சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜக ஷெல்வி .. ரஜினியை நம்பி.. அன்னிக்கு அடிச்சு சொன்னாரே.. இப்ப என்ன பண்ண போறாரோ!!

ரஜினிக்காக கணித்த ஜோதிடர் ஷெல்வியின் கணிப்பு பொய்யாகிவிட்டது

Google Oneindia Tamil News

சென்னை: டிசம்பர் மாசத்துக்குள்ள, ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லையானால், தன் ஜோதிட தொழிலை கைவிடுவதாக ஷெல்வி சொன்னாரே.. அவர் எப்போது அந்த தொழிலை கைவிடுவார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இவ்வளவு காலம் இல்லாமல், இந்த 3 மாதங்களாக ரஜினியின் அரசியல் வருகை பரபரப்பாக பேசப்பட்டது.. அதற்கு காரணம், கட்சி ஆரம்பிப்பதாக ரஜினியே தன் வாயால் சொன்னாதால்தான்.

இதனால், அந்த கட்சியை அவர் எப்போது ஆரம்பிப்பார், அதில் யாரெல்லாம் கூட்டணி வைப்பார்கள், அந்த கட்சியின் கொள்கை என்னவாக இருக்கும் என்ற பல யூகங்கள் சோஷியல் மீடியாவில் எழுந்தன.பலரும் இந்த முறை ரஜினி கட்சியை கண்டிப்பாக தொடங்குவார் என்றே அடித்து சொன்னார்கள்.

 அறிவுசார் பிரிவு

அறிவுசார் பிரிவு

ஒருசிலர் மட்டும் ரஜினி கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தனர்.. இதற்கு சில காரணங்களையும் சொல்லி வந்தனர். பலரும் நம்பிக்கை தெரிவித்தவாறுதான், ஜோதிடர் ஷெல்வியும் கருத்து சொன்னார்.. தமிழக பாஜகவில் அறிவுசார் பிரிவு தலைவராக உள்ளார்.. ரஜினியின் அரசியல் கட்சியில் இணைவதற்காக பாஜகவின் அறிவுசார் பிரிவில் இருந்து விலகிய அர்ஜுன மூர்த்திக்கு பதிலாகத்தான் அந்த பதவியில் ஷெல்வி நியமனம் செய்யப்பட்டார்.

 ஷெல்லி

ஷெல்லி

வரும் டிசம்பர் மாதத்துக்குள் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார் என்றும், அவ்வாறு அவர் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றால், தமது ஜோதிட தொழிலை கைவிட்டு விடுவதாகவும் ஷெல்வி அறிவித்திருந்தார்... மேலும் "ரஜினியின் அரசியல் புதுசா இருக்கும்.. ஒரு படத்தில் நடித்து, அந்த காசை கொண்டு வந்து தனது கட்சியிலேயே போடுவார் ரஜினி.. அப்படித்தான் வித்தியாசமாக எதையாவது செய்வார்" என்று கணித்து சொன்னவர். அதுவும் டிவி லைவில் பகிரங்கமாகவே சொன்னவர்.

 அம்மா

அம்மா

இந்நிலையில், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க மாட்டேன் என்று அறிவித்தது ஷெல்வியின் கணிப்புக்கு எதிராக அமைந்துவிட்டது.. இதைதான் ஜோதிடத் தொழிலை ஷெல்வி கைவிடுவாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதில் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும்.. இதே ஷெல்விதான், அப்பல்லோவில் இருந்து அம்மா திரும்பி வந்து ஆட்சியை தொடருவார் என்று சொன்னவர்.. இவர்தான், 2020ம் ஆண்டு எல்லாருக்கும் சிறப்பாக இருக்கும் என்று சொன்னவர்.

ஜோதிடர்

ஜோதிடர்

ஆக, இவர் எதையெல்லாம் சொன்னாரோ, அத்தனையையும் லிஸ்ட் போட்டு நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு ஷெல்விதான் பதில் சொல்ல வேண்டும்.. ஜோதிடர் என்ற முறையில் மட்டுமல்லாமல், ரஜினியையே இன்னமும் நம்பி அவர் வீட்டு வாசலில் உட்கார்ந்திருக்கும் அவரது ரசிகர்களுக்காகவாவது, ஷெல்வி விளக்கம் தர வேண்டும் என்பது நம்முடைய குறைந்தபட்ச எதிர்பார்ப்பு.

விளக்கம்

விளக்கம்

"அறிவுசார் பிரிவு என்பது அறிவாளிகள் பிரிவு கிடையாது.. அறிவுசார் பிரிவுக்கும் அறிவாளிகளுக்கும் சம்பந்தமே கிடையாது" என்று ஒருமுறை விளக்கம் தந்தவர் ஷெல்வி.. அதேபோல, "2022-ல் இந்துக்களுக்கு இருக்கும் எல்லா தடைகளும் ஒழிந்து போகும்.. அதன்பிறகு முன்னேற்றம்தான்.. பாஜகவுக்கும் 2022-க்கு பிறகு தமிழகம் மட்டுமல்ல, தென்னிந்தியா முழுக்கவே பெரிய வளர்ச்சி இருக்கும்" என்று கணித்து கூறியிருக்கிறார்.. இதுவாவது நடக்க போகிறதா என்பதை இனிமேல்தான் நாம் பார்க்க வேண்டும்.

English summary
Rajinikanth Decision and Netizan asks Shelvi will quit his Astrologer profession
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X