சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அது" வேண்டாம்னுட்டாங்களா.. ரஜினியே ஷாக் ஆயிட்டாரே.. அப்படி என்னதாம்ப்பா சொன்னீங்க??!

கமலுடன் இணையும் திட்டம் உள்ளதா என ரஜினியிடம் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது

Google Oneindia Tamil News

சென்னை: கமல்ஹாசனுடன் இணையும் திட்டம் வைத்துள்ளீர்களா.. எந்த அடிப்படையில் அவருடன் இணைய முடிவெடுத்தீர்கள்.. அது சரியாக வராது என்று ரஜினிகாந்த்திடம், அவரது மன்ற நிர்வாகிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. இந்த எதிர்ப்பை ரஜினிகாந்த் எதிர்பார்க்கவில்லை என்று சொல்கிறார்கள். இதையே அவர் ஏமாற்றம் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

Recommended Video

    மீண்டும் மீண்டும் கேட்ட செய்தியாளர்கள்.. அதே வார்த்தையை சொல்லி தப்பித்த ரஜினி.. - வீடியோ

    மக்கள் மன்றம் சம்பந்தப்பட்டது என்பதால் நம்மால் ரஜினிகாந்த் நடத்திய கூட்டத்தை பற்றி எதையும் ஸ்டிராங்காக கேள்வி கேட்க முடியாது.. அப்படியே நாம் கேள்வி கேட்டாலும் கிடைக்கக்கூடிய பதில் மழுப்பலாகவும், குழப்பமாகவும் கிடைக்கிறது.. ஒரு விஷயத்திலும் சரியான தெளிவான பதிலை ரஜினிகாந்த் சொல்லவில்லை.

    ஆனால் மா.செ.க்களுடன் நடத்திய ஆலோசனையில் என்ன பேசினார்கள் என்பது குறித்து சில தகவல்கள் நமக்கு கிடைத்தன.. ஆனால் அவை எந்த அளவுக்கு உறுதியானது என்று தெரியவில்லை.

    கூட்டணி?

    கூட்டணி?

    முதலாவதாக, இந்த ஆலோசனை கூட்டத்தில் கமலுடன் கூட்டணியில் இணைவது குறித்து ரஜினி கருத்து கேட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.. ஏனென்றால் மாவட்ட செயலாளர்களுடைய மனநிலைதான் இதில் ரஜினிகாந்த்துக்கு தெளிவாக தெரிய வேண்டி உள்ளது.. அதனால் கமலை பற்றின பேச்சு எழுந்ததாகவும், அதை பற்றி அவர்கள் கருத்து சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.

    பெயர், கொடி

    பெயர், கொடி

    அடுத்ததாக, கட்சியை எப்போது தொடங்கலாம் என்பது குறித்தும், அதற்கு முன்னர் கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.. கட்சிப் பெயர், கொடி போன்றவற்றை முடிவு செய்வது, கட்சியை எப்போது துவங்கினால் சரியாக இருக்கும் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இதற்கு அடுத்து திரும்பவும் ஒரு கூட்டம் நடத்த இருக்கிறாராம், அதில்தான் ரஜினிகாந்த் சில முக்கிய முடிவுகளை அறிவிக்க உள்ளார் என்கிறார்கள்.. அதற்கு முன் தயாரிப்பு வேலைகள் பற்றி ஆலோசிக்கவே இந்த நிர்வாகிகள் சந்திப்பு என்றும் சொல்லப்படுகிறது.

