சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரஜினிக்கு முன்னே பெரிய பொறுப்பு உள்ளது.. அது அவருக்கும் தெரியும்.. சூசகமாக சொன்ன குருமூர்த்தி!

தனக்கு முன்னே மிகப்பெரிய பொறுப்பு உள்ளது, அது என்ன என்பதை நடிகர் ரஜினிகாந்த் அறிவார் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசி உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    துக்ளக் விழாவில் ரஜினி சொன்ன பால்காரர் கதை!

    சென்னை: தனக்கு முன்னே மிகப்பெரிய பொறுப்பு உள்ளது, அது என்ன என்பதை நடிகர் ரஜினிகாந்த் அறிவார் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசி உள்ளார்.

    சென்னையில் துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது. சென்னையில் துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு சிறப்பு மலரை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். இதை நடிகர் ரஜினிகாந்த் அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்

    இதில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய நபர்கள், பல்வேறு பாஜகவினர், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    கவனம்.. நல்லவரை நாட்டில் வாழ விட மாட்டார்கள்.. துக்ளக் விழாவில் ரஜினி சொன்ன பால்காரர் கதை!கவனம்.. நல்லவரை நாட்டில் வாழ விட மாட்டார்கள்.. துக்ளக் விழாவில் ரஜினி சொன்ன பால்காரர் கதை!

    என்ன பேசினார்

    என்ன பேசினார்

    இந்த விழாவில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, கருத்துகளை நையாண்டி வடிவில் சொல்வதில் கைதேர்ந்தவர் சோ. அவர் மக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். உண்மை மிக முக்கியம் என நம்பியவர் அவர். அவர் நேர்மையாக செயல்பட்டார்.

    சிஏஏ

    சிஏஏ

    குடியுரிமை சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம் நடக்கிறது. பலர் இதில் மோசமான பொய்களை கூறி வருகிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பெரிய சதி எதிர்கட்சிகள் கொண்டுவந்துள்ளது மிகவும் ஆபத்தானது.

    மக்கள்

    மக்கள்

    சாமானியர்களின் 70 சதவீத சேமிப்பு வங்கிக்கு போகிறது. மத்திய அரசு செய்த சாதனை இது. தமிழகத்தில் இருப்பது உலகின் மிக பழமையான கலாசாரம். தமிழகம் இந்து கலாச்சாரம் கொண்ட ஊர். ஆனால் இங்கு இந்து தலைவர் இல்லை.

    ஜேஎன்யூ

    ஜேஎன்யூ

    உலகின் தொன்மையான மொழி தமிழ். ஜே.என்.யுவின் டி.என்.ஏ நாட்டிற்கு எதிரானது. அது மிகவும் ஆபத்தானது. அதை வளர விட கூடாது. உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அது திருத்தப்பட வேண்டிய ஒன்று, இல்லையென்றால் மூடப்பட வேண்டிய ஒன்று

    மரியாதை இல்லை

    மரியாதை இல்லை

    முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நாத்திக அரசியலின் முதுகெலும்பை உடைத்தவர். தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு மரியாதை குறைந்து விட்டது; காசு கொடுக்காமல் அவர்களால் கூட்டம் கூட்ட முடிவதில்லை.தனக்கு முன்னே மிகப்பெரிய பொறுப்பு உள்ளது, அது என்ன என்பதை நடிகர் ரஜினிகாந்த் அறிவார் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசி உள்ளார்.

    English summary
    Rajinikanth has a huge responsibility, he knew it too says Gurumoorthy in Tughlaq function.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X