சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மக்களின் நலனுக்காக நானும் கமலும் நிச்சயம் இணைவோம்.. ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    அரசியலில் ஒன்றிணைவது குறித்து ரஜினி, கமல் பரபரப்பு பேட்டி

    சென்னை: மக்கள் நலனுக்காக கமல்ஹாசனுடன் இணையும் சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

    ரஜினி அரசியலுக்கு வருவதாக கடந்த 2017-ஆம் ஆண்டு ரசிகர்கள் மத்தியில் அவர் பேசுகையில் 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவோம் என்றார். பல்வேறு தருணங்களில் கமல் தன்னுடன் இணைந்து பணியாற்ற அழைத்த போது அவர் பிடிகொடுக்கவில்லை.

    இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனே ரஜினியை நேரில் சென்று சந்தித்து ஆதரவு தருமாறு அழைத்து அவர் மௌனமாக இருந்தார்.

    படு கவர்ச்சியாக பெட்ரோல் பங்குக்கு படையெடுத்த 'டூ பீஸ்கள்'.. ஏமாந்த ஊழியர்கள்.. செம கலாட்டா!படு கவர்ச்சியாக பெட்ரோல் பங்குக்கு படையெடுத்த 'டூ பீஸ்கள்'.. ஏமாந்த ஊழியர்கள்.. செம கலாட்டா!

    கமல் 60 விழா

    கமல் 60 விழா

    இந்த சூழலில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 'கமல் 60' விழாவில் பேசிய ரஜினி, "அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். முதல்வராக பதவி ஏற்பார் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். ஆனால் சற்றும் எதிர்பார்க்காமல் அவர் முதல்வரானார். இது தான் வாழ்க்கை. இந்த வாழ்க்கையில் என்ன மாதிரியான அதிசயங்கள் வேண்டுமானாலும் நடக்கும் என்றார்.

     எடப்பாடி முதல்வர்

    எடப்பாடி முதல்வர்

    மேலும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நான்கு, ஐந்து மாதம் கூட தாங்காது என்று சொன்னார்கள். நான்கைந்து மாதங்களில் கவிழ்ந்து விடுமென 99% பேர் சொன்னார்கள்.ஆனால் அதிசயம் நடந்தது. ஆட்சி நீடித்தது. அது மாதிரியான அதிசயம், அற்புதம் நேற்றும் நடந்தது. இன்றும் நடக்கிறது, நாளையும் நடக்கும். தமிழக அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்றும் ரஜினி தெரிவித்தார்.

    ரஜினியுன் கூட்டு

    ரஜினியுன் கூட்டு

    இந்நிலையில் இன்று கமல் ஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தை மேம்படுத்துவதற்காக நானும் ரஜினியும் இணைந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம். நானும் ரஜினியும் இணைய அவசியம் ஏற்பட்டால் இணைவோம் என்றார்.

    ரஜினி கருத்துக்கு

    ரஜினி கருத்துக்கு

    மேலும் ரஜினி சொன்ன அதிசயம் உண்மைதான். படிக்காதவர்களுக்கு வழங்கும் முதல் கவுரவ டாக்டர் பட்டம் எனக்கு வழங்கப்பட்டதில் மகிழ்ச்சி. நல்ல தலைவராக இருக்கக் கூடிய கோத்தபய நியாயமான ஆட்சியை தர வேண்டியது அவரது கடமை என்றார் கமல்.

    கமலுடன் இணைவேன்

    கமலுடன் இணைவேன்

    இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து ரஜினி பேசுகையில், மக்கள் நலனுக்ககாக நானும் கமலும் இணைய வேண்டிய சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என்றார்.

    விரும்பவில்லை

    விரும்பவில்லை

    எடப்பாடி முதல்வரானது அதிசயம் என்ற ரஜினியின் கருத்துக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் கண்டனம் தெரித்தது குறித்து கேள்விக்கு , ஒபிஎஸ் எனக்கு கண்டனம் தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்து; அதுகுறித்து பதில் கூற விரும்பவில்லை என்று ரஜினி தெரிவித்தார்.

    English summary
    Rajinikanth: For the benefit of the people if there is a situation to form alliance with Kamal Haasan, we will definitely come together.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X