சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்.. ஆலோசிக்கும் உள்துறை.. ரஜினிக்கு விரைவில் இசட் பிளஸ் பாதுகாப்பா?

நடிகர் ரஜினிகாந்திற்கு விரைவில் இசட் ப்ளஸ் பாதுகாப்பு போடப்பட வாய்ப்புள்ளது என்று செய்திகள் வெளியாகி வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Rajinikanth latest speech after shooting in Man vs Wild

    சென்னை: நடிகர் ரஜினிகாந்திற்கு விரைவில் இசட் ப்ளஸ் பாதுகாப்பு போடப்பட வாய்ப்புள்ளது என்று செய்திகள் வெளியாகி வருகிறது.

    நாடு முழுக்க தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பை மத்திய பாஜக அரசு நீக்கிவருகிறது. முதலில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்திக்கும், சோனியா காந்திக்கும் வழங்கப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியது.

    இது பெரிய விமர்சனங்களை சந்தித்தது. இதனால் மத்திய அரசு எஸ்பிஜி சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்து, அதை வெற்றிகரமாக நிறைவேற்றியது. அதன்பின் வரிசையாக வேறு சில தலைவர்களின் சிறப்பு பாதுகாப்பும் நீக்கப்பட்டது.

    துக்ளக்கை உங்க ரசிகர்களுக்கு குடுங்க.. உங்க படம் ஓடனும்னு மண்சோத்தை தின்னுட்டிருக்கான்.. சீமான் நச் துக்ளக்கை உங்க ரசிகர்களுக்கு குடுங்க.. உங்க படம் ஓடனும்னு மண்சோத்தை தின்னுட்டிருக்கான்.. சீமான் நச்

    எதிர்க்கட்சிகள்

    எதிர்க்கட்சிகள்

    வரிசையாக மத்திய அரசுக்கு எதிரான கொள்கை கொண்டவர்களின் பாதுகாப்பு எல்லாம் நீக்கப்பட்டது. முதலில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் இசட் பிளஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டது. இதற்கு பலரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு வழங்கப்பட்டு வந்த தனிப்பட்ட பாதுகாப்பும் நீக்கப்பட்டது. இன்னும் சில எதிர்கட்சியை சேர்ந்த தலைவர்களுக்கும் பாதுகாப்பு நீக்கப்பட்டது.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    அதன்படி இசட் பிளஸ் பாதுகாப்பு இந்தியாவில் மிகவும் முக்கியமான தலைவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் , தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட சிலருக்கு மட்டும்தான் இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக பாஜக ஆதரவு கொள்கை கொண்ட பலருக்கு இந்த இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    ரஜினி எப்படி

    ரஜினி எப்படி

    இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்திற்கு தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். பெரியார் குறித்து அவர் பேசிய கருத்துக்கள் சர்ச்சையானது. இதனால் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. அவரின் வீட்டு வாசலிலேயே போராட்டங்கள் நடந்தது. அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படும் வீடியோவும் கூட இணையத்தில் அளவில் வெளியானது. இதனால் தற்போது ரஜினி வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    போலீஸ் பாதுகாப்பு

    போலீஸ் பாதுகாப்பு

    இந்த நிலையில்தான் ரஜினிகாந்திற்கு தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாம். இந்த ரிப்போர்ட் குறித்து உள்துறை ஆராய்ந்து வருகிறது என்கிறார்கள். 2021 சட்டசபை தேர்தலில் நிற்பதற்காக ரஜினிகாந்த் முயன்று வருகிறார். அதற்கு முன் இந்த பாதுகாப்பு உயர்த்தும் நடவடிக்கை நடக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

    Take a Poll

    English summary
    Actor Rajinikanth may get z plus security soon after his remark against Periyar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X