சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூத்துக்குடி டூ சொத்து வரி வரை.. பாடம் கற்றுக் கொண்டே இருக்கும் ரஜினி.. ஆனால் "அதுக்கு" உதவுமா?

Google Oneindia Tamil News

சென்னை: தூத்துக்குடி பிரச்சனை தொடங்கி, அரசியல் கட்சி தொடங்குவதில் தாமதம் உள்பட, சொத்துவரி விவகாரம் வரை ரஜினியின் பல்வேறு நடவடிக்கைகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. இதெல்லாம் அவரது அரசியலுக்கு உதவுமா என்றால் நிச்சயம் கேள்விக்குறிதான்..

புகழின் உச்சியில் உள்ள நடிகர் ரஜினியின் ஒவ்வொரு செயலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அவருக்கு ஏற்படும் ஒவ்வொரு அனுபவங்களும் இப்போது மக்களின் பார்வைக்கு வந்தபடி உள்ளது. அதில் சில விமர்னங்களை சந்திக்கின்றன.

நடிகராக, திரைத்துறையில் சூப்பர் ஸ்டாராக ரஜினியை 60 வயது ஆனவர்களும் சரி, நேற்று பிறந்த குழந்தையும் கொண்டாடி மகிழ்கிறது. இன்றைக்கும் மரண மாஸ் போட்டால் பக்கத்துவிட்டு குட்டிக் குழந்தைகள் துள்ளிகுத்து மகிழ்வதை பார்க்கும் போது ரஜினியை எந்த அளவிற்கு ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் ரசிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

சூர்யா அன்னைக்கு சொன்னாரே.. அது இதுதான்.. ரஜினி என்ன தப்பு செஞ்சுட்டார்.. பொங்கி குமுறும் ரசிகர்கள்சூர்யா அன்னைக்கு சொன்னாரே.. அது இதுதான்.. ரஜினி என்ன தப்பு செஞ்சுட்டார்.. பொங்கி குமுறும் ரசிகர்கள்

கொண்டாடப்படும் நடிகர்

கொண்டாடப்படும் நடிகர்

திரையுலகினராலும் பொதுமக்களாலும் பெரிய அளவில் கொண்டாடப்படும் ரஜினி காந்த், அரசியல், சமூக நலம் சார்ந்த விஷயங்களில் வெளிப்படுத்திய கருத்துக்கள் பல நேரங்களில் சர்ச்சையாகி உள்ளன. சில விஷயங்கள் சர்ச்சையாக்கவும் பட்டுள்ளன. ரஜினி என்ற ஒற்றைக்காரணத்திற்காக மிகைப்படுத்தும் சம்பவங்களும் நடந்துள்ளன,

முஸ்லீம்கள் கருத்து

முஸ்லீம்கள் கருத்து

இதேபோல் ரஜினி சிஏஏ குறித்து பேசும் போது ‘முஸ்லிம்களுக்கு இந்த சிஏஏ சட்டம் மூலம் பெரிய அச்சுறுத்தல் இருக்கிறதா பீதி கிளப்பிட்டாங்க. அது தவறு' என்று பேசினார். அப்போதும் அவர் கடுமையான விமர்சிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் முஸ்லிம் அமைப்பினரை தனியாக அழைத்து விளக்கம் அளித்தார்.

அரசியல் கட்சி ஆரம்பம்

அரசியல் கட்சி ஆரம்பம்

அரசியலுக்கு வரும் விவவகாரத்தை எடுத்துக்கொண்டால், தனி கட்சி ஆரம்பித்து, 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று 2017 இறுதியில் தெரிவித்த ரஜினி, அதன்பிறகு அமைதியாக இருந்தார். 3 ஆண்டுகளுக்கு பிறகு பேசிய ரஜினி, மக்களிடம் எழுச்சி ஏற்பட்டால் தான் அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்தார். இந்த கருத்தும் சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளானது.

கடைசியாக வரும்

கடைசியாக வரும்

இதேபோல் எந்த ஒரு சமுக பிரச்சனையாக இருந்தாலும் சரி, மரணங்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாக இருந்தாலும் மிகவும் தாமதமாகவே ரஜினி கருத்து தெரிவித்து வருகிறார். இறுதியாக ஜெயராஜ் பென்னிக்ஸ் விவகாரத்தில் நீண்ட நாளுக்கு பிறகே ஆறுதல் தெரிவித்தார். ஹத்ராஸ் விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கவே இல்லை. ரஜினி எல்லா விவகாரத்திலும் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், அரசியலுக்கு வர விரும்பும் ரஜினி மக்கள் பிரச்சனைகளில் என்ன நிலைப்பாடை எடுக்கிறார் என்பதை உன்னிப்பாக கவனிக்கிறார்கள். இதுதான் சிக்கலுக்கு காரணம்.

ரஜினி செய்தது தவறா

ரஜினி செய்தது தவறா

இறுதியாக ராகவேந்திரா மண்டபத்திற்கு வரி தள்ளுபடி கேட்ட விவாகரத்திலும் ரஜினியின் செயல் தவறல்ல. ஆனால் அவர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவகாசம் கொடுத்துவிட்டு அவர்களின் பதிலை கேட்டுவிட்டு வழக்கு தொடர்ந்து இருந்தால் இந்த அளவுக்க பிரச்சனையே வந்திருக்காது. ஒட்டுமொத்தமாக ரஜினி இன்றைக்கு போட்ட ட்விட் படி பார்த்தால் அனுபவமே நல்ல பாடம் தான். ஆனால் ரஜினியின் அரசியல் வளர்ச்சிக்கு மேற்கண்ட சம்பவங்கள் உதவாது என்பதே கசப்பான உண்மை.

ரசிகர்கள் வைத்த கோரிக்கை

ரசிகர்கள் வைத்த கோரிக்கை

ரஜினி இப்போது கடுமையாக விமர்சிக்கப்பட காரணம் அவர் மீது மக்கள் வைத்துள்ள அன்பும், நம்பிகையும் தான். புகழ்பெற்ற நடிகரான ரஜினி செய்யும் ஒவ்வொரு செயலும் தங்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று பார்க்கிறார்கள். எனவே ரஜினி திடமான முடிவு எடுத்து அவருடைய அரசியல் நிலைப்பாட்டை அறிவித்து செயல்பட வேண்டும், என ரசிகர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

English summary
Rajinikanth's various lesson, from the Thoothukudi issue to the property tax issue, including the delay in starting a political party, have come under heavy criticism. It is questionable whether all this will help his politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X