சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசியலுக்கு வராட்டி 4 பேர் நாலு விதமா பேசுவாங்க.. அதுக்காக யாரையும் பலிகடாவாக்க விரும்பலை.. ரஜினி

Google Oneindia Tamil News

சென்னை: அரசியலுக்கு வரமாட்டேன் என சொன்னால் என்னை 4 பேர் 4 விதமாக பேசுவார்கள்தான். அதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை என ரஜினிகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என கடந்த 30 ஆண்டுகளாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு நான் அரசியலுக்கு வருவேன். 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து 3 ஆண்டுகள் எந்த ஒரு கல்லையும் நகர்த்தாமல் இருந்த ரஜினிகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் அரசியல் கட்சியை தொடங்குவேன் என உற்சாகமாக அறிவித்தார்.

கட்சி தொடங்க மாட்டேன்.. மக்களிடம் மன்னிப்பு கேட்டு ரஜினிகாந்த் அறிக்கை! கட்சி தொடங்க மாட்டேன்.. மக்களிடம் மன்னிப்பு கேட்டு ரஜினிகாந்த் அறிக்கை!

வாழ வைத்த தெய்வங்கள்

வாழ வைத்த தெய்வங்கள்

மேலும் என் உயிரே போனாலும் பரவாயில்லை. என்னை வாழ வைத்த தெய்வங்களுக்கு நான் நல்லது செய்தாக வேண்டும் என்றார். இந்த நிலையில் வரும் 31-ஆம் தேதி அவர் கட்சி குறித்த அறிவிப்புகளை எல்லாம் அறிவிப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று அரசியலுக்கு முழுக்கு போட்டு ஒரு அறிக்கையை ரஜினி வெளியிட்டுள்ளார்.

3 ஆண்டுகள்

3 ஆண்டுகள்

ரஜினி அரசியலுக்கு வருவேன் என்றார், 3 ஆண்டுகளாக எந்த துரும்பையும் கிள்ளவில்லை, பின்னர் மீண்டும் வருவேன் என்றார், தற்போது அரசியலுக்கு வரமாட்டேன் என்கிறார், இதனால் ரஜினி மீது என்னதான் கோபம் இருந்தாலும் அவருடைய நல்லெண்ணத்தை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

நம்பினோர்

நம்பினோர்

அவரது அறிக்கையில் அவரது நல்ல குணம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. அதாவது என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் 4 பேர் 4 விதமாக பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி வருவோரை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.

வருத்தம்

வருத்தம்

ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் என்னை மன்னியுங்கள் என தெரிவித்துள்ளார்.

English summary
Rajinikanth doesnt want to give trouble to others by starting political party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X