• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

அறிக்கை விட்டு உதாசீனப்படுத்தாமல்.. நேரில் அழைத்து கெளரவமாக பிரியாவிடை கொடுத்த ரஜினி.. சூப்பர்!

Google Oneindia Tamil News

சென்னை: வெற்று அறிக்கை விட்டு உதாசீனப்படுத்தாமல் நிர்வாகிகளை நேரில் அழைத்து கவுரவப்படுத்தி பிரியாவிடை கொடுத்து அனுப்பிய ரஜினியின் செயல்பாடுகள் சூப்பரோ சூப்பர்!

ரஜினி என்பவர் எளிமை என்பது மட்டுமல்லாமல் அனைவரையும் மதிக்கத் தெரிந்தவர். இது அவருடன் பழகியவர்களுக்கும் அவர் குறித்து அறிந்தவர்களுக்கும் நன்றாகத் தெரியும்.

தான் ஒரு உச்ச நடிகராக இருந்தாலும் இமயமலைக்கு சென்றால் செல்லும் வழியில் இளைப்பாற துண்டை விரித்து படுத்துக் கொள்வார் என அவரது நெருங்கிய நண்பர்கள் கூறியும் , அந்தளவுக்கு எளிமை. நடுரோட்டில் நின்று கொண்டு உணவு அருந்தும் காட்சிகளையும் பார்த்தும் நாம் தெரிந்து கொண்டோம்.

அரசியல் என்ட்ரி.. திடீரென பரபரப்பை கிளப்பி சட்டென நிரந்தர முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்! அரசியல் என்ட்ரி.. திடீரென பரபரப்பை கிளப்பி சட்டென நிரந்தர முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்!

70 வயது

70 வயது

இதனால்தான் அவர் சூப்பர்ஸ்டாராக தனது 70 வயதிலும் வலம் வருகிறார். ரசிகர்களை மதிப்பதிலும் அவருக்கு நிகர் அவரே. அந்த காலங்களில் தன்னை தேடி ரசிகர் வெளியூரில் இருந்து வந்துவிட்டால், உடனடியாக அவரை அழைத்து போட்டோ எடுத்து அறிவுரைகளை கூறி அனுப்புவார்.

அரசியலுக்கு

அரசியலுக்கு

அவ்வாறு இருக்கும் ரஜினி அரசியலுக்கு வந்தால் நிச்சயம் எளிதில் அணுகக் கூடியவராக இருப்பார் என அனைவரும் கருதினர். அது போல் ரஜினி ஊழலுக்கு எதிரானவர், எனவே அவர் தலைமையில் ஆட்சி அமைந்தால் அது எப்படி இருக்கும் என சொல்லவே வேண்டாம்.

கால் நூற்றாண்டு கனவு

கால் நூற்றாண்டு கனவு

இதற்காக ரசிகர்கள் கால் நூற்றாண்டுகளாக கனவு கண்டனர். இந்த கனவுகள் அனைத்தும் கொரோனாவால் கடந்த 2020 இல் சுக்குநூறாக உடைந்துவிட்டன. இந்த நிலையில் அமெரிக்கா சென்று வந்த ரஜினி, திடீரென இன்று மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார்.

போயஸ் தோட்டம்

போயஸ் தோட்டம்

மேலும் போயஸ் தோட்டத்திலிருந்து கோடம்பாக்கம் கிளம்பிய போதும் வருங்காலத்தில் அரசியலுக்கு வருவதா வேண்டாமா என்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசிக்கவுள்ளேன் என்றார். இதனால் ரசிகர்கள் ஏதோ நல்ல செய்தி வர போகிறது என மகிழ்ந்தனர். ஆனால் இந்த முறையும் ரஜினி ஏமாற்றத்தையே கொடுத்துவிட்டார்.

 எண்ணம் இல்லை

எண்ணம் இல்லை

எதிர்காலத்திலும் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இது தொடர்பாக அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையை போயஸ் தோட்டத்தில் இருந்தபடியே வெளியிட்டிருக்கலாமே, எதற்கு இத்தனை ஹைப், ஏன் இத்தனை கூட்டத்தை கூட்ட வேண்டும் என கேள்விகள் எழுகின்றன.

அறிவுரைகள்

அறிவுரைகள்

அங்குதான் நிற்கிறார் ரஜினி! சும்மா வெற்று அறிக்கை விடுவதை விட நிர்வாகிகளை நேரில் அழைத்து நலம் விசாரித்து அவர்களிடம் தனது உடல் நலம் குறித்து பேசி, வழக்கம் போல் முதலில் தாய், தந்தை, குடும்பத்தை பாருங்கள் என அறிவுரைகளை வழங்கியுள்ளதாக தெரிகிறது.

வெறும் அறிக்கை

வெறும் அறிக்கை

இதே வெறும் அறிக்கையை மட்டும் ரஜினி வெளியிட்டிருந்தால் நிர்வாகிகள் மனம் சங்கடப்பட்டிருக்கும். தன்னால் யாரும் சங்கடப்படக் கூடாது என்பதை உணர்ந்தே இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். அது போல் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் நிர்வாகிகளுக்கு மண்டபத்தில் உணவு அளித்துவிட்டு கனத்த இதயத்துடன் பிரியாவிடை கொடுத்துள்ளார். நிர்வாகிகளுக்கு வருத்தம் இருந்தாலும் அவர்களை சமாதானப்படுத்தி கட்டுப்படுத்தி தனது முடிவுக்கு ஒப்புக் கொள்ள வைத்துவிட்டார் ரஜினி.

English summary
Rajinikanth didnt want his RMM activist to degrade. He always gives respect to all.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X