• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இதுதாங்க "தேதிகள்".. சரியா இருக்கும்.. இதுல வந்து ஆரம்பிங்க.. ரஜினிக்கு சிக்னல் கொடுத்த குருஜி!

|

சென்னை: ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்குவதற்கான உரிய தேதியை ஜோதிடர் ஆதித்யகுருஜி குறித்து தந்துள்ளாராம்.. இப்படி ஒரு செய்தி தற்போது கசிந்து வருகிறது.

வழக்கமாக கட்சி ஆரம்பிப்பவர்கள் யாராக இருந்தாலும், அதற்கான நாள், கிழமைகளை பார்த்துதான் உரிய முடிவை அறிவிப்பார்கள்.. தங்களுக்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ, பொதுவாழ்க்கை என்று வந்தபிறகு, இதுபோன்ற சம்பிரதாயங்களை பெரும்பாலான தலைவர்கள் பார்த்து வருகின்றனர்... இது திராவிட கட்சிகளிலும் உள்ள நடைமுறை ஆகும்.

Rajinikanth Politics: Astrologer Aditya Guruji says 3 days

திராவிட கட்சிகளுக்கே இப்படி என்றால், ஆன்மீன அரசியலை முன்னெடுக்க போகும் ரஜினி நிச்சயம், தன் கட்சி தொடங்குவதற்கான அனைத்து சாத்திய கூறுகளையும் ஆராய்ந்துதான் அறிவிப்பார் என்பதில் சந்தேகமில்லை.. அந்த வகையில் வரும் ஜனவரியில் கட்சியை ஆரம்பிக்க போவதாக அறிவித்துள்ளார்.. ஆனால் தேதி என்னவென்று தெரியவில்லை.

இந்நிலையில், கட்சி துவக்க தேதியினை அறிவிப்பதற்கு அல்லது அது சம்பந்தப்பட்ட கையெழுத்துகள் இடுவதற்கு ஏற்ற ஒரு மிகவும் நல்ல ஜோதிட நேரங்களை குறித்து தந்துள்ளார் ஜோதிடர் ஆதித்யகுருஜி. இவை ரஜினிகாந்தின் ஜாதகத்திற்கு மட்டுமேயான ஒரு தனிப்பட்ட நேரங்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதுபற்றி ஒரு நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் சொன்னதாவது:

"ஒரு அரசியல் கட்சி ஆரம்பிப்பது மக்களுக்கு சேவையாற்றுவதற்கு மற்றும் அந்த கட்சியின் தலைவர் மிகப்பெரிய அதிகார அமைப்பில் அமர்வதற்கானது... இதற்கு ஜோதிடப்படி பதவியை குறிக்கக்கூடிய பத்தாம் இடமும், சூரிய சந்திரர்களும் வலுவாக இருக்க வேண்டும்.

முதலாவதாக, தை 5, ஜனவரி மாதம் 18-ந் தேதி ,வளர்பிறை, திங்கட்கிழமை,சஷ்டி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம், மதியம் 12.50முதல் 1. 15 வரை கட்சி தொடங்குவதற்கு ஏற்ற நாளாக அமைகிறது. இதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அம்சம் என்னவெனில் அன்று தாராபலம் ரஜினிக்கு குறைவாக உள்ள சனியின் நட்சத்திரமாக உள்ளது. இருந்தாலும், பிறந்த ஜாதகத்தில் சனிபகவான் அவருக்கு கேதுவுடன் இணைந்து சூட்சுமவலுவாக எதையும் நன்றாக தரவல்ல அமைப்பில் இருப்பதால் இது விதிவிலக்குதான்.

குறிப்பிட்டுள்ள இந்த அரை மணி நேரம் மே‌ஷலக்னமாக அமைந்து, லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் சூரியன், புதன், சனி, குரு ஆகிய நான்கு கிரகங்கள் அமர்ந்து, அதில் சூரியன் திக்பலமாக நல்ல வலுவுடன் அமர்ந்திருக்கிறார்... ஒரு தொழிலில் ஜெயிக்க கூடிய மற்றும் அதிகார பதவியை தரக்கூடிய ஒன்பது, பத்துக்குடையவர்கள் இருவரும் பத்தாமிடத்தில் தர்மகர்மாதிபதி யோகத்தில் இணைய லக்னாதிபதி செவ்வாய் லக்னத்தில் அமர்ந்து இருப்பதால் இது சிறப்பான ஒன்று தான். சூரியனும் குருவை அஸ்தங்கப்படுத்தி அதிக சுபத்துவமாக இருக்கிறார்.

மதச்சார்பற்ற அரசியல் சரி.. அதுல எப்படிங்க ஆன்மீக அரசியல் சேரும்? ரஜினிகாந்த் மீது ஆ.ராசா பாய்ச்சல்

இரண்டாவதாக, தை 14, ஜனவரி 27-ந் தேதி, புதன்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி, புனர்பூசம் நட்சத்திரம், சித்தயோகம் கூடிய, மே‌ஷ லக்னம், காலை 11.10 முதல் 11.35 வரை அவருக்கு மிகவும் சிறப்பான தாரா பலம் உள்ள நாளாக இருக்கிறது. அன்றைய புனர்பூசம் குருவின் நட்சத்திரமாக வருவது ரஜினிக்கு மிகவும் சிறப்பான ஒன்று... இந்த நாளில் கட்சி ஆரம்பிக்கும் பொழுது, நான் மேலே சொன்ன பத்தாமிட தொடர்பும் நன்றாக அமைந்து, லக்னாதிபதி செவ்வாய் வலுவாக இருப்பதால் ரஜினிகாந்த் அவர்களின் எண்ணம் சிறப்பாக நிறைவேறும். சந்திரனும் இன்று பூரணத்தை நெருங்கும் நல்ல நிலையில் இருக்கிறார்.

மூன்றாவதாக, ஜனவரி 28, வியாழக்கிழமை, பூரண பவுர்ணமி நாளான அன்று தைப்பூச நன்னாளாகவும் அமைகிறது.... அன்றைய தினம், சந்திரனும், சூரியனும் கேந்திரங்களில் அமர்வார்கள். அந்த நாளும் ரஜினிக்கு தாராபலம் அமையாமல் சனியின் நட்சத்திரமான பூசமாக இருந்தாலும் பவுர்ணமி தினம் எதிலும் ஒரு விதிவிலக்கான நிறைவான நாள் என்பதால் வரும் ஜனவரி மாதம் 28-ந் தேதி மே‌ஷலக்னத்தில் கட்சி ஆரம்பிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார். ஆக, ஜனவரி மாதம் 18, ஜனவரி 27, ஜனவரி 28- ஆகிய 3தேதிகளை ஜோதிடர் குறித்து தந்துள்ளார்.

 
 
 
English summary
Rajinikanth Politics: Astrologer Aditya Guruji says 3 days
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X