சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போனால் போகட்டும் போடா- இது யாருடைய ஆல் டைம் ஃபேவரைட் தெரியுமா

Google Oneindia Tamil News

சென்னை: போனால் போகட்டும் போடா என்ற பாடலைதான் இன்று வரை ரஜினிகாந்த் ஆல் டைம் பேவரைட்டாக கேட்டுக் கொண்டு வருகிறாராம்.

ஜீ தமிழ் தொலைகாட்சியில் தீபாவளி பண்டிகையையொட்டி ரோபோ 2.0 குறித்து சிறப்பு பேட்டியை ரஜினி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் எந்திரனும், எந்திரன் 2.0வும் ஒன்றல்ல. ரோபோவிலிருந்து சிட்டி, வசீகரன் ஆகிய கேரக்டர்கள் மட்டுமே எடுக்கப்பட்டன.

மத்தபடி இரு படங்களுக்கும் தொடர்பே இல்லை. ரோபோ படத்தில் 4 கேரக்டர்களை சுற்றியே படம் நகரும். ஆனால் இந்த 2.0 படத்தில் இந்த நேரத்துக்கு உரிய ஒரு கருத்தை திரைப்படம் வாயிலாக கொடுத்துள்ளேம். திரைக்கதை குறித்து நான் எதையும் கூறக் கூடாது.

இந்த படத்தில் பாடல்களே வேண்டாம் என ஷங்கர் முடிவு செய்தார். அதன் பிறகு டைட்டில் சாங் தேவை என்றார்கள். பின்னர் பேக் கிரவுன்ட் பாடல் வேண்டும் என்றார்கள். அப்போதுதான் படத்தில் இரண்டே பாடல்கள் மட்டும் இருந்தால் அது நன்றாக இருக்காதே என ரஹ்மான் தெரிவித்தார். இதையடுத்துதான் இந்திர லோகத்துக்கு சுந்தரி பாடலை இணைந்தோம். இப்படியே 4 பாடலாகிவிட்டது. ஆல்பமாகவும் மாறிவிட்டது.

வாழ்க்கை

வாழ்க்கை

விசுவல் எபெக்ட்ஸை மேம்படுத்த மியூசிக் தேவை என்பதால் ரஹ்மான் முதல் படம் போல் பணியாற்றினார். நான் தனிமையில் இருக்கும்போது என்னடா நடக்கும் நடக்கட்டுமே பாடலை கேட்பேன்.சிறிய வயதிலிருந்து நான் அந்த பாடலை கேட்டு வருகிறேன். தமிழ் தெரியாத போது கூட தமிழ் நண்பரிடம் அர்த்தம் கேட்டு கொண்டு அந்த பாடலில் இன்னும் பிட் ஆகிவிட்டேன். அதுதானே வாழ்க்கை.

பணம்

பணம்

மவுண்ட் ரோடில் முதல் முறையாக எனக்கு கட்அவுட் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கனவு இருந்தது. அது நிஜமானதும் சந்தோஷமே இல்லை. கனவில் இருக்கும் சந்தோஷம் அது நடக்கும் போது இல்லை. அது எல்லாவற்றிலும், கல்யாணத்தையும் சேர்த்துதான் சொல்கிறேன். பெயர், புகழ், பணம் எல்லாம் மாயை.

செட் ஆவது

செட் ஆவது

ரோபோவில் முதல் முறையாக ரோபோ மேக்கப் போடும் போது மிகவும் சிரமமாக இருந்தது. சிட்டி கேரக்டரை செய்வதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன். கொஞ்சம் ஓவராக நடித்தால் அதில் மனிதன் நடிப்பது போல் இருக்கிறது. கொஞ்சம் குறையுங்கள் என்பார் ஷங்கர். மெக்கானிக்கலாக இருந்தாலும் ஷங்கர் பேலன்ஸ் செய்து கூறுவார். இப்படியே எங்களுக்கு செட் ஆவதற்கு சில காலம் ஆனது. ஆனால் ரோபோ 2.0-வில் பிரச்சினை இல்லை.

தயாரித்து தூள்

தயாரித்து தூள்

அதில் முக்கியமான கேரக்டர் உள்ளது. என்னை காட்டிலும் அக்ஷய் குமாருக்குதான் கொஞ்சம் கடினமாக இருந்திருக்கும். என்னை ஷங்கர் பென்ட் எடுத்துவிட்டார். ரோபோவில் என்னுடைய ஸ்டைலுக்கு காரணம் ஷங்கர்தான். என்னை விட ஷங்கர்
நன்றாக நடித்து காட்டினார். அவரும் ஹீரோ கனவில்தான் வந்தார். ஆனால் எங்கள் நல்ல நேரம் அவர் ஹீரோவாகவில்லை.ஆகியிருந்தால் அவரே படம் எடுத்து நடித்து இயக்கி தயாரித்து தூள் கிளப்பியிருப்பார்.

பிளஸ் பாயிண்ட்

பிளஸ் பாயிண்ட்

ஸ்டைலை நானாக செய்யவில்லை. இதுவரை யாரும் ஸ்டைல் செய்து நடிக்கவில்லை என பாலசந்தர் கூறியதால் அதை அப்படியே தொடர்ந்து தக்க வைத்து கொண்டேன். என்னுடைய பிளஸ் பாயிண்டே ஸ்பீட்தான், இதை அப்படியே மெயின்டைன் செய் என்றார்.

மறக்க முடியாது

மறக்க முடியாது

மன்னன் படத்தில் சின்னத்தம்பி படத்துக்கு டிக்கெட் எடுத்தது போல் அனுபவம் எனக்கு உண்டு. ராஜ்குமார் படத்தை பார்த்தது சரி, உன்னால எம்ஜிஆர் படத்துக்கு டிக்கெட் எடுத்து பார்க்க முடியுமா என நண்பர்கள் கேட்டார்கள். சினிமா தியேட்டருக்கு போனேன். வெறும் 44 டிக்கெட்டுகளுக்கு 200 பேர் நிற்பார்கள். அப்போது நம் மீது தண்ணீர் எடுத்து ஊற்றுவார்கள். அந்த தருணத்தில் டிக்கெட் எடுத்து பார்த்ததை என்னால் மறக்க முடியாது.

தலைவா

தலைவா

குழந்தைகளுக்கு எதிராக பாலியல் தொந்தரவு கொடுப்பவர்களை நடுரோட்டில் நிற்க வைத்து சுட்டுக் கொல்ல வேண்டும். ஒரு நாள் மாறுவேடம் போட்டுக் கொண்டு வெளியே சென்றிருந்தேன். அப்போது திடீரென தலைவா என்ற ஒரு குரல் வந்தது. அப்போது நான் ஆடிபோய்ட்டேன். கார் எங்கேயோ கிடக்கிறது. ஆட்டோ வருமா இல்லை யாராவது நமக்கு உதவி செய்வார்களா என பார்த்தேன். அதன் பின்னர் அந்த சப்தம் அடங்கிவிட்டது. அப்புறம் தான் தெரிந்தது, அவர் தலைவா என என்னை பார்த்து கூப்பிடவில்லை என்றார்.

English summary
Rajinikanth's favorite song is Ponal pogattum poda. He said this in Deepavali special interview.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X