சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உடல்நிலை... டாக்டர்கள் அறிவுரையை ஏற்கனுமே... ரஜினி சூசகம்... அப்ப அரசியலுக்கு வராமலேயே 'முழுக்கு'?

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தமது உடல்நிலை பாதிப்புகள் தொடர்பான மருத்துவர்கள் ஆலோசனையை ஏற்க வேண்டுமே என கூறியிருக்கிறார். இதனால் ஏற்கனவே வெளியான தகவல்களின்படி உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற முடிவை ரஜினிகாந்த் அறிவிக்க திட்டமிட்டிருக்கிறாரோ என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சென்னையில் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் 37 பேருடன் ரஜினிகாந்த் இன்று 2 மணிநேரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின.

மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் பலரது செயல்பாடுகளில் ரஜினிகாந்த் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்பட்டது. மேலும் அரசியல் கட்சி தொடர்பாக தாம் முடிவு எடுக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும் என ரஜினிகாந்த் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.

அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று மாலை அல்லது நாளை ரஜினிகாந்த் அறிவிப்பார்- மக்கள் மன்ற நிர்வாகி அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று மாலை அல்லது நாளை ரஜினிகாந்த் அறிவிப்பார்- மக்கள் மன்ற நிர்வாகி

சீக்கிரம் தெரிவிப்பேன்

சீக்கிரம் தெரிவிப்பேன்

பின்னர் சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், மாவட்ட செயலாளர்களுடன் என் கருத்தை பகிர்ந்து கொண்டேன். அவர்களும் கருத்தை பகிர்ந்து கொண்டனர். நான் என்ன முடிவு எடுத்தாலும் கட்டுப்படுவதாக அவர்கள் கூறினர். ஆகையால் என்னுடைய முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பேன் என்று பட்டும்படாமலுமே கூறினார்

உடல்நிலை குறித்து ரஜினி

உடல்நிலை குறித்து ரஜினி

இந்த நிலையில் ரஜினிகாந்துடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களில் ஒருவரான அசோக் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், எங்களிடம் பேசிய ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து கூறினார். உடல்நிலை தொடர்பாக மருத்துவர்கள் தெரிவிக்கிற ஆலோசனையை ஏற்கத்தான் வேண்டுமே என்கிற கருத்தையும் முன்வைத்தார் என்றார்.

கொரோனாவும் ரஜினிகாந்த் உடல்நிலையும்

கொரோனாவும் ரஜினிகாந்த் உடல்நிலையும்

அண்மையில் ரஜினிகாந்த் உடல்நிலை தொடர்பாக ஒரு வாட்ஸ் அப் தகவல் தீயாக பரவியது. கொரோனா காலத்தில் ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்ட ரஜினிகாந்த் தீவிர அரசியலில் ஈடுபடுவது சரியாக இருக்காது என மருத்துவர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்; அதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவாய்ப்பில்லை என அந்த வாட்ஸ் அப் தகவலில் இடம்பெற்றிருந்தது.

உடல்நிலையே காரணம்?

உடல்நிலையே காரணம்?

இது தொடர்பாக விளக்கம் தந்த ரஜினிகாந்தும் கூட, உடல்நிலை குறித்த செய்திகள் உண்மைதான்.. அரசியல் தொடர்பாக ஆலோசித்து தெரிவிக்கிறேன் என கூறியிருந்தார். இந்த நிலையில் சென்னையில் மன்ற நிர்வாகிகள் கூட்டத்திலும் உடல்நிலை குறித்த கவலையை ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டிருக்கிறார். தாம் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ததையும் ரஜினிகாந்த் குறிப்பிட்டிருக்கிறார்.

அரசியலுக்கு வராமலே அரசியலுக்கு குட்பை?

அரசியலுக்கு வராமலே அரசியலுக்கு குட்பை?

இதனால் ஏற்கனவே வெளியான தகவல்களின்படி ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார் என்றே தெரிகிறது. அதனால் உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வராமலேயே அரசியலுக்கு முழுக்கு போடுவார் ரஜினிகாந்த் என்றே தெரிகிறது.

English summary
Rajinikanth may not to enter to the politics and he will citing health condition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X