சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எந்திரன் செம.. 2.ஓ வாவ்.. இதுவே இப்படின்னா 3.ஓ எப்படி இருக்குமோ!

Google Oneindia Tamil News

சென்னை: எந்திரன் படத்தை மிஞ்சும் அளவுக்கு 2.0 படத்தின் டீசர் உள்ள போது 3.0 எடுக்க கதையிருந்தால் அது எந்தளவுக்கு பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை நினைத்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

ரஜினிகாந்த் என்றாலே ஸ்டைல், கலக்கல். ஷங்கர் என்றால் பிரம்மாண்டம். இவர்கள் இருவரும் சேர்ந்து ரோபோ என்ற படத்தை 2010-ஆம் ஆண்டு வெளியிட்டனர். இந்த படத்தில் ரசிகர்களுக்கு மாஸ் விருந்தை அளித்தார் ரஜினி. படத்தில் வசீகரனைவிட ரோபோ கேரக்டர் மக்கள் மனதில் இடம்பிடித்தது.

அதிலும் வூ இஸ் தி பிளாக் ஷீப், ரோபோ, மேஹ் மேஹ் என ரோபோ ரஜினி சொல்லும் வசனம் பிரபலமானது.

செப்டம்பரில் ரிலீஸ்

செப்டம்பரில் ரிலீஸ்

இந்நிலையில் ரோபோவின் இரண்டாம் பாகமாக 2.0 என்ற படத்தை காலா படத்துக்கு முன்னர் இந்த படம் எடுக்கப்பட்டு திரைக்கு வருவதாக இருந்தது. அதாவது கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி வெளியாவதாக இருந்தது.

ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரிலீஸ் தேதி அறிவிப்பு

சுமார் 600 கோடி ரூபாயில் தயார் செய்யப்பட்ட இப்படம் சில தொழில்நுட்ப பணிகள் காரணமாக செப்டம்பர் 13-ஆம் தேதி வெளியாகாமல் நவம்பர் 29-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஐடியா

இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது. இந்த விழாவில் ரஜினி, அக்ஷய் குமார், எமி, இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஷங்கர் கூறுகையில், 2.0 திரைப்படத்தை தொடர்ந்து 3.0 தொடங்குவதற்காக சின்ன சின்ன ஐடியா உள்ளது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

கதை தோன்றினால் 3.0 படம் உருவாக்கப்படும் என தெரிவித்தார்.இதை கேட்டதும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ரோபோ திரைப்படம் பட்டையை கிளப்பியது. 2.0 மிரட்டும் வகையில் இருக்கும் என டீசரை பார்த்தாலே தெரிகிறது. அது போல் 3.0 எப்படி இருக்குமோ என்பதை நினைத்து ரசிகர்கள் பரவசத்தில் உள்ளனர்.

English summary
Rajinikanth's fans expects 3.0 after Shankar announces he has idea to direct 3.0 if he got suitable story.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X