சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னுடன் இருந்தால் சம்பாதிக்க முடியாது.. சில நிர்வாகிகள் என் பேச்சை மதிக்கவில்லை.. ரஜினி வேதனை

Google Oneindia Tamil News

சென்னை : அரசியலில் பதவிக்கு வந்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னுடன் இருக்க வேண்டாம், என்னுடன் இருந்தால் சம்பாதிக்க முடியாது. மக்களுக்காக உழைக்க வேண்டும். பலமுறை எச்சரித்தும் சில நிர்வாகிகள் என் பேச்சை மதிக்கவில்லை என்று வேதனை தெரிவித்தார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தனது 38 ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகிகளை அழைத்து இன்று நடிகர் ரஜினி காந்த் ஆலோசனை நடத்தினார்.

 Rajinikanth politics: Cant earn if you are with me, Some executives do not respect my speech, says Rajinikanth

அப்போது அரசியல் குறித்தும், அரசியல் வருகை குறித்தும் ஆலோசனை நடத்தினார். அத்துடன் மன்ற நிர்வாகிகள் சிலர் மீது தனக்கு உள்ள ஆதங்கத்தையும் கொட்டினார். தன்னை வைத்து சம்பாதிக்க நினைப்பவர்களையும் ரஜினிகாந்த் கடுமையாக எச்சரித்தார். அரசியல் வருகை குறித்து விரைவில் முடிவெடுக்க உள்ளதையும் பேச்சின் போது சுட்டிக்காட்டினார்.

தனது மக்கள் மன்ற நிர்வாகிகள் முன்பு ரஜினிகாந்த் பேசுகையில், அரசியலில் பதவிக்கு வந்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னுடன் இருக்க வேண்டாம், என்னுடன் இருந்தால் சம்பாதிக்க முடியாது. மக்களுக்காக உழைக்க வேண்டும். பலமுறை எச்சரித்தும் சில நிர்வாகிகள் என் பேச்சை மதிக்கவில்லை, மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி இல்லை

 Rajinikanth politics: Cant earn if you are with me, Some executives do not respect my speech, says Rajinikanth

தூத்துக்குடி சமூக விரோதிகள், யார் அந்த 7 பேர், பத்து பேரும் பலசாலியும்-சர்ச்சை நாயகனாக ரஜினிகாந்த் தூத்துக்குடி சமூக விரோதிகள், யார் அந்த 7 பேர், பத்து பேரும் பலசாலியும்-சர்ச்சை நாயகனாக ரஜினிகாந்த்

அரசியல் கட்சி தொடங்குவது பற்றி நான் முடிவு எடுக்கிறேன். அதுவரை பொறுத்திருங்கள். என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சிலர் செயல்படுகின்றனர்- அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. இன்னும் கடுமையாக உழைத்தால் மட்டுமே அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியும்" என்றார்.

English summary
Rajinikanth meeting with fans: "Can't earn if you are with me, Some executives do not respect my speech. I decide about starting a political party. Wait until then".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X