    வதந்திகள்

    வதந்திகள்

    அதேபோல, "மாற்று கட்சியிலிருந்து நிறைய பேர் இங்கு வருவார்கள்.. அவர்களிடம் ஒத்துழைப்பு கொடுத்து செல்ல வேண்டும்'' என ரஜினி அவர்களுக்கு ஒரு முக்கியமாக அட்வைஸ் தந்தாராம்.. மேலும் நம் மீது நமக்கே தெரியாமல் வேறு ஒரு முத்திரை குத்த முயற்சி நடக்கிறது.. அதில் நாம் சிக்கிகொள்ளவே கூடாது.. எல்லா தரப்பையும் அனுசரித்து செயல்பட வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தனக்கு பின்னால் பாஜக என்பது வதந்தி.. அனைத்து சமுதாய மக்களுடன் மன்றத்தினர் இணக்கம் காட்டவேண்டும் என்பதை தான் திரும்ப திரும்ப ரஜினி வலியுறுத்தினாராம். இவ்வளவுதான் நமக்கு கிடைத்த தகவல்கள்.

    அரசியல் கட்சி

    அரசியல் கட்சி

    ஆனால், "ஏமாற்றம்" என்று ரஜினி எதை சொல்கிறார் என்ற கேள்விதான் தமிழகத்தை சட்டென பீடித்து கொண்டுள்ளது.. அரசியல் கட்சியை ஆரம்பிக்க இப்போதைக்கு அவரிடம் நேரம் இல்லை.. பட வேலைகள் ஆரம்பமாகின்றன.. கால்ஷீட் பிரச்சனை உள்ளது.. அநேகமாக அரசியல் கட்சி தொடங்க முடியாத சூழல் என்பதைதான் ஏமாற்றம் என்று சொல்லிவிட்டு போனாரா? அல்லது கமலுடன் கூட்டணி வேண்டாம் என்று மா.செ.க்கள் ஏதாவது அதிருப்தி கருத்தினை வெளிப்படுத்தினார்களா என தெரியவில்லை.

    பரபரப்பு

    பரபரப்பு

    ஆனால், "ஒரு விஷயத்தில் ஏமாந்து விட்டேன்" என்று ரஜினிகாந்த் சொல்லி இருக்க தேவையில்லை.. இது தேவையில்லாத கருத்து.. துணிவிருந்தால் அது என்னவென்று சொல்லி இருக்க வேண்டும், இல்லையென்றால், அந்த வார்த்தையை உதிர்த்தே இருக்கக்கூடாது.. அது என்ன "ஏமாற்றம்" என்று அரசியல் கட்சியில் இருந்து மக்கள் வரை மண்டையை பிய்த்து கொள்வதற்காக அப்படி சொல்லிவிட்டு போனாரா? எப்போதுமே மக்களை ஒருவித பரபரப்பிலேயே, தன்னை பற்றின பேச்சு இருக்க வேண்டும் என்ற உணர்விலேயே வைத்திருக்க நினைக்கிறாரா? என தெரியவில்லை.

    அண்ணாத்தே

    அண்ணாத்தே

    "அண்ணாத்தே", கமலுடன் நடிக்கும் படம் உட்பட எல்லாவற்றையும் முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.. இந்த சமயத்தில் கட்சியை ஆரம்பித்தால், அதில் முழுமையாக கவனம் செலுத்த முடியாது.. முதலில் கட்சி ஆரம்பிப்பாரா என்றுகூட நமக்கு தெரியாது... ஒன்றுமட்டும் சொல்ல தோன்றுகிறது.

    அதிசயம்?

    அதிசயம்?

    "காலம்தான் பதில் சொல்லும்" என்று எல்லாவற்றிற்கும் மேலே கையை காட்டும் ரஜினி, "சிஸ்டம் சரியில்லை".. "போர் வர வேண்டும்".. "அதிசயம் நிகழும்".. என்று மக்களை தூண்டிவிடும் உணர்வுபூர்வமான வார்த்தைகளில் தமிழக மக்கள் இனியாவது விழாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. அது மட்டுமல்ல... தன் படங்களை ஓட்டவும், பணத்தை அள்ளவும் அரசியலோடு சேர்ந்து பிணைந்து வீசப்படும் வர்த்தக வார்த்தைகளையும் கண்டுகொள்ளாமல் விட்டு விட வேண்டும்!!

    English summary
    rajinikanth meet with makkal mandram distric secretaries in kodambakkam
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X