• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நண்பர் விவேக் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.. நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்!

|

சென்னை: நண்பர் நடிகர் விவேக் அவர்கள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

'சின்னக் கலைவாணர்' என அன்புடன் அழைக்கப்படும் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

 Rajinikanth has said that he prays to Almighty God that actor Vivek will recover soon

இதையடுத்து வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அவர் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 'எக்மோ; உதவியுடன் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.விவேக்கின் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், 24 மணி நேரம் அவரது உடல்நிலையை கண்காணிக்க வேண்டியதுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நண்பர் விவேக் குணமடைய விரும்புகிறேன்.. தடுப்பூசி குறித்த வதந்தி பரப்பாதீர்கள்.. கமல்ஹாசன் ட்வீட்!நண்பர் விவேக் குணமடைய விரும்புகிறேன்.. தடுப்பூசி குறித்த வதந்தி பரப்பாதீர்கள்.. கமல்ஹாசன் ட்வீட்!

நடிகர் விவேக் குணமடைய வேண்டிய பல்வேறு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் வேண்டி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ' நண்பர் நடிகர் விவேக் அவர்கள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

English summary
Rajinikanth has said that he prays to Almighty God that actor Vivek will recover soon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X