• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

சாத்தான்குளம்- திடீரென ட்வீட் போட்ட ரஜினி... பொளேர்னு கலாய்த்த கஸ்தூரி... ட்விட்டரில் ஒரே அதகளம்

|

சென்னை: சாத்தான்குளம் பிரச்சனையில் நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்ததை கிண்டலடித்த நடிகை கஸ்தூரிக்கு ட்விட்டரில் நெட்டிசன்கள் கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்குதலில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் உயிரிழந்தனர். தமிழகத்தை இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் மாஜிஸ்திரேட்டின் அறிக்கையில் போலீசாரின் தாக்குதல்கள், விசாரணையை போலீஸ் தடுத்த விதம் பலவும் அம்பலமாகி பெரும் சர்ச்சையாகி உள்ளது.

எந்த அப்பா, எந்த மகன்.. ஊரும் இல்லாமல், பேரும் இல்லாமல் ஒரு கண்டனமா.. ரஜினிக்கு பொதுமக்கள் கேள்வி!

ரஜினியின் கருத்து

ரஜினியின் கருத்து

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தமது ட்விட்டர் பக்கத்தில் தந்தையும் மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட்டு எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது. சத்தியமா விடக்கூடாது என ஆவேசமாக இருக்கும் படத்துடன் பதிவிட்டிருந்தார்.

கஸ்தூரியின் ட்வீட்

கஸ்தூரியின் ட்வீட்

இதனிடையே நடிகை கஸ்தூரி தமது ட்விட்டர் பக்கத்தில், Maybe the photographer was available only today ? என ஒரு பதிவு போட்டார். இது நடிகர் ரஜினிகாந்த் படத்துடன் போட்டதற்கு எதிர்வினைதான் என கூறி நெட்டிசன்கள் கஸ்தூரியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

புயலை பார்க்க புல் மேக்கப்

புயலை பார்க்க புல் மேக்கப்

மேலும், அவரு என்ன கஸ்தூரியா, புயல் அடிச்ச இடத்தை பார்க்க போகும் போது ஃபுல்லா மேக்கப் போட்டிட்டு, ஃபோட்டோகிரபரோட போய் ஃபோட்டோ எடுத்து ... என்று மிக கடுமையகாவும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

சீனியரை போய் கலாய்ப்பீங்களா?

சீனியரை போய் கலாய்ப்பீங்களா?

ஏங்க. என்ன இருந்தாலும் அவரு உங்க துறையை சேர்ந்த ஒரு சீனியர் சிட்டிசன் நடிகர். இப்படியா கலாய்ப்பீங்க என்று @rasali_sdk என்ற ட்விட்டீஸ்ட் கேள்வி கேட்டிருக்கிறார். @vijaybalaji4u என்பவர், நல்லது நடக்கணும்... அப்படினு நினைக்க மாட்டிங்க!!!!... எங்கடா குறை கண்டுபிடிக்கலாம் ....score பண்ணலாம்னு பாக்கறீங்க .. இந்த விஷயத்திலும்!!!! மகிழ்ச்சி!!!! என கூறியுள்ளார்.

இந்திரா காந்தி செத்துட்டாங்களா மொமெண்ட்

இந்திரா காந்தி செத்துட்டாங்களா மொமெண்ட்

@SELVAMD22 என்ற நெட்டிசன், இல்லை அந்த கோபம் தொனிக்கும் முகம் பத்து நாட்களுக்கு பிறகே தத்ரூபமாக அமைந்தது போட்டோகிராபர் தான் பாவம் பத்து நாளாக.. என கஸ்தூரிக்கு ஆதரவாகவும் பதிவிட்டிருக்கிறார். @Priyasath02 என்ற நெட்டிசனோ, என்ன இந்திராகாந்தி செத்துட்டாங்களா மொமண்ட்னு ரஜினிகாந்தின் ட்வீட்டை கிண்டலடித்திருக்கிறார்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
Actor Rajinikanth fans reacted on Kasturi's Tweet regarding Sathankulam issue.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more