சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெறுத்தே போயிட்டாங்க.. ஸ்டிரைட்டாக திமுகவில் இணைந்த ரஜினி மன்றத்தினர்.. நெல்லையில் பரபரப்பு!

நெல்லை ரஜினி மக்கள் மன்றத்தினர் திமுகவில் இணைந்தனர்

Google Oneindia Tamil News

சென்னை: "ரஜினி மக்கள் மன்றம் அது செயல்படாத இயக்கமாக உள்ளது, அதனால்தான் திமுகவில் இணைந்துவிட்டோம்" என்று விரக்தியின் உச்சிக்கே சென்றுவிட்ட ரஜினி ரசிகர்கள் கூறியுள்ளனர்.

இதோ, அதோ என்று கால் நூற்றாண்டு காலம் முடியும் தருவாயிலும் இன்னமும் சஸ்பென்ஸ் வைத்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.. கட்சியை ஆரம்பிக்க போகிறாரா இல்லையா என்பது தெரியாமல் அவரது ரசிகர்கள் ஏற்கனவே குழம்பி போய் உள்ளனர்.

Rajinikanth Makkal Mandram cadres join in DMK

உடல்நிலை காரணம் சொல்லி, கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று நேற்று முன்தினம் ஒரு ட்வீட்டை ரஜினி பதிவிட்டு விடவும், இன்னும் ரஜினி ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள்.

இருந்தாலும் அவரை அரசியலுக்கு வரவழைத்தே தீருவது என்று நோக்கில், போயஸ் கார்டனுக்கே சென்று முழக்கமிட்டு கொண்டிருந்தனர்.. ரஜினிக்கான ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கினர்.. ரஜினிக்கு ஆதரவான போஸ்டர்களை அண்ணா அறிவாலயம் முன்பு கொண்டு போய் ஒட்டி அதகளப்படுத்தினர்.

அதாவது, ரஜினிக்கு எதிராக திமுகதான் இருப்பதாக ஒரு பிம்பம் தோன்றியுள்ளதால், இவ்வாறு அண்ணா அறிவாலயம் முன்பு போஸ்டர் ஒட்டப்பட்டது.. அதற்கேற்றவாறு நொந்து போன ரஜினி ரசிகர்கள் திமுகவில் சென்று ஐக்கியமாகி உள்ளனர்.. நெல்லையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட இளைஞரணி செயலாளர் முகம்மது ஷபிக், மக்கள் மன்றத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மன்றத்தில் இருந்து விலகி மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வகாப் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

திமுகவில் இணைந்தது பற்றி அவர்கள் சொல்லும்போது "மக்களுக்காக செயல்படும் நோக்கில்தான் ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்தோம்... ஆனால் இப்போது அது செயல்படாத இயக்கமாக இருக்கிறது.. ஆனால் இளைஞர்களுக்காக நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்னைகளில் திமுக தலைவர் முக ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குரல் கொடுத்து வருகின்றனர்.

எல்லாம் ரஜினிகாந்த் பிளான்.. 'முதல்வன்' பாணி அரசியல்.. பாய ரெடியாகும் 'முரட்டுக்காளை'! ரசிகர்கள் செமஎல்லாம் ரஜினிகாந்த் பிளான்.. 'முதல்வன்' பாணி அரசியல்.. பாய ரெடியாகும் 'முரட்டுக்காளை'! ரசிகர்கள் செம

தொடர்ந்து மக்கள் பிரச்சனை எதுவானாலும் ஃபேஸ்புக் உள்ளிட்ட இணைய தளம் மூலம் வாயிலாகவும் கருத்து தெரிவிக்கின்றனர்... அதனால் மக்களுக்காக செயல்படும் இயக்கமாக திமுக இருப்பதால், திமுகவில் இணைந்திருக்கிறோம் என்று விளக்கம் தந்துள்ளனர்.

English summary
Rajinikanth Makkal Mandram cadres join in DMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X