சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எஸ்பிபி: கம்பீரமான குரல் இன்னும் 100 ஆண்டுகள் ஒலிக்கும்.. ஆனால் அதன் உரிமையாளர்?.. ரஜினி உருக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: எஸ்பிபியின் பாடலுக்கு ரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவில் இல்லை என ரஜினிகாந்த் வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    எஸ்பிபியின் பாடலுக்கு ரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவில் இல்லை .. ரஜினிகாந்த் உருக்கம் - வீடியோ

    இதுகுறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இன்று மிகவும் சோகமான நாள். கடைசி நிமிடம் வரை தனது உயிருக்காக போராடிய எஸ்பிபி நம்மை விட்டு பிரிந்துவிட்டார்கள்.

    அவருடைய பிரிவு மிகுந்த வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. எஸ்பிபியினுடைய பாட்டிற்கும் குரலிற்கும் ரசிகர்கள் இல்லாதவர்களே இந்தியாவில் இருக்க மாட்டார்கள். அவருக்கு தெரிந்தவர்கள் அவருடைய பாட்டை விட குரலைவிட அவரையே நிறைய ரசித்தார்கள்.

    என் உயிர் பிரிந்தால்.. 15 ஆண்டுக்கு முன்பே கடைசி ஆசையை கூறிய எஸ்பிபி.. எல்லாபுரம் கவுன்சிலர் தகவல் என் உயிர் பிரிந்தால்.. 15 ஆண்டுக்கு முன்பே கடைசி ஆசையை கூறிய எஸ்பிபி.. எல்லாபுரம் கவுன்சிலர் தகவல்

    கவுரவம்

    கவுரவம்

    அதற்கு காரணம் அவருடைய மனிதநேயம். சின்னவர்கள், பெரியவர்கள் என பாராமல் அனைவரையும் மதித்தார். கவுரவம் கொடுத்தார்கள், அன்பு கொடுத்தார்கள், அவ்வளவு பெரிய அன்பான நல்ல ஒரு மனிதர். இந்திய திரையுலகம் எத்தனையோ மிகப் பெரிய பாடகர்களை உருவாக்கியுள்ளது.

    பெரும் சிறப்பு

    பெரும் சிறப்பு

    மாம்பலம் ரவி, கிஷோர் குமார், கண்டசாலா, டிஎம் சவுந்திரராஜன் ஆகியவர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு , நமது எஸ்பிபிக்கு உண்டு. அவர்கள் எல்லாரும் குறிப்பிட்ட மொழியில் மட்டுமே பாடினார்கள். ஆனால் எஸ்பிபியோ பல மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார்.

    காதுகளில் ஒலிக்கும்

    காதுகளில் ஒலிக்கும்

    இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக தென்னிந்திய மக்களுக்கு அவரை தெரியும். அவருடைய ரசிகர்களே இல்லாமல் இருக்க மாட்டார்கள். அவருடைய இனிமையான குரலை ரசித்தார்கள். கம்பீரமான அந்த குரல் இன்னும் 100 ஆண்டு ஆனாலும் கூட நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

    ஆன்மா

    ஆன்மா

    ஆனால் அந்த குரலுக்கான உரிமையாளர் இனி நம்முடன் இல்லை என நினைக்கும் போது மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டும். அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என ரஜினிகாந்த் தனது இரங்கல் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Rajinikanth expresses his condolences for the demise of SP Balasubrahmanyam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X