சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எந்த "ஏமாற்றமா" இருக்கும்.. ஒருவேளை இதுவா இருக்குமோ.. இல்லாட்டி அதுவா இருக்குமோ.. "அது" இதுதானா!

ரஜினிகாந்த் சொன்ன ஏமாற்றம் என்னவாக இருக்கும் என தெரியவில்லை

Google Oneindia Tamil News

சென்னை: "ஏமாற்றம், எதிர்பாக்கல.." என்று ரஜினிகாந்த் சொன்னாரே.. அது என்னவா இருக்கும் என்றுதான் நேற்று முதல் சிலர் மண்டையை போட்டு குழம்பி கொண்டிருக்கிறார்கள்.

Recommended Video

    எனக்கு ஒரு விஷயத்தில் ஏமாற்றம்.. ரஜினிகாந்த்

    மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை இன்று ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.. எப்படியும் அரசியல் அறிவிப்பு குறித்த செய்தியை கண்டிப்பாக வெளியிடுவார் என்ற ஆவல் எழுந்தது.

    குறைந்தபட்சம் கட்சியின் பெயரையாவது வெளியிடுவார் என்று கருதப்பட்டது.. ஆனால் வழக்கம்போல ஏமாற்றத்தையே தந்துவிட்டு போனார்.. போகும்போது மறக்காமல் மக்களையும் குழப்பிவிட்டு சென்றார்.

    அது என்ன?

    அது என்ன?

    அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஒரு விஷயத்தில் ஏமாற்றம் அடைந்துவிட்டேன் என்றார்.. உடனே செய்தியாளர்கள் அது என்ன விஷயம்? என்று கேட்டனர்.. அது தனிப்பட்ட முறையில் ஏமாற்றம்.. நேரம் வரும்போது சொல்றேன்.. என்றார். ஏமாற்றம் என்று ரஜினிகாந்த் சொல்லவும், ஆளாளுக்கு ஒவ்வொரு யூகங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

    ரஜினி - கமல் கூட்டணி?

    ரஜினி - கமல் கூட்டணி?

    ரஜினி, கமல் கூட்டணி விஷயமா? பாஜக சம்பந்தப்பட்டதா? சிஏஏ விவகாரமா? ரஜினிகாந்த் எந்த விஷயத்தில் ஏமாந்துவிட்டார் என்று பெரிய குழப்பத்தில் உள்ளனர். இப்போதும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.. அது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.. அதாவது மக்களுக்காக இதுவரை எதுவும் குரல் கொடுக்கவில்லையே.. இனிமேலாவது தரவேண்டும் என்றார்களாம். மேலும் சிஏஏ விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவாகவே ஒவ்வொரு பேட்டியும், கருத்தும் உள்ளதாக மக்கள் கருதுவதாக மாவட்ட செயலாளர்கள் விலாவரியாக எடுத்து கூறியுள்ளதாக தெரிகிறது.

    அமித்ஷா

    அமித்ஷா

    சிஏஏவால் யாருக்கும் எதுவும் பாதிப்பு இல்லை என்று சொல்வதை ஏற்க முடியாது.. இதைதான் மக்களும் நினைக்கிறார்கள். இப்போதே நம் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்ற பிம்பம் வந்துவிட்டது.. ஒருவேளை நாம் கட்சி தொடங்கிவிட்டால் அப்போது சிக்கல் வரவே செய்யும்.. அதனால் கட்சி ஆரம்பிக்கும்போதே சிறுபான்மையினர் அணி என்று ஒன்றை உருவாக்க வேண்டும்" என்று பெரும்பாலான மா.செ.க்கள் கூறினார்களாம்.

    பாஜக முத்திரை

    பாஜக முத்திரை

    இது ரஜினியே எதிர்பார்க்கவில்லையாம்.. இதைதான் ஏமாற்றம் என்று ரஜினியே வார்த்தை விட்டுவிட்டதாக ஒரு தகவல் வந்துள்ளது. அதேபோல இன்னொன்றும் சொல்லப்படுகிறது, அரசியல் கட்சிகள் தன்னை ஒரு பாஜக மனிதராக முத்திரை குத்துவதாகவும், அதற்கு ஏற்றாற்போல் நிர்வாகிகளின் கருத்துகளும், நடவடிக்கைகளும் இருப்பது ரஜினியை ஏமாற்றமடைய செய்திருக்கலாம், அல்லது தான் எதிர்பார்த்தது போன்று நிர்வாகிகள் செயல்படாமல் இருப்பது அவருக்கு ஏமாற்றத்தை தந்திருக்கலாம் என்கிறார்கள்.

    பூத் கமிட்டி

    பூத் கமிட்டி

    "நான் உங்களிடம் சில பொறுப்பை தந்தேன்.. ஆனால் பல மாவட்ட செயலாளர்களின் செயல்பாடு எனக்கு திருப்தி தரவில்லை.. 65 ஆயிரம் பூத்களை அமைக்க உத்தரவிட்டும், 55 ஆயிரம்தான் அமைக்கப்பட்டிருக்கு.. உறுப்பினர் சேர்க்கை விஷயத்தில் நான் இப்படி எதிர்பார்க்கவில்லை" என்று சற்று காட்டமாக பேசினாராம்.. இதைதான் பல மா.செ.க்கள் எதிர்பார்க்கவே இல்லையாம்.. கண்டிப்புடன் பேசியதை பார்த்து ஆடிப்போய் விட்டதாக சொல்கிறார்கள்.

    யூகங்கள்

    யூகங்கள்

    இதைதவிர இன்னொன்றும் சொல்லப்படுகிறது.. பூத் கமிட்டி நிர்வாகிகள் யாருமே சரியாக வேலை செய்யவில்லையாம்.. பொறுப்பில் இருந்தும் நிறைவான பணியை செய்யவில்லை என்பதால், ரஜினி சற்று டென்ஷன் ஆனதாகவும் கூறப்படுகிறது!! ஆனாலும் அவர்களுக்குள் என்னதான் பேசிக் கொண்டார்கள் என்பது வெளிப்படையாக தெரியவில்லை. இதை மன்றத்தினரும் & அவர்களின் தலைவரும் பகிரங்கமாக சொல்லும்வரை நித்தம் பல யூகங்கள் பல ரூபங்களில் பறந்து கொண்டுதான் இருக்கும் என தெரிகிறது!

    English summary
    rajinikanth met his makkal mandram distric secretaries in chennai and what was that "disappointed"
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X