சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி, ஸ்டாலினுக்கு அன்றே பாராட்டு.. கமலுக்கு மட்டும் 5 நாள் கழித்தா?.. என்னா தலைவா இது!

Google Oneindia Tamil News

Recommended Video

    யாரையும் பகைச்சுக்காம நாகரீகமாக ரஜினி பேட்டி-வீடியோ

    சென்னை: பிரதமர் மோடி, திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றிக்கே வாக்கு எண்ணிக்கை நாளிலேயே வாழ்த்து கூறிய ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு மட்டும் 5 நாள் கழித்து வாழ்த்து கூறியுள்ளார்.

    நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் புதிதாக ஆரம்பான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 20 தொகுதிகளில் 3-ஆவது இடத்தை பிடித்தது. இந்த கட்சி மொத்தமாக தமிழகத்தில் வாங்கிய வாக்குகள் 16 லட்சமாகும். இது பெரும் சாதனையாகும்.

    இதனால் கமல்ஹாசனை அனைவரும் பாராட்டி வருகின்றனர். தேசிய கட்சியான பாஜகவே தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவிக்கும் நிலையில் பிறந்து 14 மாதங்களே ஆன ஒரு கட்சி இத்தகைய வெற்றி பெற்றது பாராட்டத்தக்கதாகும்.

    யாரையும் பகைச்சுக்காம 'நாகரீகமாக' பேட்டி... 'அடடே' ரஜினிகாந்த் ஆட்டம் தொடக்கம்? யாரையும் பகைச்சுக்காம 'நாகரீகமாக' பேட்டி... 'அடடே' ரஜினிகாந்த் ஆட்டம் தொடக்கம்?

    நண்பர்கள்

    நண்பர்கள்

    ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் நண்பர்களாக உள்ளனர். கமல்ஹாசன் புதிதாக கட்சி தொடங்கிய போது அவரை ரஜினிகாந்த் பாராட்டி வரவேற்றார். அதுபோல் கட்சி தொடங்கப்பட்டு 2-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்த போதும் ரஜினி டுவிட்டரில் பாராட்டியிருந்தார்.

    பாராட்டு

    பாராட்டு

    இதுகுறித்து ரஜினி தனது டுவிட்டரில் கூறுகையில் கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தேர்தலில் முதல்முறையாக போட்டி இடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர் என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள், பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

    ரசிகர்கள் அதிருப்தி

    ரசிகர்கள் அதிருப்தி

    இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிந்த போது மோடியை ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் பாராட்டியிருந்தார். அதுபோல் தமிழகத்தில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த திமுக தலைவர் ஸ்டாலினையும் பாராட்டி வாழ்த்தியிருந்தார். ஆனால் 20 தொகுதிகளில் 3-ஆவது இடம் வகித்த கமல்ஹாசனின் கட்சி குறித்து ரஜினி வாய்திறக்கவில்லை. இது கமல் ரசிகர்களையும் நடுநிலையாளர்களையும் அதிருப்திக்குள்ளாக்கியது.

    ரஜினி பாராட்டு

    ரஜினி பாராட்டு

    இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் மக்களவை தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்ற மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனுக்கு பாராட்டுகள் என்று கூறியிருந்தார்.

    English summary
    Rajinikanth praises Kamal Haasan for getting more votes in Loksabha elections. Kamal's MNM comes to third place in 20 LS constituencies.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X