சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகா வங்கி கிளை செக் மூலம் ரூ.6.56 லட்சம் சொத்து வரியை அபராதத்துடன் செலுத்தினார் ரஜினிகாந்த்

இரவு 12 மணிக்குள் ரூ.6.56 லட்சம் சொத்து வரியை ரஜினி கட்ட தவறினால் 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்த நிலையில் 9386 ரூபாய் அபராதத்துடன் ரூ. 6.56 லட்சம் சொத்து வரியை செலுத்த

Google Oneindia Tamil News

சென்னை: ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்டுள்ள ரூ. 6.56 லட்சம் சொத்து வரியை இன்று இரவு 12 மணிக்குள் கட்ட தவறினால் 2 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்த நிலையில் வரிப்பணத்தை கர்நாடகா வங்கிக்கிளையின் செக் மூலம் செலுத்தியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். சொத்து வரி கட்டிய ரசீது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் தாமத கட்டணத்திற்கு அபராதம் 9386 ரூபாய் என்றும், சொத்து வரி ரூ. 646610 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு, கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் சொத்து வரி செலுத்துமாறு, சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

Rajinikanth paid property tax of Rs 6.5 lakh to the Chennai corporation

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கோடம்பாக்கத்தில் உள்ள ராகேந்திர திருமண மண்டபத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் சொத்து வரி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொரானா தொற்று காரணமாக மார்ச் 24 ஆம் தேதி முதல் தன்னுடைய ராகேந்திர திருமணம் மண்டபத்தில் எந்த நிகழ்ச்சிகளும் நடைப்பெறாத நிலையில் அதன் மூலம் எந்த வருமானமும் கிடைக்கவில்லை.

சூர்யா அன்னைக்கு சொன்னாரே.. அது இதுதான்.. ரஜினி என்ன தப்பு செஞ்சுட்டார்.. பொங்கி குமுறும் ரசிகர்கள்சூர்யா அன்னைக்கு சொன்னாரே.. அது இதுதான்.. ரஜினி என்ன தப்பு செஞ்சுட்டார்.. பொங்கி குமுறும் ரசிகர்கள்

இந்நிலையில் திருமண மண்டபத்திற்கு சொத்து வரியாக 6 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என கடந்த செப்டம்பர்10ஆம் தேதி சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் வைத்து சொத்துவரிக்கு விலக்கு அளிக்க வேண்டும், அபராதமோ, வட்டியோ விதிக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என்று ரஜினிகாந்த் மனுவில் தெரிவித்திருந்தார். சென்னை மாநகராட்சிக்கு கடந்த 23ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியும் இதுகுறித்து எந்த பதிலும் வரவில்லை என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

Rajinikanth paid property tax of Rs 6.5 lakh to the Chennai corporation

இந்த நிலையில் ரூ. 6.56 லட்சம் சொத்து வரியை 15ஆம் தேதி இரவு 12 மணிக்குள் ரஜினி கட்ட தவறினால் 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இன்று கல்யாண மண்டபத்திற்கான சொத்து வரி ரூ. 6.56 லட்சத்தை சென்னை மாநகராட்சியில் செலுத்தியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் வரி செலுத்தியதற்கான ரசிது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் தாமத கட்டணத்திற்கு அபராதம் 9386 ரூபாய் என்றும், சொத்து வரி ரூ. 646610 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கர்நாடகா வங்கிக்கிளையின் செக் மூலம் இந்த அபராதத் தொகையை கட்டியுள்ளார் ரஜினிகாந்த். தமிழ்நாட்டில் பல வங்கிகள் இருக்கும் போது ரஜினியின் கர்நாடகா பாசம் விடாமல் தொடர்கிறது என்று கமெண்ட் செய்கின்றனர் நெட்டிசன்கள்.

English summary
Actor Rajinikanth has paid Rs 6.56 lakh property tax after being warned by the Chennai corporation that he will be fined 2 per cent if he fails to pay the property tax by 12 noon tonight.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X