக்கமான ஸ்பெஷல்.

     ரசிகர்கள்

    ரசிகர்கள்

    குறிப்பாக அவரது படம் ஏதாவது ரிலீஸ் ஆக கூடிய சந்தர்ப்பம் இருந்தால், நிச்சயம், அவரை பற்றின சலசலப்பு தமிழகத்தில் எதிரொலிக்கும்.. அதை அரசியல் களத்திலும் எதிரொலிக்க செய்துவிட்டு, அதன்மூலம் தன் படத்தையும் ஓடவைக்கும் இந்த மலிவான டெக்னிக் வருத்தமாக உள்ளது... இன்னமும் பால் பொங்கும் என்று ரசிகர்கள் நம்பி கொண்டிருக்கிறார்கள்.. பால் பொங்கும், ஆனால் பச்சை தண்ணி பொங்கவே பொங்காது என்பதை ரஜினி ரசிகர்களுக்கு சொல்லி புரிய வைப்பது யாரோ!?

    English summary
    Rajinikanth consulting District Secretaries today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X