சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீன அதிபருக்கு மோடி வழங்கும் விருந்தில் ரஜினிகாந்த்திற்கு அழைப்பா? செய்தித்தொடர்பாளர் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி அளிக்கக்கூடிய இரவு விருந்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பாக, அவரது செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

நாளைய தினம் மாமல்லபுரம் வருகைதரும் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதன்பிறகு அங்குள்ள, புராதான சின்னங்களை இரு தலைவர்களும் சுற்றிப் பார்க்கிறார்கள்.

Rajinikanth not invited for PM Modi hosting dinner in Chennai

இதையடுத்து, கோவளம் பகுதியில் அமைந்துள்ள தாஜ் குழுமத்துக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலில், பிரதமர் மோடி இரவு விருந்து வழங்குகிறார். இந்த இரவு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஜினிகாந்துக்கு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.

இந்த நிலையில் ரஜினிகாந்தின் செய்தி தொடர்பாளர் ரியாஸ் அகமது என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தி போலியானது என்று என்று விளக்கமளித்துள்ளார்.

பாஜகவுடன் நடிகர் ரஜினிகாந்த் நெருக்கம் காட்டி வருவது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தான் இப்படியான ஒரு தகவலை சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

English summary
A spokesperson for the Rajinikanth denied that the acror doesn't invited for participate in a dinner hosted by Prime Minister Narendra Modi to Chinese President Xi Jinping.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X