சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினி கட்டாயப்படுத்தப்படுகிறாரா? ஏன் அவருக்கு மட்டும் இப்படி நடக்கிறது.. பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினி அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று அறிவித்த பின்னரும் அவரை அரசியலுக்கு வர வற்புறுத்தி போராட்டம் நடத்தியது யார் என்ற கேள்வி எழுகிறது. இந்த போராடடத்தை ரசிகர்களே நடத்தினாலும் இதன் பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்ன காரணம் என்ற கேள்வியும் எழுகிறது,.

Recommended Video

    சென்னை: கஷ்டப்படுத்தாதீங்க… அரசியலுக்கு வரவே மாட்டேன்: ரசிகர்களுக்காக… மீண்டும் அறிக்கை விட்ட ரஜினி!

    ரஜினி இன்றைய அறிக்கையில், நான் இப்போது அரசியலுக்கு ஏன் வரவில்லை என்பதற்கு தெளிவான காரணங்களுடன் விளக்கிய பின்னரும் அரசியலுக்கு வருமாறு வற்புறுத்தி போராட்டம் நடத்துவது தன்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்குவதாக வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

    ரஜினியின் அறிக்கைப்படி பார்த்தால், அவர் பேச்சை மீறி, அவரது அனுமதியின்றி, அவரை கட்டாயப்படுத்தி அரசியலுக்கு வர வைக்க ரசிகர்கள் முயற்சிப்பது தெரிகிறது.

    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    ஆர்வத்தில் ரசிகர்கள் நேற்று வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தியதாக எடுத்துக்கொண்டாலும், அதை தன்னிச்சையாக நடக்கவில்லை என்பதாகவே குற்றம்சாட்டப்படுகிறது. அதை ஒருங்கிணைத்து, நடத்தியவர்கள் ரஜினிக்கு இந்த போராட்டம் மூலம் அரசியலுக்கு அவர் வந்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்த முயற்சிப்பதாகவும் பொதுவெளியில் குற்றம்சாட்டப்படுகிறது.

    ரசிகர்கள் பேட்டி

    ரசிகர்கள் பேட்டி

    ஏனெனில் உடல் நிலை சரியல்லாதததை சுட்டிக்காட்டி ரஜினி அரசியலுக்கு வர விரும்பவில்லை என்று விளக்கமாக சொன்ன பின்னர், ரசிகர்கள் பலர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ரஜினியின் முடிவை முழுமையாக ஏற்கிறோம். அவரது சொல்லே வேதவாக்கு என்றார்கள். ரஜினியின் உடல் நிலைதான் எங்களுக்கு முக்கியம் என்றார்கள்.

    ரஜினி அறிக்கை

    ரஜினி அறிக்கை

    ஆனால் அப்படி சொன்னவர்கள் இன்று எந்த நம்பிக்கையில், எந்த அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பதை ரஜினி மக்கள் மன்றமும், ரஜினியும் கண்டுபிடிக்க விசாரணை நடத்த வேண்டும். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை செய்வேன் என்று ரஜினி முன்பு வெளியட்டிருந்த அறிக்கையில் கூறியிருந்தார். அதன்படி அவரை செயல்பட விடுவது தான் ரசிகர்களுக்கும் அழகு.

    ரஜினி கண்டுபிடிக்க வேண்டும்

    ரஜினி கண்டுபிடிக்க வேண்டும்

    மக்கள் எழுச்சியை பார்த்து தலைவர் தானாக அரசியக்கு வருவார் என்ற நம்பிக்கையில் நேற்றைய போராட்டத்தை ரசிகர்கள் நடத்தினார்களா? அல்லது ரஜினியை வைத்து அரசியல் செய்து லாபம் பார்க்க நினைப்பவர்கள், ரசிகர்களை தூண்டிவிட்டு இந்த போராட்டத்தை நடததினார்களா? என்பதை ரஜினியே விசாரித்து சொன்னால் தான் உண்மை என்ன என்பது தெரியவரும்.

    English summary
    Even after Rajini announced that he was not going to enter politics, the question arises as why fans demand to him to enter politics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X